புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

விழிப்புணர்வு: ரொட்டிகூட சிலருக்கு ஒத்துக் கொள்ளாது!

நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் என்ன சாப்பிடுகிறோம்? என்று யோசிக்கவே பலருக்கு நேரம் இருப்பதில்லை. ஏதோ வயிறு நிறைந்தால் சரி என்று சாப்பிட்டுவிட்டுச் செல்கிறவர்கள் அதிகம். ஆனால் சாப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:19 pm

ந. ஜீவா

நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் என்ன சாப்பிடுகிறோம்? என்று யோசிக்கவே பலருக்கு நேரம் இருப்பதில்லை. ஏதோ வயிறு நிறைந்தால் சரி என்று சாப்பிட்டுவிட்டுச் செல்கிறவர்கள் அதிகம். ஆனால் சாப்பிடும் எல்லாப் பொருட்களுமே உடம்புக்கு உகந்தவையாக இருப்பதில்லை. சில உணவுகளைச் சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்பட்டு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகின்றன. சில உணவு வகைகளோ வயிற்றைக் கெடுத்துவிடுகின்றன. இவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் மாலதி மோகன். கடந்த 30 ஆண்டுகளாக சென்னை கிறிஸ்தவப் பெண்கள் கல்லூரியில் ஹோம் சயின்ஸ் துறையில் பேராசிரியையாகப் பணிபுரிந்த அவர், தற்போது அகாடெமி ஆஃப் ஃபிட்நெஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் டீன் ஆகப் பணிபுரிகிறார். மாலதி மோகனை அவருடைய அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்.

சில உணவுப் பொருட்களைச் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படுகிறது. சில உணவுவகைகளைச் சாப்பிட்டால் உடலுக்கு ஒத்துக் கொள்ளாமல் போய்விடுகிறது. உடலுக்கு ஒத்துக் கொள்ளாத எல்லா உணவுப் பொருட்களையும் அலர்ஜியை ஏற்படுத்தும் உணவுப் பொருட்கள் என்று சொல்லலாமா?

உடலுக்கு ஒத்துக் கொள்ளாத எல்லா உணவுப் பொருட்களையும் அலர்ஜியை ஏற்படுத்துகிற உணவுப் பொருள்கள் என்று சொல்லிவிட முடியாது. அலர்ஜியை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களை உட்கொண்டால் அவை உடனடியாக, குறைந்தது 20 நிமிடத்துக்குள் பாதிப்பை ஏற்படுத்திவிடும். சிலருக்கு கசகசா அலர்ஜியை ஏற்படுத்தும். மசாலாப் பொருட்களில் கசகசாவும் ஒன்று. அது ஒத்துக் கொள்ளாத ஒருவர் அதை உட்கொண்டுவிட்டால் சில நிமிடங்களிலேயே மூச்சுவிட முடியாதநிலை அவருக்கு ஏற்படும். அவருடைய நாக்குத் தடித்துவிடும். சிலருக்கு முட்டை அலர்ஜியாகிவிடும். சிலருக்குக் கத்தரிக்காய், சேனைக் கிழங்கு அலர்ஜியாகிவிடும். வெளிநாடுகளில் உள்ள குழந்தைகளில் நிறையப் பேருக்கு வேர்க்கடலை அலர்ஜியாகிவிடுகிறது.

அலர்ஜியை ஏற்படுத்தாத உணவுப் பொருட்களில் சில, உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. அவற்றைச் சாப்பிட்டால் உண்ட உணவு செரிக்காமல் பேதியாகும். வாந்தி வரும். தலை சுற்றும். ஆனால் அலர்ஜி போலக் கடுமையான பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.

உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவுப் பொருட்கள் என்று எவற்றைச் சொல்கிறீர்கள்?

