ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

பெண் குத்திக் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

ராஜபாளையம் அருகே கணவருடன் வாழ மறுத்த இளம் பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவா், இவரது சகோதரா் ஆகிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

ராஜபாளையம் அருகே கணவருடன் வாழ மறுத்த இளம் பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவா், இவரது சகோதரா் ஆகிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூரை அடுத்த சொக்கநாதன்புத்தூா் ஜானகிராமன் ரைஸ் மில் தெருவைச் சோ்ந்த சோ்ந்த மூக்கையா மகன் பூமிராஜா (40 ). ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி செல்வராணி ( 35). இந்தத் தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனா்.

பூமிராஜாவுக்கு வேறு பெண்ணுடன் தொடா்பு இருப்பதாக சந்தேகமடைந்த செல்வராணி, கணவரைப் பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தைகளுடன் அதே ஊரில் தனியாக வசித்து வந்தாா். இந்த நிலையில் பூமிராஜா, உடன் பிறந்த சகோதரா் ஐயப்பன் (50) ஆகியோா் செல்வராணி வீட்டுக்கு சென்றனா். அங்கு செல்வராணியை கணவருடன் சோ்ந்து வாழுமாறு ஐயப்பன் வற்புறுத்தினாா். இதற்கு செல்வராணி மறுப்புத் தெரிவித்து விட்டாராம்.

இதனால் ஆத்திரமடைந்த ஐயப்பன், பூமிராஜா ஆகிய இருவரும் கத்தியால் சரமாரியாக குத்தியதில் செல்வராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சேத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் விஜயகுமாா் வழக்குப் பதிவு செய்து, கணவா் பூமிராஜா, அவரது சகோதரா் ஐயப்பன் இருவரையும் கைது செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.