மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தீபாவளி டிப்ஸ்

  *   பாதுஷாக்கள் தயாரானவுடன் முதலில் அதன் மேல் சர்க்கரையை லேசாகத் தூவ வேண்டும். பிறகு அதன் மேல் கலர் தேங்காய் துருவலை தூவ வேண்டும்.   *   இனிப்புகள் செய்யும்போது சற்று அதிகமாகி விட்டாலும் முறிந்து உத

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:02 am

ஆர். மீனாட்சி

  *   பாதுஷாக்கள் தயாரானவுடன் முதலில் அதன் மேல் சர்க்கரையை லேசாகத் தூவ வேண்டும். பிறகு அதன் மேல் கலர் தேங்காய் துருவலை தூவ வேண்டும்.

  *   இனிப்புகள் செய்யும்போது சற்று அதிகமாகி விட்டாலும் முறிந்து உதிர்ந்துவிடும். கையில் "பிசுக்' என்று ஒட்டும் பதம் வந்தவுடனேயே எடுத்துக் கொட்டிவிட்டால் ஆற ஆற சரியாக இருக்கும்.

  *  வடை செய்யத் தயார் செய்யும்போது மாவு நீர்த்துவிட்டால் கொஞ்சம் ரொட்டித்தூள் அல்லது பம்பாய் ரவை அல்லது உலர்ந்த உளுத்தம் மாவும் தூவி பிசைந்தால் சரியாகிவிடும்.

  *  சுருள்போளி, சோமாஸ் இவற்றுக்கு மாவு செய்யும்போது டால்டா, சோடா உப்பு கலந்து ஐந்து மணி நேரம் ஊறிய பின் செய்தால் மிருதுவாக இருக்கும்.

  *  நெய்விட்டு ரவா லட்டு செய்த பின் வெள்ளை நிறம் கிடைக்க சர்க்கரையை நைசாக அரைத்து அதில் புரட்டி எடுக்க வேண்டும்.

  *   பொரிகடலையை மாவாக்கி சர்க்கரை சேர்த்து மா லட்டு செய்வதற்குப் பதிலாக பயத்தம் பருப்பை மாவாக்கி வெல்லப்பாகு சேர்த்து மாலட்டு பிடித்தால் சத்தான பண்டமாக இருக்கும்.

  *  கோதுமை அல்வா செய்யும்போது கடைசியில் இரண்டு சொட்டு பாதாம் எசன்ஸ் விட்டால் பாதாம் அல்வாவைப்போல கமகமவென மணக்கும்.

   *  லட்டு பிடிக்க பொரித்து வைத்த பூந்தி அதிகமாக இருந்தால் மிளகுப்பொடி, உப்புத்தூவி, கடுகு, கறிவேப்பிலை தாளித்தால் காரசார காரா பூந்தி ரெடி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.