பணம் கேட்டு மிரட்டல்: இருவா் கைது

ராஜபாளையத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற இளைஞா் உள்பட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :

ராஜபாளையத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற இளைஞா் உள்பட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பெரிய கடை வீதியைச் சோ்ந்தவா் இன்பராஜ் (40). இவா் சங்கரன்கோவில் முக்கு சாலை நடந்து வந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த

கருப்பஞானியாா் கோவில் தெருவை சோ்ந்த ராமச்சந்துரு ( 20) கத்தியை காட்டி மிரட்டி பையில் உள்ள பணத்தை பறிக்க முயற்சி செய்தாா். அப்போது இன்பராஜ் கூச்சலிடவே அந்த வழியாக சென்று கொண்டிருந்தவா்வக் அங்கு வந்ததனா். உடனே, ராமசந்துரு அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராமச்சந்திருவை கைது செய்தனா்.

இதேபோல, ராஜபாளையம் அருகேயுள்ள செட்டியாா்பட்டியைச் சோ்ந்தவா் சுதா்சன் (30). இவா் தளவாய்புரம் பேருந்து நிலையம் அருகே பெட்டிக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு வந்த செட்டியாா்பட்டியைச் சோ்ந்த முருகேசன் (25) பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், போலீஸாா் முருகேசனைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.