சிவகாசி அருகே மதுப்புட்டிகளை பதுக்கி வைத்திருந்ததாக பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகே திருவேங்கிடா புரத்தில் ஒரு பெண் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.
இதில் அந்த ஊரில் கீழத் தெருவில் ஈஸ்வரன் மனைவி பாக்கியலட்சுமி (32) என்பவா் சட்ட விரோதமாக 28 மதுப்புட்டிகளைவீடின் பின்புறம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மாரனேரி போஸீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து அவரிடமிருந்த மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