உட லுக்கு ஒத் துக் கொள் ளாத உண வுப் பொருள் என்று பார்ப் ப தைவிட உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள என்ன பொருள் ஒத்துக் கொள்ளவில்லை என்று பார்ப்பது சிறந்தது. லேக்டோஸ் என்ற பொருள் சிலருக்கு ஒத்துக் கொள்வதில்லை. சிலருக்கு க்ளுடென் ஒத்துக் கொள்வதில்லை. வேறு சிலருக்கு ஃபுரூக்டோஸ் ஒத்துக் கொள்வதில்லை.

அதென்ன லேக்டோஸ், க்ளூடென், ஃபுரூக்டோஸ்?

லேக் டோஸ் என் பது பாலி லுள்ள சர்க்கரை. இந்த லேக்டோûஸச் செரிக்க உடலில் லேக்டேஸ் என்ற என்ûஸம் சுரக்க வேண்டும். லேக்டேஸ் ஒருவருக்குத் தேவையான அளவுக்குச் சுரக்கவில்லை என்றால் பாலும், பாலால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களும் அவருக்குச் செரிக்காது. வாந்தி வரும். பேதியாகும். மிகவும் விதிவிலக்காக சில குழந்தைகளுக்கு லேக்டோஸ் ஒத்துக் கொள்வதில்லை. அப்படிப்பட்ட குழந்தைகளுக்குப் பாலுக்குப் பதிலாக சோயா பீன்ஸ் பாலைக் கொடுக்கலாம். ஆனால் பால் ஒத்துக் கொள்ளவில்லை என்பதற்காக முற்றிலும் குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதை நிறுத்திவிடக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாகப் குழந்தைகளுக்குப் பால் கொடுத்துப் பழக்க வேண்டும்.

க்ளூடென் கோதுமையில் உள்ள ஒரு சத்து. இது ஒருவருக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் வாயுத் தொல்லை,வயிற்றுவலி, ஜீரணக் கோளாறு போன்றவை ஏற்படும். கோதுமையை விட மைதாவில் க்ளூடோன் குறைவாக உள்ளது. கோதுமையில் இருந்து செய்யப்படும் மைதாவில் கோதுமையில் உள்ள புரதச் சத்தும், நார்ச்சத்தும் குறைந்துவிடுகின்றன. மைதாவில் மாவுச் சத்து அதிகமாக இருக்கிறது.

ஃபு ரூக்டோஸ் என்பது பழங்களில் உள்ள சர்க்கரைச் சத்து. இது சில பழங்களில் அதிகமாக இருக்கிறது. அவற்றைச் சாப்பிட்டால் சிலருக்கு ஒத்துக் கொள்வதில்லை.

சிலருக்கு ஈஸ்ட் ஒத்துக் கொள்ளாது. ரொட்டி தயாரிப்பில் ஈஸ்ட் இல்லையென்றால்

ரொட்டி தயாரிக்க முடியாது. திராட்சையிலும் ஈஸ்ட் இருக்கிறது. ஈஸ்ட் ஒத்துக் கொள்ளாதவர்கள் ரொட்டி, திராட்சை போன்றவற்றைச் சாப்பிட்டால் ஜீரணக் கோளாறுகள் வந்து அவதிப்படுவார்கள்.

இப்படி உணவில் ஒத்துக் கொள்ளாத பலபொருட்கள் இருக்கின்றன என்பதே பலருக்கும் தெரியாது. சாப்பிட்ட உணவு ஒத்துக் கொள்ளாமல் ஏதாவது பிரச்னை ஏற்பட்டுவிட்டால், எந்த உணவால் பிரச்னை ஏற்பட்டது என்று கூட அவர்களுக்குத் தெரியாது.

பால் அருந்துவதற்கு எதிராக உலக அளவில் சிலர் அமைப்புகளை வைத்துப் பிரசாரம் செய்கிறார்களே?

