ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஒரு பக்கக் கதை: கூடு

 வாடகைக்கு வேறு வீடு பார்க்கும் முடிவைத் தவிர்க்க முடியாமல்தான் எடுத்தார் நாகராஜன். இப்போது குடியிருக்கும் இந்த வீட்டில் செüகரியத்திற்கு எந்தக் குறைச்சலும் இல்லை. இருந்தாலும் வேறு வீடு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:37 pm

மீனா சுந்தர்

 வாடகைக்கு வேறு வீடு பார்க்கும் முடிவைத் தவிர்க்க முடியாமல்தான் எடுத்தார் நாகராஜன். இப்போது குடியிருக்கும் இந்த வீட்டில் செüகரியத்திற்கு எந்தக் குறைச்சலும் இல்லை. இருந்தாலும் வேறு வீடு பார்க்கும் முடிவுக்குக் காரணம்- வித்யா!

 வித்யா, நாகராஜின் ஒரே மகள். கல்லூரியில் படிப்பவள். வீட்டிலிருந்து கல்லூரிக்கு இரண்டு பஸ் மாறி செல்ல வேண்டியுள்ளது. பஸ்சில் போய் வருவதே மிகவும் வேதனையான விஷயம். இதில் தினமும் இரண்டு பஸ் மாறி போய் வீடு திரும்புவது என்பது எவ்வளவு நரக வேதனை என்பதை உணர்ந்த நாகராஜன், மகள் படிக்கும் கல்லூரிக்கு அருகிலேயே வீடு ஏதாவது கிடைக்குமா என்று தேட ஆரம்பித்தார்.

 இதை அறிந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் ஒரு நாள் நாகராஜனைத் தேடி வந்தார்.

 காரணத்தைத் தெரிந்துகொண்ட வீட்டுக்குச் சொந்தக்காரர், ""தாராளமாகப் பாருங்க.. எங்கேயிருந்தாலும் செüகரியந்தான் முக்கியம். நீங்க ரொம்ப வருஷமா இருக்கிறதால உங்களை காலி பண்ணச் சொல்லாம இருந்தேன். இப்ப நீங்களாகவே வேற வீடு பார்க்கிறது நல்லதா போச்சு. கொல்லைல இருக்கிற மரத்தையெல்லாம் வெட்டிட்டு இன்னும் இரண்டு போர்ஷன் போடலாம்னு இருக்கேன். நமக்கு வேற என்ன வருமானம் இருக்கு? வாடகைல வர்ற காசுலதானே ஜீவனம் நடந்துட்டிருக்கு...'' என்றார்.

 இதுவரை வீட்டுக்காரரிடம் தன்னுடைய அப்பா பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த வித்யாவுக்கு வீட்டை காலி செய்யும் விஷயம் "திக்'கென்றிருந்தது.

 காரணம்... கொல்லையில் வேப்பமரத்தில் இப்போதுதான் இரண்டு குருவிகள் கூடு கட்ட ஆரம்பித்திருக்கின்றன. நான்கு நாட்களாக வித்யா பார்த்துக் கொண்டிருக்கிறாள். கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்து அதற்கு இரையூட்டி சிறகு முளைத்து அவை பறக்கும் வரை அந்தக் கூடு இருக்கவேண்டும். கூடு இருக்கவேண்டுமானால் அந்த மரம் இருக்க வேண்டும்.

 தினம் தினம் சிறிய சிறிய குச்சிகளை சின்ன அலகால் கொத்தி வந்து கூடு கட்டிக் கொண்டிருக்கும் அவை, திடீரென்று ஒருநாள் மரம் வெட்டப்பட்டது கண்டால் எப்படித் துடித்துப் போகும். கூட்டைக் காணாமல் முட்டையைக் காணாமல் அங்குமிங்கும் அல்லாடுமே! இந்தப் பாவச் செயல் எனக்காக நடக்க வேண்டாம். இதைத் தடுக்க வேண்டும். அவைகள் வாழவேண்டும். என்ன செய்யலாம்... எப்படி இதைத் தடுக்கலாம்? என இரண்டு நாள் யோசித்தாள் வித்யா.

 இரண்டு நாள்களுக்குப் பிறகு அவள் அப்பாவிடம் சொன்னாள்.

 ""அப்பா... நாம இப்ப இந்த வீட்டைக் காலி பண்ண வேண்டாம்பா...''

 ""ஏம்மா....?''

 ""இப்ப நாம குடியிருக்கிறோமே இந்த ஏரியாவில் இருந்தே பத்து மாணவிகளுக்கு மேல நான் படிக்கிற காலேஜுலதான் படிக்கிறாங்க. அதனால காலேஜ் பஸ்சை நம்ப ஏரியா வரைக்கும் "எக்ஸ்டன்' பண்ணப் போறாங்களாம். கூடிய சீக்கிரமே இது நடக்கும்னு காலேஜ்ல சொன்னாங்கப்பா...'' என்று பொய் சொன்னாள் வித்யா.

 ""அப்படியா! ரொம்ப நல்லதா போச்சும்மா. செüகரியமா இருக்கிற இந்த வீட்டை விட்டுப் போகணுமேன்னு எனக்கும் சங்கடமாத்தான் இருந்துச்சு. நல்ல சேதி சொன்னே...'' என்றார் மகிழ்ச்சியோடு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.