பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த வெப்பத்தைவிட இப்போது பலமடங்கு அதிகரித்துவிட்டது. கடலின் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. ஆஸ்திரேலியாவில் பவளப் பாறைகள் அழிந்து வருகின்றன. நமது சுந்தரவனக் காடுகளில் வாழ்ந்து வந்த அரிய புலி வகைகள் வெப்பம் அதிகரித்துவிட்ட காரணத்தால் அழிந்து வருகின்றன. ஆர்டிக் பகுதியின் பனிப் பாறைகள் உருகிவிடுகின்றன. கடலின் நீர்மட்டம் இதனால் அதிகரித்து, பூமியின் பல இடங்களைக் கடல் விழுங்கிவிடுகிறது. புயல், மழை, வெள்ளம் எனப் பருவநிலை காலம் மாறி வருகின்றன. நமது உலகம் அழிந்து கொண்டு வருகிறது. ஆனால் நாம் இதைப் பற்றிக் கவலைப்படாமல் உலகம் அழிவதற்கான செயல்களை ஒவ்வொரு நாளும் செய்து வருகிறோம். எனவே நம்மால் முடிந்தவரை புவிவெப்பமடைதலுக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.