நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விளையாட்டு: நடால் விரும்பும் வலை!

சென்னை ஓபன் டென்னிஸ் பட்டம் வெல்வது வெளிநாட்டைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் என்றாலும், அவர்கள் சிறப்பாக விளையாட உதவுவது யார் தெரியுமா? சென்னையைச் சேர்ந்த சிவகுமார். இப்போதைய நம்பர் ஒன் டென்னிஸ் பிளேயர்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:30 am

ஏ.வி. பெருமாள்

சென்னை ஓபன் டென்னிஸ் பட்டம் வெல்வது வெளிநாட்டைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் என்றாலும், அவர்கள் சிறப்பாக விளையாட உதவுவது யார் தெரியுமா? சென்னையைச் சேர்ந்த சிவகுமார். இப்போதைய நம்பர் ஒன் டென்னிஸ் பிளேயர் ரஃபேல் நடால் தொடங்கி எல்லா முன்னணி வீரர்களின் டென்னிஸ் ராக்கெட்டு(பேட்)க்கு இவர்தான் வலை பின்னித் தருகிறார். முன்னாள் டென்னிஸ் வீரருமான அவர் தம் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்:

ராக்கெட் வலை பின்னும் ஆர்வம் எப்படி வந்தது?

இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான பல்வேறு டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறேன். 1980 முதல் 1990 வரை டென்னிஸ் வீரராக வலம் வந்திருக்கிறேன். அதன்பிறகு டென்னிúஸôடு ஏதாவது ஒருவகையில் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காக வலை பின்னக் கற்றுக்கொண்டேன். எலக்ட்ரானிக் ஸ்டிரிங்கர் கொண்டு வலை பின்னினாலும் அது சாதாரண வேலை இல்லை. நுட்பமாய்ச் செய்ய வேண்டும்.



எத்தனை வருடங்களாக இதைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்?

1996-ம் ஆண்டு சென்னை ஓபன் டென்னிஸ் தொடங்கியதிலிருந்தே இங்கு வந்து விளையாடும் அனைத்து வீரர்களின் பேட்களுக்கும் நான்தான் வலை பின்னிக் கொடுக்கிறேன். இந்தப் பணியில் வெற்றிகரமாக 16-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். இப்போதைய நம்பர் 1 வீரர் ரஃபேல் நடால், பெக்கர், சோடர்லிங் எனத் தொடங்கி சென்னை ஓபனில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் வலை பின்னிக் கொடுத்திருக்கிறேன். அண்மையில் சென்னையில் நடந்த ஓபன் டென்னிஸ் ஆட்டத்திற்கு வந்த தாமஸ் பெர்டிச், மரின் சிலிச்சுக்கும் நான்தான் வலை பின்னிக் கொடுத்தேன். நாள் ஒன்றுக்கு சுமார் 30 பேட்களைச் சரி செய்துகொடுக்கிறேன்.



எலக்ட்ரானிக் ஸ்டிரிங்கர் இயந்திரம் இந்தியாவில் கிடைக்கிறதா?

இந்தியாவில் கிடைப்பதில்லை. அமெரிக்கா அல்லது பிரான்ஸில் இருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டும். இதன் விலை ரூ.5 லட்சம். ஸ்டிரிங்கர் இயந்திரம் வாங்கினாலும் நம்முடைய நுட்பம்தான் முக்கியம். ஒவ்வொரு வீரரும் அவரவர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு எடைகளில் பேட்களை வைத்திருப்பார்கள். அதற்கேற்ப மிகச்சரியான அளவில் வலை பின்னிக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பந்துகளை இலகுவாக அடித்து ஆட முடியும். இல்லையென்றால் பந்துகளை எதிர்கொள்வது கடினமாகிவிடும்.



பயஸýடனான அறிமுகம் எப்படி ஏற்

பட்டது?

1986-ம் ஆண்டு பிரிட்டானியா சார்பில் சென்னையில் நடைபெற்ற டென்னிஸ் பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக சென்னை வந்தார் லியாண்டர் பயஸ். அப்போது அவருக்கு 12 வயது. அப்போதுதான் இருவருக்கும் முதல் அறிமுகம். அந்த முகாமில்தான் முதல் முறையாக அவரின் பேட்களுக்கு வலை பின்னிக் கொடுத்தேன். அன்று தொடங்கி இன்று வரை தொடர்கிறது அவருடனான நட்பு.

சென்னை வரும்போதெல்லாம் என்னைச் சந்தித்து பேட்டிற்கு வலை பின்னிக்குக் கொண்டுதான் செல்வார்.

சென்னை ஓபன் தவிர சர்வதேச அளவிலான வேறு எந்தப் போட்டிகளுக்காவது, வலை பின்னித் தந்திருக்கிறீர்களா?

டேவிஸ் கோப்பை போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கு வலை பின்னித் தந்திருக்கிறேன். மற்றபடி சர்வதேச அளவிலான போட்டிகளுக்குச் செல்வதில்லை.

 வீரர் அல்லாதவர்களுக்கு வலை பின்னித் தருகிறீர்களா?

என்னை அணுகும் ஒரு சிலருக்கு மட்டுமே இதைச் செய்து தருகிறேன். இங்கிருக்கின்ற பலருக்கும் இதன் முக்கியத்துவம் தெரியவில்லை. அதனால் அவர்கள் எங்காவது ஓர் இடத்தில் வலை பின்னிக் கொள்கிறார்கள்.

மற்ற நேரங்களில் என்ன செய்கிறீர்கள்?

நான் இப்போது சென்னை அமெரிக்கத் தூதரகத்தில் டென்னிஸ் பயிற்சியாளராக உள்ளேன். தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்குப் பயிற்சி அளித்து வருகிறேன். அங்கு மட்டும் சுமார் 30 பேருக்கு டென்னிஸ் பற்றி சொல்லித் தருகிறேன். சென்னை வேளச்சேரியில் உள்ள அமெரிக்கன் பள்ளிக்கும் நான்தான் பயிற்சியாளர்.

வலை பின்னுவதற்கு அதிகக் கட்டணம்

வசூலிப்பீர்களா?

பணத்திற்காக இந்தப் பணியைச் செய்யவில்லை. மகிழ்ச்சிக்காகச் செய்து வருகிறேன். நான் பின்னிய வலையைக் கொண்டு வீரர்கள் வெற்றி பெறுகிறபோது நானே வெற்றி பெற்றது போன்ற மகிழ்ச்சியை அடைகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.