சாக்லெட் தங்கம்

சாக்லெட் தங்கம்

பணக்காரர்கள், தொழிலதிபர்கள் கிலோ கணக்கிலான தங்கக்கட்டிகளை வாங்கிச் சேமிக்கிறார்கள். ஆனால் நடுத்தர வர்க்தத்தினர்தான்

தங்கத்தை கட்டிகளாகவும், நகைகளாகவும், நாணயங்களாகவும் உலகம் முழுவதும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதிலும் புதுமையை புகுத்தும் வகையில் சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த தனியார் முதலீட்டாளர்கள் புதிய வடிவிலான தங்கக்கட்டியை "வில்லையாக்கி' சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் ஏடிஎம் கார்டு அல்லது கிரெடிட் கார்டு போன்று தோற்றமளிக்கும் இந்த தங்கக்கட்டிகள் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் அது சுமார் 50 முதல் 100 கிராம் தங்கத்தால் ஆனது. 

பணக்காரர்கள், தொழிலதிபர்கள் கிலோ கணக்கிலான தங்கக்கட்டிகளை வாங்கிச் சேமிக்கிறார்கள். ஆனால் நடுத்தர வர்க்தத்தினர்தான் சிறிய அளவில் தங்கக் காசுகளையோ அல்லது 100 கிராம் வரை உள்ள தங்கக்கட்டிகளையோதான் வாங்கிச் சேமிக்கின்றனர். அவர்களின் அவசரத் தேவைக்காக அல்லது அன்பளிப்பு தருவதற்காக இந்த வகை தங்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக முதலீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கார்டு வடிவிலான தங்கக்கட்டியின் வடிவமைப்பு காட்பரீஸ் சாக்லெட் போன்று வரிசை வரிசையாக உள்ளது. சாக்லெட் வில்லைகளை உடைத்துச் சாப்பிடுவது போன்று இதிலுள்ள ஒவ்வொரு துண்டையும் எளிதாக கையால் உடைத்து எடுத்துவிடலாம்.

யாருக்காவது அவசரத் தேவைக்காக பணம் தேவைப்பட்டாலோ அல்லது பரிசளிக்க விரும்பினாலோ அதை உடனே உடைத்துக் கொடுத்துவிடலாம். ஒவ்வொரு சிறிய துண்டும் 99.9 சதவீதம் தூய்மையான 1 கிராம் தங்கமாகும். இதற்கு "காம்பிபார்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஏடிஎம் மிஷின்கள் போன்று ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய நாடுகளில் தங்கம் வழங்கும் கருவிகள் புழக்கத்தில் உள்ளன. 2010-ம் ஆண்டு மட்டும் இந்தக் கருவிகளின் மூலம் சுமார் ரூ.152.28 கோடிக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 50 ஆயிரம் பேர் இந்த கருவியின் மூலம் தங்கத்தை பெற்றுள்ளனர்.

தங்க விற்பனையின் மற்றொரு மைல்கல்லாக இந்த "காம்பிபார்' தங்கக்கட்டிகள் விளங்கும் என முதலீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் வெற்றியைப் பொறுத்து மற்ற நாடுகளும் இதை அறிமுகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com