சமூக வலைத்தளங்களில் குவிஸ் (வினாடி-வினா) என்ற பெயரில் வரும் லிங்குகள் மூலம் செல்போன்களுக்கு ஆபத்தான வைரஸ்கள் பரவிவருகின்றன.
மால்வேர், சைபர் மோசடிகள் என செல்போன் மூலமாக தகவல்களை அல்லது பணத்தைத் திருடும் கும்பல்களின் கைவரிசை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதானிருக்கிறது.
எத்தனைக்கு எத்தனை எச்சரிக்கை தகவல்கள் மக்களைச் சென்றடைகிறதோ, அதனைவிட அதிகமான சைபர் மோசடி கும்பல்களின் கைவரிசையும் நீண்டுகொண்டேதானிருக்கின்றன.
அண்மையில் குவிஸ் என்ற பெயரில் ஒரு மால்வேர் பரவியிருக்கிறது. இதுபற்றி இணையத்தில் தேடியபோது, அனுமதி (Allow) என்று ஒரு சிங்கிள் கிளிக் செய்யும் வகையில் பயனர்களை ஏமாற்றும் குவிஸ் வலைத்தளங்கள் குறித்து புகார்கள் வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அந்தத் தளம் ஒரு சாதாரண குவிஸ் (வினாடி-வினா) இணையதளம் அல்லது செயலி போலத் தோன்றலாம், ஆனால் அந்த லிங்கை கிளிக் செய்துவிட்டால் செல்போன் ஹேக் ஆகலாம், சைபர் மோசடி அல்லது தேவையற்ற பதிவிறக்கங்களை செய்யும் அபாயங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தானாகவே ஏபிகே (APK)- கோப்பு ஒன்று பதிவிறக்கம் ஆகும் ஆபத்தான இணைப்புகளும் இதில் அடங்கும். இந்த ஏபிகே கோப்புகள் மூலம் செல்போனில் இருக்கும் முக்கியமான தகவல்கள், வங்கிச் செயலிகளுக்குள் ஊடுருவி மோசடிகள் நடக்கவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே அதைக் கிளிக் செய்திருந்தால் என்ன செய்வது?
உடனடியாக செல்போனில் இன்டர்நெட் இணைப்பைத் துண்டித்து ஏர்பிளேன் மோடுக்கு மாற்ற வேண்டும்.
உடனடியாக செல்போனில் எந்த பணப்பரிமாற்ற அல்லது வங்கி செயலிகளையும் திறந்து பணம் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டாம்.
உங்கள் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று தகவல் வந்தாலும்கூட உடனடியாக வங்கிச் செயலிகளைப் பார்க்க வேண்டாம்.
செல்போனில் தேவையற்ற செயலிகள் ஏதேனும் பதிவிறக்கம் ஆகியிருக்கிறதா எனப் பார்க்கவும்.
ஆன்டிராய்டு போனாக இருந்தால் பிளே ஸ்டோர் சென்று புரொபைல் பிக்சரை கிளிக் செய்து பிளே புரொடெக்ட் என்ற வாய்ப்பில், ஸ்கேன் என்பதை கிளிக் செய்யவும். அதில் வைரஸ் ஏதேனும் இருந்தால் ஸ்கேன் செய்து சொல்லும், அதனை நீக்கலாம்.
தற்போது சமூக வலைத்தளங்களில் பல லிங்குகள் பரவி வருகிறது. அதனை கிளிக் செய்துவிட்டால் ஒட்டுமொத்த செல்போனும் ஹேக் செய்யப்படுகிறதாம். குவிஸ் என்ற அடையாளத்துடன் வந்த லிங்குகளை கிளிக் செய்த சிலரது செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவ்வாறு எந்த வெளி லிங்குகளையும் சமூக வலைத்தளத்தில் கிளிக் செய்ய வேண்டாம் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், தற்போதைய தொழில்நுட்பத்தில், அவ்வளவு எளிதாக செய்ய முடியாது என்றே தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகிறார்கள. ஒவ்வொரு செல்போனிலும் செக்யூரிட்டி அப்டேட்கள் வந்து கொண்டிருக்கும். அவை நிச்சயம் இதுபோன்ற ஏதேனும் மோசமான பதிவிறக்கங்கள் செல்போனில் நேரிடும்போது எச்சரிக்கும். எனவே, செக்யூரிட்டி அப்டேட்களை அவ்வப்போது பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
Summary
Quiz links spreading on social media! What happens if you click on them?
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுக பெண் நிா்வாகிகள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு: காவல் துறை நடவடிக்கை எடுக்க சி.வி.சண்முகம் கோரிக்கை

ரூ. 100 கோடி கொடுத்தாலும் இனி இதைச் செய்ய மாட்டேன்: ஐஸ்வர்யா லட்சுமி

பதின் வயதினர் இரவு நேரத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் பிரிட்டன்!

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!
விடியோக்கள்

காவிரி பிரச்னையை திசைதிருப்பவா Delimitation? - அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி



