சமையல் குறிப்புகள்

தோசைக்கு மாவு அரைக்கும்போது, ஊற வைத்த சோயா பீன்ûஸ சேர்த்து அரைத்தால், தோசை மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும். மீதமான தயிருடன் 6 தேக்கரண்டி சர்க்கரை, 1 சிட்டிகை உப்பு சேர்த்து மிக்ஸியில் அடித்தால் ச
சமையல் குறிப்புகள்
Updated on
1 min read

தோசைக்கு மாவு அரைக்கும்போது, ஊற வைத்த சோயா பீன்ûஸ சேர்த்து அரைத்தால், தோசை மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும்.

மீதமான தயிருடன் 6 தேக்கரண்டி சர்க்கரை, 1 சிட்டிகை உப்பு சேர்த்து மிக்ஸியில் அடித்தால் சுவையான லஸ்ஸி தயார்.

மீந்துப் போன பனீரை வெந்நீரில் நனைத்து ஃப்ரிட்ஜில் வைத்தால் பல நாள்கள் கெடாமல் இருக்கும்.

தயிர் விரைவாக புளிக்க பால் பாதி சூடாக இருக்கும்போதே, உறை ஊற்றி வைக்க வேண்டும்.

திரிந்து போன பாலை மிக்ஸியில் போட்டு நன்றாக கலக்கியபின் உறை ஊற்றினால் தயிர் கெட்டியாக கிடைக்கும்.

கேசரி பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க தண்ணீருக்குப் பதிலாக பாலை ஊற்றி செய்ய வேண்டும்.

பால் பாத்திரத்தில் கிருமிகள் சேராமல் இருக்க, வாரம் ஒருமுறை அதனை கொதிக்கும் நீரால் சுத்தம் செய்ய வேண்டும்.

ப்

வடை செய்வதற்கு ஜிலேபி செய்யும் உளுந்தைப் பயன்படுத்தினால், வடை மிருதுவாக இருக்கும்.

ரவையில் புழு, பூச்சிகள் வராமல் இருக்க, அதனை வறுத்து வைக்கவும்.

நான்ஸ்டிக் தவா மற்றும் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், நெய், எண்ணெய் குறைவாக செலவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com