இனிப்போ இனிப்பு!
இதோ டிப்ஸ்! பாயசம் செய்யும்போது பாலுடன் பாதாம் அல்லது பிரட்டை பொடியாக்கிச் சேர்த்தால் பாயசம் கெட்டியாகவும் ருசியாகவும் இருக்கும். அதிரசம் செய்யும்போது அந்த மாவுடன் விதையில்லாத பேரீச்சம் பழங்களைச் சிறு


இதோ டிப்ஸ்!
பாயசம் செய்யும்போது பாலுடன் பாதாம் அல்லது பிரட்டை பொடியாக்கிச் சேர்த்தால் பாயசம் கெட்டியாகவும் ருசியாகவும் இருக்கும்.
அதிரசம் செய்யும்போது அந்த மாவுடன் விதையில்லாத பேரீச்சம் பழங்களைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்த்து அதிரசம் செய்தால் சுவையாக இருக்கும்.
பயத்தமாவு லட்டு, ரவா லட்டு செய்யும்போது முதலில் ஒரு தாம்பாளத்தில் அரைத்த சர்க்கரையையும் நெய்யையும் போட்டு கலக்கவும். பிறகு அத்துடன் ரவையோ, பயத்தம் மாவையோ போட்டு உருண்டை பிடிக்கவும். தேவைப்பட்டால் பிடிக்கும்போது ரவையுடன் ஒரு கரண்டி பாலைத் தெளித்தும் பிடிக்கலாம். சுலபமாக பிடிக்க வரும்; சுவையும் அதிகமாக இருக்கும்.
பர்பி, மைசூர் பாகு போன்றவற்றை துண்டுகள் போடும்போது சிதறி விழும் தூள்களை ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். சோமாஸ் செய்யும்போது இதையும் பூரணமாக வைத்து சில சோமாஸ்களை சின்னதாக தயாரித்துவிடுங்கள்.
ரவா கேசரி கிளறும்போது காய்ச்சின பாலையும் சேர்த்துக் கிளறுங்கள். ரவா கேசரியின் சுவை கூடுவதோடு இனிப்பு திகட்டாமல் இருக்கும்.
ரவா கேசரி, சேமியா கேசரி, அவல் கேசரி செய்யும்போது வெள்ளரி விதை சேர்த்தால் வித்தியாசமான சுவையோடு இருக்கும்.
கேரட் அல்வா நொடியில் செய்ய வேண்டுமா? தோல் சீவிய கேரட்டுகளை குக்கரில் வைத்து வேக வைத்து கூழாக மசித்துக்கொள்ளுங்கள். கடாயில் இரண்டு ஸ்பூன் நெய்விட்டு, மசித்த கேரட்டுடன், சம அளவு சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறினால் கேரட் அல்வா தயார்.
ரவா உருண்டை, பயத்தம் உருண்டை, கடலைமாவு உருண்டை தயாரிக்கும்போது சர்க்கரையின் அளவைக் குறைத்துக்கொண்டு குளுக்கோஸ், பால்பவுடர், ராகிமால்ட், பாதாம் மிக்ஸ் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். வித்தியாசமான சுவை கிடைக்கும்.
தேங்காய் பர்பி செய்யும்போது தேங்காயுடன் ஊறவைத்த நிலக்கடலையும் சேர்த்து அரைத்துச் செய்தால் பர்பி அதிக சுவையுடன் இருக்கும்.
குலோப் ஜாமூன் மிக்ஸýடன் சர்க்கரை பொடி கலந்து பிசைந்து சற்று தடிமனான சப்பாத்திகளாகத் திரட்டி, சிறிய டைமண்ட் வடிவில் வெட்டி நெய் அல்லது டால்டாவில் பொரித்து எடுத்தால், மாலை நேர சிற்றுண்டி தயார்.
ஃபுரூட் சாலட்டில் சர்க்கரைக்குப் பதில் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொண்டால், அதிக சுவையுடன் இரும்புச்சத்தும் அதிகரிக்கும்.
அவசரப் பாயசம் தயாரிக்க இரண்டு முந்திரிப் பருப்பு, கொஞ்சம் கசகசாவை அம்மியில் அரைத்துக் கடலைமாவில் சேர்த்து கொதிக்கவிடவும். சாதத்தையும், சர்க்கரையையும் மிக்ஸியில் போட்டு அரைத்துப் பால் சேர்த்தால் பாயசம் ரெடி.
பாதுஷா செய்யும்போது மாவில் கொஞ்சம் தயிர்விட்டுப் பிசைந்தால் பாதுஷா மிகவும் மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும்.
மைசூர்பாகு செய்வதற்கு எல்லாரும் கடலைமாவை மட்டும்தான் பயன்படுத்துவார்கள். இதற்குப் பதிலாக இரண்டு பங்கு பாசிப்பருப்பு, ஒரு பங்கு கடலைப்பருப்பு என்ற விகிதத்தில் கடலை மாவில் கலந்து மைசூர்பாகு தயாரித்தால், வாயில் போட்டால் உடனே கரையும் அளவுக்கு மென்மையாக இருக்கும்.
சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது அரிசிக்கு ஏற்ப எவ்வளவு வெல்லம் போடுகிறோமோ, அந்த அளவில் பாதி சர்க்கரையும் சேர்த்து பாகு வைத்து சர்க்கரை பொங்கல் செய்து பாருங்கள். சர்க்கரை பொங்கல் ருசி பிரமாதமாக இருக்கும்.
.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...