ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நறநற பழக்கமா? -1

என் தம்பியின் மகன் இரவு தூக்கத்தில் பற்களை நறநறவென்று பற்கள் விழுந்துவிடும் அளவுக்குக் கடிக்கிறான். கடந்த ஆறு மாத காலமாக டாக்டரிடமிருந்து மருந்து வாங்கிக் கொடுத்தும் பலனில்லை. இந்தப் பிரச்னை எதனால் ஏற
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நறநற பழக்கமா? -1
Updated on
2 min read

என் தம்பியின் மகன் இரவு தூக்கத்தில் பற்களை நறநறவென்று பற்கள் விழுந்துவிடும் அளவுக்குக் கடிக்கிறான். கடந்த ஆறு மாத காலமாக டாக்டரிடமிருந்து மருந்து வாங்கிக் கொடுத்தும் பலனில்லை. இந்தப் பிரச்னை எதனால் ஏற்படுகிறது. இதை மாற்ற வழி என்ன?

எஸ்.ஹேமலதா சுந்தர், ஈரோடு.

நீங்கள் பையனுடைய வயதையும் வேலை செய்கிறாரா? அல்லது படிக்கிறாரா? என்ற முக்கிய விபரத்தையும் குறிப்பிடவில்லை. இருந்தாலும் இதற்கான காரணங்களைத் தனித்தனியாகக் குறிப்பிட முடியும்.

ள்ற்ழ்ங்ள்ள் எனப்படும் மன அழுத்தம் இன்று வேலை செய்யும் அலுவலர்களிடமும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளிடமும் அதிகம் காணப்படுகிறது. அலுவலகத்தில் அதிகாரிகளிடம் நேரடியாகக் காண்பிக்க முடியாத, வார்த்தைகளால் திட்டமுடியாதவற்றை அனைத்தையும் இரவு தூக்கத்தில் தாராளமாகச் செய்து மனம் மகிழ்ச்சியையும் திருப்தியையும் அடைகிறது. அப்போது மனதில் எழும் கொந்தளிப்பு, பற்களை நறநறவென்று கடிக்கச் செய்யும். மனதில் ஸத்வம் எனும் உயர்ந்த குணத்தை மறைத்து ரஜஸ் மற்றும் தமோ குணங்களின் தீய ஆதிக்கத்தினால், மனம் வயப்படும்போது, மனதில் எழும் சஞ்சலங்கள், கனவு எனும் வழியாகச் செயலுருவம் பெறும்போது அதன் தாக்கமே இந்தப் பற்களைக் கடிப்பது என்று கூறலாம்.

இதற்குத் தீர்வுதான் என்ன? மனதில் ஸத்வ குணத்தை வளர்த்துக் கொள்வதுதான் ஒரே வழி. அதனை வளர்த்துக் கொள்வதால் என்ன பயன்? பகுத்தறிவு, பொறுமை, சந்தோஷம், மென்மை, தயை, பாபச் செயல்களில் வெறுப்புணர்ச்சியுடன் கூடிய வெட்கம், சரளமானதன்மை, மனத் தெளிவு, பற்றற்று இருத்தல், உடல் லேசாக இருத்தல் இவை எல்லாம் வளர்ந்து விடும். இதைப் பெறுவதற்கான உணவு என்ன?

பருப்புடன் நெய் சேர்ந்த அன்னத்தைக் கெட்டியாக முதலாவதாகவும், புளிப்பு உப்பு இவை தூக்கி நிற்கும் திரவம் கலந்த அன்னத்தை இரண்டாவதாகவும், மோருடன் கூடிய அன்னத்தைக் கடைசியிலும் உண்ண வேண்டும். எதற்காக இந்த வரிசைக் கிரமம்?

பருப்பு சேர்ந்த அன்னம் கெட்டியாக இருப்பதுடன் நெய் கலந்தமையால் விறுவிறுப்பற்று நெய்ப்புத்தன்மை மிகுந்ததாகவும், சிறிது தாமதித்து ஜீரணமாவதாகவும், ருசியுள்ளதாகவும் இருக்கும். இவை பெரும்பாலும் ஸத்வகுணத்தைப் பெருக்க வல்ல குணங்கள். இது உணவில் முதல் அம்சமாக அமைவதால் விரும்பிப் புசிக்கப்பட்டு பெருமளவில் உட்சென்று பின்வருவருவனவற்றிற்குச் சிறிதளவே இடம் அளிக்கிறது.

பருப்பு அன்னத்தை அடுத்து வருவது புளிப்பு, உப்பு மேலோங்கியிருப்பதால் இது ரஜோ குணத்தை ஓரளவு அதிகமாக்கும். ஆனால் ஸத்வ குணத்தைத் தரும் ஆகாரம் முன்பே அதிக அளவில் உட்சென்றுவிட்டது.

கடைசியாகச் செல்லும் மோருடன் கூடிய அன்னம் தமோ குணமுள்ளது. மோர் தயிரிலிருந்து உண்டாகிறது. மோரை விடத் தயிராக உபயோகிக்கும்போது தமோ குணம் அதிகமாகும். இந்த வரிசையமைப்பும் அளவு அமைப்பும் ஸ்தவ குணம் ஓங்கி நிற்கவும் மற்ற இருகுணங்கள் இதற்கு அனுசரணையாக இருக்கவும் தக்கவாறு அமைக்கப்பட்டுள்ளது கவனித்தக்கது. இதனால் கிடைக்கும் லாபம் அலுவலகத்தில் அதிகாரிகளின் மேல் ஏற்படும் கோபத்தை, அலுவலகத்திலிருந்து கிளம்பும்போது, அங்கேயே விட்டுவிட்டு, வீட்டில் நிம்மதியாக உறங்க முடியும் என்பதே.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com