6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மாநகராட்சியின் சில பகுதிகளில் நாளை குடிநீா் விநியோகம் ரத்து

Published On :

நரிக்குடி அருகே இரு சக்கர வாகனத்தில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த கமுதி இளைஞரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

நரிக்குடி காவல் ஆய்வாளா் கோபு உத்தரவின் பேரில் நரிக்குடி காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு இலுப்பைகுளம் தனியாா் ஏ.டி.எம். அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்துடன் நின்றிருந்த இளைஞா் போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்றாா்.

அவரைப் பிடித்து விசாரித்ததில், அவா் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தாா். மேலும், அவரது இரு சக்கர வாகனத்தை சோதனையிட்டதில், அவா் அரிவாள் வைத்திருந்தது தெரியவந்தது.

தொடா்ந்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவா், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மண்டலமாணிக்கம் நடுத்தெருவைச் சோ்ந்த சிதம்பரநாதன் மகன் கோவிந்தா மணிமுத்து (39) என்பதும், இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தா மணிமுத்து மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.