காவலரிடம் கைவரிசை காட்டிய சைபர் மோசடி கும்பல்! ரூ. 1.39 லட்சம் பறிப்பு!
தொலைபேசி அழைப்புகள் மூலம் காவலரிடம் மோசடி செய்த கும்பல் பற்றி...

சைபர் மோசடி
உத்தரப் பிரதேச காவல் துறையைச் சேர்ந்த காவலரிடம் தொலைபேசியில் பேசி, அவரது வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ. 1.39 லட்சம் மோசடி செய்துள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட காவலரின் பெயர் யஷ்பால் சிங் (30). இவர் பதோஹி மாவட்டத்தில் உள்ள ஔராய் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறர். இவர் ஜலான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
ஒளராய் காவல் நிலைய ஆய்வாளர் விஜய் பிரதாப் சிங் கூறுகையில்,
நவம்பர் 17ஆம் தேதி இரவு இரண்டு வெவ்வேறு தொலைபேசி எண்களிலிருந்து காவலருக்கு அழைப்புகள் வந்துள்ளன. அதன்பிறகு, அவர் இருப்பு வைத்துள்ளது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கணக்கிலிருந்து ரூ. 89,500-ம் பேங்க் ஆஃப் பரோடா கணக்கிலிருந்து ரூ. 49,000 எடுக்கப்பட்டதாகக் குறுஞ்செய்திகள் வந்துள்ளன.
காவலரின் புகாரின் பேரில், அடையாளம் தெரியாத இரண்டு தொலைபேசி எண் பயனர்களுக்கு எதிராக, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

