புள்ளிகள்...1
தொலைபேசி சங்கடங்கள் சாதாரண பெண்களுக்கு மட்டுமல்ல; பிரபலங்களுக்கும் நிகழ்கிறது என்பதற்கு


ராஜி ராதா பெங்களூர். எஸ்.பக்கிரிசாமி
* பெண் கல்விக்காகப் பாடுபட்டு வரும் பாகிஸ்தானிய சிறுமி மலாலா யூசுஃப்ஸாய் குண்டடிபட்டு உயிர் தப்பியது தெரிந்த தகவல்.
தீவிர சிகிச்சைக்குப் பின் குணமடைந்த இவர், மீண்டும் பள்ளி செல்லத் தொடங்கியது சமீபத் தகவல்.
இவருக்கு உலகின் பல இடங்களில் இருந்து ஆதரவும், நன்கொடைகளும் வந்து குவிந்து கொண்டேயிருக்கின்றன. மிகச் சிறிய வயதில் நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட மலாலா, முதன்முதலாக ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுகிறார். வரும் ஜூலை 12-ம் தேதி அவரின் 16-வது பிறந்தநாள் அன்று ஐ.நா.வில் உரையாற்ற உள்ளார். ஜூலை 12-ம் தேதி "மலாலா தினம்' என்று அழைக்கப்படலாம் என்ற கருத்தும் உண்டு.
* டயானி (48) ஒரு சந்தர்ப்பத்தில் 150 கிலோ எடை இருந்தார். ஞ்ஹள்ற்ழ்ண்ஸ்ரீ க்ஷஹய்க் அறுவை சிகிச்சை செய்து கொண்டதும் 63 கிலோவாக எடை குறைந்தது. இங்கிலாந்தின் நேஷனல் ஹெல்த் சர்வீஸ் இதற்காக 15,000 டாலர் செலவுக்கு வழங்கியது. இதே போல் 2012-ம் ஆண்டில் மட்டும் 85 மில்லியன் டாலர் இத்தகைய அறுவைச் சிகிச்சைக்காக இந்த ஹெல்த் சர்வீஸ் செலவு செய்துள்ளது. ஆனால் அவரால் சாப்பாட்டைக் கட்டுப்படுத்த இயலவில்லை. இதனைவிடக் கொடுமை இவருடைய ப்ராக் சைஸ் 28-லிருந்து 14 ஆகக் குறைந்துவிட்டதாம். மனதை இது பாதிக்க, மீண்டும் நிறைய சாப்பிட ஆரம்பித்தார். இப்போது 127 கிலோ எடையை எட்டிப் பிடித்துவிட்டார்: ""இந்த குண்டுதான் எனக்கு பாந்தமாகவும் அழகாகவும் இருக்கிறது. ஆகவே பழையபடி குண்டாகவே இருக்க விரும்புகிறேன்'' என்கிறார் டயானி.
* தொலைபேசி சங்கடங்கள் சாதாரண பெண்களுக்கு மட்டுமல்ல; பிரபலங்களுக்கும் நிகழ்கிறது என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம் ஜெயா பச்சன்.
அமிதாபச்சனின் மனைவிக்கு தினமும் ஒரு குறிப்பிட்ட நபரிடமிருந்து தொலைபேசி வர ஆரம்பித்தது. முதலில் மென்மையாகத் துவங்கி, பிறகு தொல்லையாக மாறியது. ஜெயா பச்சன் தான் யார் என்ற உண்மையைக் கூறிய பின்னரும் தொல்லை குறையவில்லை. மாறாக கூட ஆரம்பித்தது. பிறகு அமிதாப்பச்சன் உட்பட குடும்பத்தினருக்கு தெரிந்து அவர்கள் பேசியும் எதிராளி திருந்தவில்லை. அமிதாபச்சன் குடும்பத்தினர் போலீஸýக்கு தகவல் கொடுத்தனர். போலீஸýம் கண்காணித்து தகவல் துபாயிலிருந்து வருவதாகக் கண்டுபிடித்தது. ஆனால் நம்மைப் போன்று, இது போன்ற விஷயங்களில் துபாய் போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?