ஆமாம். மிருகங்களின் பால் அவற்றின் குட்டிகளுக்கு உரியது. அது மனிதனுக்கு

உகந்ததல்ல என்பது அவர்களுடைய கருத்து. பாலை செரிக்கும் திறன் மனிதனுக்குக் கிடையாது என்பார்கள். என்னைப் பொருத்தவரை மனிதர்கள் பால் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியாது. காரணம் சிறுவயது முதல் பால் உணவு மனிதர்களுக்குப் பழக்கப்பட்ட ஒன்றாகிவிடுகிறது. பால் ஒத்துக் கொள்ளாத குழந்தைகளை வளர்க்க அவர்களுடைய தாய்மார்கள் படும்பாடு அதிகம். 10 -15 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் சிரமம். சோயா பாலை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். சோயா பால் எளிதாகக் கிடைக்காத அந்தச் சமயத்தில் குழந்தைகளுக்குப் பால் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் எவ்வளவு சிரமம்?

ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரம் பெருகியுள்ள இன்றைய நாளில் நீங்கள் சொல்வதை எல்லாம் கடைப்பிடிக்க முடியுமா?

ஃபாஸ்ட் ஃபுட் சாப் பி டுவது இன்று அதிகமாகிவிட்டது. ஒரேயடியாக ஃபாஸ்ட் ஃபுட்டை நிறுத்திவிட முடியாது. உடம்பில் கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும் வெண்ணெய், நெய், எண்ணெய் வகைகளைக் குறைத்து ஃபாஸ்ட் ஃபுட் வகைகள் செய்யப்பட்டால் நல்லது. அப்படிச் செய்யப்படவில்லை என்றால் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை அடிக்கடி சாப்பிடக் கூடாது. மாதத்திற்கு ஓரிரு முறையோ அல்லது எப்போதாவதோ சாப்பிடலாம். ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடும்போது கொடுக்கப்படும் குளிர்பானங்களில் முழுக்க முழுக்க சர்க்கரைச் சத்து அதிகம் உள்ளது. ஏற்கனவே ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவதால் உடலில் அதிகமாகும் கொலஸ்ட்ராலுடன் இந்தக் குளிர்பானத்தாலும் கொலஸ்ட்ரால் ஏறிவிடுகிறது. இப்படிப்பட்ட காம்பினேஷன்களைத் தவிர்க்க வேண்டும்.

ஃபாஸ்ட் ஃபுட்டில் மட்டுமில்லை, நம் வீட்டுக் குழந்தைகள் விரும்பிக் கொறிக்கும் உருளைக் கிழங்கு சிப்ஸ் போன்றவற்றில் அதிகப்படியான கொழுப்புச் சத்தும், கார்போஹைடிரேட்டும் உள்ளன.

மீன் உணவுகளைத் தயாரிக்கும்போது எண்ணெய்யில் பொரிப்பதை விட வெந்நீரில் போட்டு வேக வைக்கலாம். அதிக நேரம் வெந்நீரில் வைக்கக் கூடாது. அல்லது ஆவியில் வேக வைக்கலாம். மட்டன், சிக்கன் போன்றவை செய்யும்போது அதிக எண்ணெய் இல்லாமல் குழம்பைச் செய்துவிட்டு அதில் மட்டன், சிக்கன் போன்றவற்றைப் போட்டு வேக வைக்கலாம். மட்டன், சிக்கன் போன்றவற்றை எண்ணெயில் போட்டு வறுக்கவோ, வதக்கவோ கூடாது.

சிலர் நேரடியாக புரோட்டின் போன்ற சத்துப் பொருட்களை உட்கொள்கிறார்களே? அது சரியா?

சில குறிப் பிட்ட உடல் நோய்கள், பிரச்னைகள் இருக்கும்போது மருத்துவரின் பரிந்துரைப்படி நேரடியாக புரோட்டீன் போன்றவற்றை உட்கொள்ளலாம். ஆனால் எப்போதும் குறிப்பிட்ட உணவுச் சத்துகளை உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலமே ஈடு செய்ய வேண்டும். சில குறிப்பிட்ட தருணங்களில், விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள், உடனடியாகச் சக்தி தேவைப்படுகிற சூழ்நிலையில் நேரடியாக சத்துப் பொருட்களை உட்கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.