தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா தங்க நகைகளில் கலப்படம்! கண்டுபிடிக்க முடியாத ரேனியம் உலோகம்! ஹால்மார்க் முத்திரையும் வீணா? கண்டுபிடிப்பது எப்படி?செனா நாடுகளில் சதம் அடித்த இந்தியராக கே.எல். ராகுல் வரலாற்றுச் சாதனைபெரிய பட்டியலிடப்பட்ட பங்குச் சந்தைகளில் இந்தியா 5-ஆவது இடம்!இளையராஜா, கமல்ஹாசனுக்கு தாதா சாகேப் பால்கே விருதுகள் அறிவிப்பு

வருகிறது 2027! சுற்றுலாவுக்கு இப்போதே திட்டமிடலாமா? விடுமுறைப் பட்டியல் இதோ!!

வரவிருக்கும் 2027ம் ஆண்டில் மேற்கொள்ளும் சுற்றுலாவுக்கு இப்போதே திட்டமிடுவது பற்றி...

28/04/2026 Thiruvananthapuram: Stand alone photo: Under the relentless glare of a scorching summer noon, a local fruit vendor approaches a foreign tou

கடற்கரை - பிரதி படம் - ENS

Updated On :

2027ஆம் ஆண்டு அரசு விடுமுறை நாள்கள் குறித்த பட்டியல் ஏற்கனவே வெளியாகிவிட்டது. அதைவைத்து, வெளியூர் அல்லது வெளி மாநிலத்துக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுவோருக்கான ஒரு சில யோசனைகள் மட்டும்.

பொதுவாக ஒரு சுற்றுலாவை திட்டமிடுவது அவ்வளவு எளிதல்ல. எனவே, அடுத்த ஆண்டு தொடர்ச்சியான விடுமுறை நாள்களைக் கணக்கில் கொண்டு அதற்கேற்ப திட்டமிட்டு முன்கூட்டியே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஆங்கிலப் புத்தாண்டு - 01.01.2027 - வெள்ளிக்கிழமை

ஜனவரி ஒன்றாம் தேதி 2027ஆம் ஆண்டில் வெள்ளிக்கிழமை வருகிறது. எனவே, வெள்ளிக்கிழமையோடு சேர்த்து சனி, ஞாயிறு என தொடர்ச்சியாக மூன்று நாள்கள் விடுமுறை வரும்.

பொங்கல் - 15.01.2027 - வெள்ளிக்கிழமை

அதுபோல பொங்கல் பண்டிகையும் வெள்ளிக்கிழமை என்பதால் தொடர்ச்சியாக மூன்று நாள்கள் விடுமுறை. முன்கூட்டியோ அல்லது அடுத்த நாள்களிலோ ஒரு நாள் கூடுதலாக விடுமுறை எடுத்தும் சுற்றுலா செல்லலாம்.

தைப்பூசம் - 22.01.2027 - வெள்ளிக்கிழமை மற்றும் குடியரசு நாள் - 26.01.2027 - செவ்வாய்க்கிழமை வருகிறது. இதனை ஒட்டி ஒன்று அல்லது இரண்டு நாள்கள் விடுமுறை எடுத்தால் மிகப்பெரிய சுற்றுலாவுக்கு திட்டமிடலாம்.

மார்ச் 22ஆம் தேதி திங்கள்கிழமை ஹோலிப் பண்டிகையும் புனித வெள்ளி - 26.03.2027 - வெள்ளிக்கிழமையும் வருவதால் இடையே மூன்று நாள்கள் விடுமுறை எடுத்துக் கொண்டால் மிகச் சிறந்த விடுமுறைக் கொண்டாட்டமாக இருக்கும்.

இது முதல் மூன்று மாதங்களுக்கான திட்டமிடல்தான்.

ஏப்ரல் மாதம் முதல் விடுமுறை நாள்கள் பட்டியல் இதோ

தெலுங்கு வருடப் பிறப்பு - 07.04.2027 - புதன்கிழமை

தமிழ்ப் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த நாள் - 14.04.2027 - புதன்கிழமை

மகாவீரர் ஜெயந்தி - 19.04.2027 - திங்கட்கிழமை

மே நாள் - 01.05.2027 - சனிக்கிழமை

பக்ரீத் - 17.05.2027 - திங்கட்கிழமை

மொகரம் - 15.06.2027 - செவ்வாய்க்கிழமை

சுதந்திர நாள் / மிலாதுன் நபி - 15.08.2027 - ஞாயிற்றுக்கிழமை

கிருஷ்ண ஜெயந்தி - 25.08.2027 - புதன்கிழமை

விநாயகர் சதுர்த்தி - 04.09.2027 - சனிக் கிழமை

காந்தி ஜெயந்தி - 02.10.2027 - சனிக் கிழமை

ஆயுத பூஜை - 08.10.2027 - வெள்ளிக்கிழமை

விஜயதசமி - 09.10.2027 - சனிக்கிழமை

தீபாவளி - 28.10.2027 - வியாழக்கிழமை

கிருஸ்துமஸ் - 25.12.2027 - சனிக்கிழமை

Summary

2027 is coming! Shall we start planning next year's trips now? Here is the list of holidays!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.