* ""திரைத்துறையில் வெற்றியே பிரதானம். "தகுதி உள்ளவன் தரணியாள்வான்' என்கிற மந்திரத்தை இங்கும் பொருத்திக் கொள்ளலாம். நான் தொடர்ந்து வெற்றியைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் வெற்றியாளனாவேன். எனது முன்னோர்களான திரையுலக ஜாம்பவான்கள் பெற்ற அனுபவங்கள் எனக்குப் பாடமாக உள்ளன. எனக்கு மட்டுமல்ல; அனைவருக்கும். அண்ணன் ராஜாவுக்கும் எனக்கும்தான் "கெமிஸ்ட்ரி' ஒத்து வருகிறது என்கிறார்கள், இருக்கலாம். அவர் கதைக்கேற்ற நபர்களையே தேர்ந்தெடுப்பார். எனக்கேற்ற கதையையும் அவ்வாறே தேர்ந்தெடுக்கிறார்- அவ்வளவுதான்'' என்கிறார் ஜெயம் ரவி.
* ""முதன்முதலில் நான் நடிக்கப் போகிறேன் என்றதற்கு என் அம்மா ""உன் தாத்தா மட்டும் உயிரோடிருந்திருந்தால் இதற்கு சம்மதித்திருக்கவே மாட்டார். இதைக் கேட்டு அவருக்கு மாரடைப்பே வந்திருக்கும்'' என்றார். என் அம்மாவைப் பொறுத்தவரை டி.வி. சீரியல்கள், விளம்பரப் படங்களில் நடிப்பதற்கு ஓ.கே. ஆனால் சினிமா என்று பெயரெடுத்தாலே பெரிய "நோ' சொல்லிவிடுவார். அவர்களைப் பொறுத்தவரை சினிமா என்பது ஒரு மோசமான துறை. முதன்முதலில் நான் மலையாள சினிமாவில் புக் செய்யப்பட்டபோது என் அப்பாவையும், சகோதரியையும் சமாதானப்படுத்தி சம்மதம் வாங்கிவிட்டேன். என் அம்மா மட்டும் மறுத்துக் கொண்டேயிருந்தார். இறுதியில் படத்தின் ஹீரோவின் பெயரைக் கேட்டவுடன்தான் அம்மா சம்மதம் தெரிவித்தார். அந்தப் படத்தின் ஹீரோ மலையாள திரையுலகின் ஜாம்பவான் மோகன்லால்'' என்கிறார் வித்யா பாலன்.
* "காந்தி' ஆங்கிலப் படத்தை இயக்கியவரும் 1997 -இல் ஜூராசிக் பார்க் படத்தில் நடித்தவருமான ரிச்சர்ட் அட்டன்பரோ, 89 வயதை எட்டிய நிலையில் முதியோர் இல்லத்தில் சேர்ந்துள்ளார். நடக்க முடியவில்லை. சக்கர நாற்காலியைத்தான் பயன்படுத்துகிறார். லண்டனில் உள்ள 100 கோடி ரூபாய் பெறுமானமுள்ள வீட்டையும் விற்றுவிட்டார். தற்போது தனது மனைவியுடன் ரிச்சர்ட் ஆட்டன்பரோ அதே முதியோர் இல்லத்தில் சேர்ந்து கொண்டார்.
* ஹில்டன் சங்கிலித் தொடர் ஓட்டல்களின் முதன்மை செயல் அதிகாரி கிறிஸ்டோபர் ஜே. நஸீத்தா (50). வருடத்தில் 250 நாட்களுக்கு மேல் உலக நாடுகளில் உள்ள தங்களது ஓட்டல்களைச் சுற்றிப் பார்க்கவே ஒதுக்குகிறார். 2007-ஆம் ஆண்டில் சி.இ.ஓ.வாக பதவியேற்றதிலிருந்து இதுவரை 1100 புதிய ஓட்டல்களை உருவாக்கியிருக்கிறார். 2016-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் இன்னும் 50 ஓட்டல்களை நிறுவத் திட்டம் வைத்திருக்கிறார் இவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...