பலகாரம் செய்யலாம் வாங்க!
கடலை உருண்டை செய்யும் போது, வெல்லப் பாகுடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்தால்


*குலோப் ஜாமூன், வெல்லச்சீடை செய்யும்போது அப்படியே காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டுத்தானே எடுப்பீர்கள். அதற்கு பதிலாக குழிப்பணியாரம் தயாரிக்கும் சட்டியின்
ஒவ்வொரு குழியிலும் ஓர் உருண்டையாகப் போட்டு, எண்ணெய் விட்டு மிதமான தீயில் வறுத்தாலே போதும். உருண்டைகள்
ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், உடையாமல் இருப்பதுடன்
எண்ணெயும் அதிகமாகச் செலவாகாது.
*சர்க்கரைப் பாகு காய்ச்சும்போது நான்கு சொட்டு
எலுமிச்சை சாறு விட்டால் பாகு இளகியே இருக்கும்.
*தேங்காய் போளி அல்லது
கடலைப்பருப்பு போளி செய்யும்போது மாறுதலுக்கு இரண்டு கப் கேரட் துருவலுடன் தேவையான வெல்லம், ஏலப்பொடி, கோவா,
சிறிது நெய் சேர்த்து பூரணம் செய்து போளி செய்தால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
*இருபது ஏலக்காயுடன் நான்கு தேக்கரண்டி கசகசா சேர்த்து வாணலியில் வறுத்து நன்றாக பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். பாயாசம்
மற்றும் இனிப்புகள் தயாரிக்கும்
போது இந்தப் பொடியைப் போட்டால் வாசனையாக
இருக்கும்.
*கடலை உருண்டை செய்யும்
போது, வெல்லப் பாகுடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்தால் கரகரவென புதிய சுவையுடன் இருக்கும்.
*மிக்சர் அதிகமான ருசியுடனும் மணத்துடனும் இருக்க வேண்டும்
என்றால் எண்ணெய்க்குப் பதிலாக டால்டாவில் வறுத்தெடுக்க வேண்டும்.
*எண்ணெயில் வறுக்கும் பதார்த்தங்களில் சில வகைகளுக்கு அதிக மொறுமொறுப்பு இருக்காது. அதற்கு பதார்த்தங்கள் ஓரளவு வெந்ததும் கரண்டியில் அப்படியே அதை வாரி எடுத்து அந்த ஆவியில் சிறிது நேரம் பிடியுங்கள். பின்பு மீண்டும் எண்ணெயில் போடுங்கள். அதற்கு பிறகு எடுத்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
*பர்பி செய்து தட்டில் கொட்டியவுடன் அதன் மேல் நெய்யில் வறுத்த முந்திரி அல்லது வேர்க்கடலையைப் போட்டு அமுக்கிவிட்டால் பார்க்கவும் அழகாக இருக்கும்; சுவையும் கூடும்.
*சுண்டலுக்கு ஊறப் போட மறந்து
விட்டால் கவலை வேண்டாம். கொதித்து இறக்கிய தண்ணீரில் கடலையைப் போட்டு மூடிவிடுங்கள். அரை மணி நேரத்தில் ஊறி ரெடியாகிவிடும்.
*இரண்டு வாழைப்பழத்துடன் சிறிதளவு சர்க்கரையைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து அதனுடன் ஒன்றரை டம்ளர் பால், ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து ஏதாவதொரு பழ எசன்ûஸ
ஊற்றிக் காய்ச்சினால் புதிய வகைப் பாயாசம் தயார்.
*பண்டிகை நாள்களில் இனிப்பு வகைகள் நிறைய மீந்துவிடும்.
அவற்றுடன் கோதுமை மாவைக் கலந்து இனிப்புச் சப்பாத்தி
தயாரிக்கலாம். மீந்துவிட்ட பாயாசத்திலும் கோதுமை மாவைச் சேர்த்து இனிப்பு சப்பாத்தி தயாரிக்கலாம். தேவைப்பட்டால்
பாயாசத்தை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம்.
*ஒரு டம்ளர் மைதா, ரவை, சர்க்கரை இவற்றுடன் இரண்டு
ஏலக்காய் தட்டிப்போட்டு தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும். அரை மணி நேரம் கழித்து எண்ணெயைக்
காய வைத்து கரண்டியில் எடுத்து வட்டவட்டமாக ஊற்றவும்.
நன்றாக வெந்தவுடன் எடுக்கவும். இந்த திடீர் பண்டம் சாப்பிட
சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
*கொழுக்கட்டை செய்யும்போது கொஞ்சம் ஜவ்வரிசியை
ஊற வைத்து, அரைத்து அரிசிமாவுடன் சேர்த்துக்
கிளறுங்கள். கிண்ணம்போல் சொப்பு செய்யும்போது சுலபமாக
இருக்கும். விரிசல் ஏற்படாது.
*பண்டிகை தினங்களில் பழ வகைகள் நிறைய மீந்துவிடும். அவற்றை மிகச்சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு தேக்கரண்டி சர்க்கரை இரண்டு தேக்கரண்டி தேன், அரை மூடி எலுமிச்சைச்சாறு கலந்து
அரைமணி நேரம் ஊற வைத்து சாப்பிடுங்கள்.
*அரிசி, தேங்காய் அரைத்துச் செய்யும் பாயாசத்துக்கு, சிறிது முந்திரி, உரித்த பாதாம்
பருப்புகளையும் அரைத்துச்
சேர்த்தால், பாயாசம்
ருசியாக இருக்கும். எந்தப்
பாயாசம் செய்தாலும் இறக்கும்
போது 2 தேக்கரண்டி
கண்டென்ஸ்ட் மில்க் விட்டு
கலந்தால் பாயாசம்
கெட்டியாகவும் ருசியாகவும் இருக்கும்.
*சீடைக்கு மாவு உருட்டும்போது அழுத்தமாக
உருட்டக்கூடாது. கட்டைவிரல், ஆள்காட்டி விரல்
மற்றும் நடுவிரலால் மாவு எடுத்து லேசாக உருட்டிப் போட்டாலே போதும். உருட்டிய சீடைகளை சிறிது நேரம் ஃபேன் காற்றின் கீழ் ஆறவிட்டுப் போட,
எண்ணெயில் ஒட்டிக் கொள்ளாமல் இருப்பதுடன் வெடிக்கவும் செய்யாது. அதுபோல் சீடைக்கு தேங்காய்த் துருவலை அப்படியே போட வேண்டாம். வாணலியில் தேங்காய் சாதத்துக்கு வறுப்பது போல் பொன்நிறத்தில் வறுத்துப்போட்டுச் செய்யவும்.
*கொழுக்கட்டை செய்ய
மேல் மாவுக்கு கிளறும்போது
சரியாக வேகாமல் கட்டியாகிவிடும்.
அரிசியை ஊற வைத்து, சிறிது உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில்
அரையுங்கள். அடுப்பில் கடாயை வைத்து கரைத்த மாவை அதில்
போட்டுக் கிளறி, பந்து போல் கையில் ஒட்டாமல் வந்ததும் எடுத்து
கொழுக்கட்டை செய்தால்
நன்றாக வரும்.
*கடலை மாவை நெய்விட்டு லேசாக வறுத்துப் பிறகு
மைசூர் பாகு செய்தால் மணம் தூக்கலாக இருக்கும். மைசூர் பாகினை இறக்கும்போது ஒரு சிட்டிகை சமையல் சோடா தூவிக்
கிளறிக் கொட்டினால் மைசூர் பாகு மிகவும்
சுவையாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...