தேர்தல் ஆணையம் நோக்கி சென்ற எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்! சாலையில் அமர்ந்து தர்னா!கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்! ‘முதுகில் குத்தும் தவெக அரசுக்கு செவிலியர்கள்தான் இரையா?’ - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்தங்கம் சவரனுக்கு ரூ. 120 குறைவுசெவிலியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்மதுராந்தகம்: வாக்குச்சாவடியில் இயந்திரத்தில் பழுது - வாக்குப்பதிவு நிறுத்தம்

சைபர் மோசடி! புகார்களை பதிவு செய்ய தேவையான தகவல்கள் என்ன?

சைபர் மோசடிக்கு உள்ளானவர்களை புகார்களை பதிவு செய்ய தேவையான தகவல்கள் என்ன?

மோசடி - கோப்புப்படம்.

Published On :

சைபர் மோசடி குறித்து மக்களுக்கு பல்வேறு புரிதல்களை காவல்துறையும், வங்கிகள் தரப்பிலும் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், மோசடி கும்பல்கள் நாள்தோறும் புதிய புதிய முறைகளில் மோசடிகளை அரங்கேற்றி வருகின்றன.

எவ்வளவு விழிப்புணர்வுடன் இருந்தும் ஒருவேளை, சைபர் மோசடிக்கு உள்ளாக நேரிட்டால் அதுதொடர்பாக சைபர் குற்றப் பிரிவில் புகாரைப் பதிவு செய்வதற்கு முன் பின்வரும் தகவல்களைத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

இது குறித்து தேசிய சைபர் குற்றவியல் பிரிவு வெளியிட்டிருக்கும் தகவலில்,

அவசியம் வைத்திருக்க வேண்டிய தகவல்கள்

1. சம்பவம் நடந்த தேதி மற்றும் நேரம்.

2. சம்பவத்தின் விவரங்கள் (குறைந்தது 200 எழுத்துகள் இருக்க வேண்டும்; இந்த தகவலில் அன்ட், நட்சத்திரம் போன்ற சிறப்புக் குறியீடுகள் இருக்கக்கூடாது).

3. புகார்தாரரின் ஏதேனும் ஒரு தேசிய அடையாள அட்டையின் (வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, பான் அட்டை, ஆதார் அட்டை) மின்னணு நகல் (.jpeg, .jpg, .png வடிவத்தில்; கோப்பின் அளவு 5 MB-க்கு மிகாமல் இருக்க வேண்டும்).

குறிப்பாக நிதி மோசடி தொடர்பான புகாராக இருந்தால், பின்வரும் தகவல்களைத் தயாராக வைத்திருக்கவும்:

1) வங்கி / பணப்பை (Wallet) / வணிகர் (Merchant) பெயர்

2) 12 இலக்க பரிவர்த்தனை எண் (Transaction ID) / UTR எண்

3) பரிவர்த்தனை நடந்த தேதி

4) மோசடி செய்யப்பட்ட தொகை

5. இணையக் குற்றம் தொடர்பான அனைத்து ஆதாரங்களின் மின்னணு நகல்கள் (ஒவ்வொன்றும் 10 MB-க்கு மிகாமல் இருக்க வேண்டும்).

தேவைப்படக்கூடிய தகவல்கள்:

1. சந்தேகத்திற்குரிய இணையதள முகவரிகள் (URLs) / சமூக ஊடகக் கணக்கு விவரங்கள் (பொருந்தக்கூடிய இடங்களில்)

2. சந்தேக நபர் குறித்த விவரங்கள் (கிடைக்கப்பெற்றால்)

அ) அலைபேசி எண்

ஆ) மின்னஞ்சல் முகவரி

இ) வங்கி கணக்கு எண்

ஈ) முகவரி

உ) சந்தேக நபரின் புகைப்படத்தின் மின்னணு நகல் (.jpeg, .jpg, .png வடிவத்தில்; 5 MB-க்கு மிகாமல் இருக்க வேண்டும்)

ஊ) சந்தேக நபரை அடையாளம் காண உதவும் வேறு ஏதேனும் ஆவணம்.

போன்றவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.