முந்திரி தமிழ்நாட்டை விட கேரளா,கோவா, மகாராஷ்டிரா,குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகம் விளைகிறது. தென் ஆப்ரிக்கா, பிரேசில், வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிக அளவில் முந்திரி விளைகிறது. ஆனாலும் விளைகிற முந்திரியைப் பக்குவப்படுத்தி சுத்தம் செய்வதற்கான இயந்திரங்கள் மிகக் குறைவு. அப்படியே இயந்திரங்கள் வந்தாலும் முந்திரிப் பருப்பு பல துண்டாக உடைந்து போயின. முந்திரிப் பருப்பைப் பொறுத்தவரை அது உடையாமல் இருந்தால்தான் முழு மதிப்பு. முந்திரிப் பருப்பு உடைய உடைய அதன் விலை குறைந்து கொண்டே போகும். பிரேஸிலில் இருந்து முந்திரிப் பருப்பைச் சுத்தம் செய்யும் மிஷின் வந்தது. ஆனால் அதைப் பயன்படுத்தும்போது 20 சதவீதம் வீணானது.