புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஆரோக்கியம் : நமீதாவுக்குப் பிடித்த உணவகம்!

கச்சிதமான உடல்கட்டோடு இருக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது? ஆனால் இந்த ஆசை எத்தனை பேருக்கு நிறைவேறி இருக்கிறது? நல்ல ருசியான உணவு என்றால் ஒரு பிடி பிடிப்பவர்களுக்கு உடல் எடை சொல்லாமல் கொள்ளாமல் "கன்னாப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:05 pm

ந. ஜீவா

கச்சிதமான உடல்கட்டோடு இருக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது? ஆனால் இந்த ஆசை எத்தனை பேருக்கு நிறைவேறி இருக்கிறது? நல்ல ருசியான உணவு என்றால் ஒரு பிடி பிடிப்பவர்களுக்கு உடல் எடை சொல்லாமல் கொள்ளாமல் "கன்னாபின்னாவென்று' ஏறிவிடும். பின்பு அதைக் குறைக்க கடும் பட்டினி கிடந்தாலும் முடிவதில்லை. ""எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளுங்கள் நாங்கள் தயாரிக்கும் உணவுகளை. ஆனால் உடை எடை ஏறவே ஏறாது'' என்கிறார் சென்னையில் சுமார் பத்து இடங்களில் "சப் வே' என்ற பெயரில் உணவகங்களை நடத்திவரும் பெண் தொழில்முனைவோரான úஸôம்னா.

இந்த உணவகத்திற்கு பல திரைப்பட முன்னணி நடிகர், நடிகைகள் வருகின்றார்கள். பல அரசியல்வாதிகள் பார்சல் வாங்கி வரச் சொல்லிச் சாப்பிடுகிறார்கள்.

வித்தியாசமான உணவகத்தை நடத்தி வரும் அவரைச் சந்தித்துப் பேசினோம்.



உணவகங்களை நடத்துவது மிகவும் சிரமமான காரியம். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு சென்னையில் பல இடங்களில் உணவகங்களை நடத்தும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?

""சைவ உணவு சாப்பிடுபவர்கள் இந்தியாவில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ஒரு பிரச்னையும் இல்லாமல் சுற்றி வரலாம். ஆனால் வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டால் அவர்கள் பாடு திண்டாட்டம்தான். அவர்கள் எங்கு சென்றாலும் அசைவ உணவே அவர்களுக்கு முன்பு எதிர்ப்படும்.

அப்படித்தான் நானும் என் கணவர் விபின்சச்தேவும் அமெரிக்காவுக்குச் சென்றபோது சைவ உணவு கிடைக்காமல் அவதிப்பட்டோம்.

அப்போது எங்களுக்கு ஒரே ஆறுதலாக இருந்தது அமெரிக்காவில் இருந்த இந்த "சப் வே' உணவகங்கள்தாம். அங்கே நாங்கள் சாப்பிட்ட உணவு வகைகள் மிகவும் ருசியாகவும், வித்தியாசமாகவும் இருந்தன.

நமது நாட்டிற்கு வந்த பின்பு, அதே போன்ற உணவகங்களை இங்கு நடத்தினால் என்ன என்று தோன்றியது. "சப் வே' வெப் சைட்களில் தேடி பல விவரங்களைத் தெரிந்து கொண்டோம். அதன் பின் சென்னை அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவில் 2003 இல் முதன்முறையாக ஆரம்பித்தோம். இன்று சென்னையில் 10 இடங்களில் எங்கள் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையிலும், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வுக்கு எதிரிலும் புதிதாகத் துவங்கியுள்ளோம். இந்த உணவகங்களை நடத்த எனது கணவர் எனக்கு உதவி வருகிறார்.

பெரிய நடிகர்கள், நடிகைகள் வரும் அளவுக்கு உங்கள் உணவகத்தில் அப்படி என்ன வித்தியாசமாக இருக்கிறது?

நடிகர், நடிகைகளுக்குத் தோற்றம் முக்கியம். நல்ல தோற்றம் என்பது நல்ல உணவை உண்பதால் வருவது. நடிகர், நடிகைகள் மட்டுமில்லை எல்லாருக்குமே இப்போது நல்ல தோற்றம் அவசியம்.

எங்களுடைய உணவகத்தில் உள்ள உணவு வகைகளில் மிகவும் குறைந்த அளவு கொழுப்புச் சத்து இருக்கும்படி பார்த்துக் கொள்கிறோம். ஒரே வகையான ஒரு உணவில் 150 கிராம் கொழுப்பு பிற உணவகங்களில் இருந்தால் எங்களுடைய உணவகத்தில் வெறும் 6 கிராம் கொழுப்பு மட்டுமே இருக்கும். அந்த அளவுக்கு கொழுப்புச் சத்துக் குறைவாக இருக்கும்படி தயாரிக்கிறோம்.

இதற்குக் காரணம், எங்கள் தயாரிப்புகளில் வெண்ணெய், எண்ணெய் ஆகியவை கொஞ்சம் கூடக் கிடையாது. வறுத்தல், பொரித்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. சிக்கனைக் கூட ஆவியில் வேக வைக்கிறோம். அல்லது நெருப்பில் சுடுகிறோம்.

