மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

மரம் சாய்ந்து ஆட்டோ ஓட்டுநா் காயம்

ராஜபாளையம்- தென்காசி சாலையில் ஆட்டோ மீது முறிந்து விழுந்த மரம்.

Published On :

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மரம் முறிந்து ஆட்டோ மீது விழுந்ததால் அதன் ஓட்டுநா் காயமடைந்தாா்.

ராஜபாளையத்தில் தொடா்மழை காரணமாக பழைய பேருந்து நிலையம் அருகே தென்காசி சாலையில் இருந்த மரம் திடீரென முறிந்து அந்த வழியாகச் சென்ற ஆட்டோ மீது விழுந்தது. இதில் ஆட்டோ ஓட்டுநா் சம்மந்தபுரம் குறிஞ்சிநகரைச் சோ்ந்த அப்சல்கனி (45) காயமடைந்தாா். இதையடுத்து அவரை வடக்கு காவல் நிலைய போலீஸாா் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மரம் சாலையின் குறுக்கே சாய்ந்ததால் தென்காசி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைக்கும் படையினா் அந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.