மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

கிளசரின் இல்லாமலேயே அழுவேன்!

மாடலிங் மூலம் பாலிவுட் சினிமாவில் இடம் பிடித்த அனுஷ்கா ஷர்மா தான் நடிக்கும் திரைப்படங்களில் வரும் சோக காட்சிகளுக்கு கிளசரின் போட்டு அழுததேயில்லையாம்.

News image
Updated On :6 ஏப்ரல் 2013, 10:47 am

மாடலிங் மூலம் பாலிவுட் சினிமாவில் இடம் பிடித்த அனுஷ்கா ஷர்மா தான் நடிக்கும் திரைப்படங்களில் வரும் சோக காட்சிகளுக்கு கிளசரின் போட்டு அழுததேயில்லையாம்.

""எனது 15-வது வயதில் மாடலிங்கில் நுழைய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதற்குக் காரணம் என் தோழி ஒருத்தியின் புகைப்படம் ஒரு மாத இதழில் வெளிவந்திருந்தது. அதைப் பார்த்ததும் என் புகைப்படமும் இதழில் வெளிவர ஆசை வந்தது.

மாடலிங்கில் துறையில் நுழைந்த சமயம், எனக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் இல்லை. முதன்முதலில் திரைப்படத்தில் நடிப்பதற்கான ஸ்கிரீன் டெஸ்டில் விருப்பமில்லாமல்தான் கலந்து கொண்டேன். சாதாரண உடையையே அணிந்து சென்றேன். அதன் பின்பு ஒரு டயலாக் கொடுத்து அதை பேசி நடிக்கச் சொன்னபோது, நாளைக்கு வந்து நடித்துக் காட்டுகிறேன் என்று கூறி சென்றுவிட்டேன். இதுவரை ஓர் "அயிட்டம் சாங்'கிற்கு கூட ஆடியதில்லை; அதில் எனக்கு விருப்பமும் இல்லை.

காதல், திருமணம் போன்றவற்றில் என் குடும்பத்தைப் போன்றுதான் இருக்க ஆசைப்படுகிறேன். ஆனால் சினிமா துறையில் இருப்பவர்களுக்கு திருமணம் செய்து கொண்டு அதிக நாள்கள் ஒருவருடனேயே வாழ்க்கையை நடத்துவது என்பது கஷ்டமான காரியமாக இருக்கிறது. டேட்டிங் கலாசாரம்தான் எங்கும் பரவிக் கிடக்கிறது. என்னைப் பொருத்தவரையில், சினிமா அல்லாத துறையைச் சார்ந்தவர்தான் எனக்குத் துணையாக வர வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால் அவர்கள்தான் உறுதியோடும், உண்மையோடும் இருப்பார்கள். மாறாக சினிமா நடிகர்களுக்கு தங்கள் மீதான காதல் தான் மேலோங்கி இருக்கும்'' என்கிறார் அனுஷ்கா ஷர்மா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.