கோதுமை ரொட்டியினுள் சைவ, அசைவ வகைகளைப் பொதிந்து தருகிறோம். வெஜ்ஜி டிலைட், சிக்கன் டோரியாகி, ரோஸ்டட் சிக்கன், சிக்கன் ஹாம், டர்க்கி & சிக்கன் ஹாம் உட்பட சுமார் 21 உணவு வகைகளை நாங்கள் இப்படித்தான் தயார் செய்கிறோம். அதனால் எங்களுடைய உணவகத்தில் ஆரோக்கியமான உணவு வகைகள் மட்டுமே கிடைக்கும் என்பது நிச்சயம்.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வருவார்கள். இதயநோய் உள்ளவர்கள் வருவார்கள். அவர்கள் உங்கள் உணவகத்தில் சாப்பிட்டால் உடல்நலப் பிரச்சினைகள் வராதா?

எங்களுடைய உணவகத்தில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட்டால் அவர்களுடைய ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதில்லை.

மேலும் நாங்கள் எங்கள் உணவகத்திற்கு வருகிற வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தயார் செய்து தருகிறோம். பிற உணவகங்களில் இதை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. ஒருவருக்கு உப்பே தேவையில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் அதை எங்களிடம் சொன்னால் உப்பில்லாமல் உணவைத் தயார் செய்து தருகிறோம். சிலர் வெங்காயம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். அதை எங்களிடம் சொன்னால் நாங்கள் வெங்காயத்தைத் தவிர்த்துவிட்டுத் தருவோம். சிலருக்கு அதிக அளவு வெள்ளரிக்காய் தேவை என்றால் அதை அதிகமாகத் தருவோம்.

இதென்ன வெள்ளரிக்காய், வெங்காயம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். காய்கறிகளை நீங்கள் சமைப்பதில்லையா?

நாங்கள் எங்கள் உணவகத்தில் தயாரிக்கும் உணவுகளில் பயன்படுத்தும் காய்கறிகளை வேக வைப்பதில்லை. பச்சையாக அப்படியே உண்ணும் காய்களைத்தான் சேர்த்துக் கொள்கிறோம். இதனால் காய்களின் முழுச் சத்தும் உண்பவர்களுக்குக் கிடைக்கிறது. வேக வைப்பது அசைவ உணவு வகைகளைத்தான். அதையும் எண்ணெய்யைப் பயன்படுத்தாமல் வேக வைக்கிறோம். எண்ணெய்யை அவசியம் பயன்படுத்தியாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால் சூரியகாந்தி எண்ணெய் போன்ற கொழுப்புச் சத்து அதிகமாக இல்லாத எண்ணெய்களைப் பயன்படுத்துகிறோம்.

உங்கள் உணவகத்திற்கு அடிக்கடி வருகிற பிரபலங்கள் யார்? அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகள் எவை?

நடிகர் கமல்ஹாசன் எங்கள் வாடிக்கையாளர். அவருக்குப் பிடித்த உணவு ரோஸ்ட் சிக்கன் சாலட். நடிகர் சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும் பிடித்த உணவும் அதுதான். த்ரிஷா விரும்பிச் சாப்பிடுவது விஜிடேபிள் ஷம்மி. விக்ரம் விரும்பிச் சாப்பிடுவது வான்கோழி, சிக்கன் ஹாம். ரம்யாகிருஷ்ணனுக்குப் பிடித்த உணவு விஜிடேபிள் டிலைட்.

சொன்னால் நம்பமாட்டீர்கள், நடிகை நமீதா 2007 ஆம் ஆண்டில் எங்கள் உணவகத்தில் தொடர்ந்து 3 மாதங்கள் சாப்பிட்டார். உடற்பயிற்சி செய்தார். இதனால் தனது எடையில் 10 கிலோவைக் குறைத்தார். பின்பு 2008 இல் மும்பைக்கும் சென்னைக்கும் பறந்து கொண்டிருந்தார். அதனால் எங்கள் உணவகத்திற்கு வர முடியாமற் போயிற்று. பழையபடி குண்டாகிவிட்டார்.

உங்களுடைய உணவகத்தில் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

நிச்சயமாகக் குறையும். ஏனென்றால் எங்கள் உணவுகளில் மிகக் குறைந்த அளவு கொழுப்புச் சத்தே உள்ளது. மேலும் பச்சைக் காய்கறிகள் உள்ள உணவுகளைச் சாப்பிட்டால் அவை உடலின் எடையை அதிகரிப்பதில்லை. அமெரிக்காவில் ஜரேட் எஸ் ஃபாகிள் என்பவர் இருக்கிறார். அவருடைய எடை இதற்கு முன்பு 193 கிலோ. எடையைக் குறைக்க முடியாமல் படாத பாடுபட்டார். அவர் அங்குள்ள சப்வே உணவகத்தில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தார். ஒரே ஆண்டுக்குள் 111 கிலோ எடையைக் குறைத்தார். வெறும் 82 கிலோவானார். இது உண்மையில் நடந்த ஒன்று. ஆனால் அவர் இந்த உணவைச் சாப்பிட்டதுடன் முறையாக உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தார்.

எனவே அதிக கலோரி இல்லாத, நார்ச்சத்து உள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொண்டால் உடலில் எடை அதிகரிக்காது என்பது நிச்சயம்.

உங்களுடைய உணவகத்தில் உணவுவகைகளின் விலை அதிகமாக இருக்குமா?

அப்படிச் சொல்ல முடியாது. பிற உணவகங்களில் 100 ரூபாய்க்குச் சாப்பிட்டு வயிறு நிறைகிறது என்றால் எங்கள் உணவகத்தில் வெறும் 80 ரூபாயிலேயே வயிறு நிறைந்துவிடும். எனவே காஸ்ட்லி என்ற பேச்சுக்கு இடமில்லை. அதைவிட முக்கிய விஷயம், ஆர்டர் செய்தால் எந்தக் கட்டணமுமின்றி வாடிக்கையாளரின் இடத்திற்கே சென்று தருகிறோம்.





 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.