மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காதலியைத் தேடி..

அந்த அமெரிக்கப் பத்திரிகையில் தனி நபர்கள் விளம்பரத் தகவல் பிரிவு சுவாரசியமாக இருக்கும்.

News image
Updated On :20 ஜனவரி 2013, 6:09 am

அந்த அமெரிக்கப் பத்திரிகையில் தனி நபர்கள் விளம்பரத் தகவல் பிரிவு சுவாரசியமாக இருக்கும்.
 தம்முடன் பழகித் தொடர்புவிட்டுப் போனவர்கள், தாம் தொலைத்த பொருட்கள், தேடிக்கொண்டிருக்கும் புத்தகம் போன்ற பலவிதமான தகவல்கள் அதில் இருக்கும். சில வித்தியாசமாக இருக்கும். வாசகர்களுக்கு அந்தப் பகுதியைப் படித்துப் பார்ப்பதில் தனி ஆர்வம் உண்டு.
 அதில் இர்விங் என்பவர் 1991-ல் ஒரு விளம்பரம் கொடுத்தார்: ஹென்ரீட்டா, என்னை நினைவிருக்கிறதா 1938-ல் நாம் சந்தித்தோம். காதலித்தோம் தயவு செய்து தொடர்புகொள். என் தொலைபேசி எண் ......... பொதுவாக இப்படிப்பட்ட விளம்பரங்களில் தபால் பெட்டி எண்ணே குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் இர்விங் தன் வீட்டுத் தொலைபேசி எண்ணையே கொடுத்திருந்தார்.
 இதைப் பார்த்த ஒரு பெண் நிருபருக்கு இந்த மனிதர் கலாய்க்கிறாரோ என்ற சந்தேகம் வந்தது. ஏனென்றால் இந்த வகை விளம்பரத்திற்குக் கட்டணம் அதிகம். இவ்வளவு அதிகக் கட்டணம் செலுத்தி தமாஷ் செய்யமாட்டார்கள் என்று நினைத்தாலும் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு ஒரு காதலன் தன் காதலியை இப்படிப் பெயர் குறிப்பிட்டு விளம்பரம் கொடுத்துத் தேடுவாரா என்ற சந்தேகம் வந்தது. ஆர்வத்தை அடக்கமுடியாமல் அந்தக் கிழவரை மறுநாள் தொலைபேசியில் அழைத்தார்.
 தான் அவர் தேடும் காதலி என்று நினைத்துவிடக் கூடாது என்பதற்காக எடுத்த எடுப்பில் நான் அவளில்லை என்று சொல்லிவிட்டு, ""என்ன விஷயம் பெரியவரே?'' என்று கேட்க, அவர் ஹென்ரீட்டாவைக் காதலித்ததையும் அவளுக்கு அப்போது வயது 17 என்பதால் அவளது தேர்வு சரியாக இருக்காது என்று கருதிய பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. அந்தப் பெண்ணின் பெற்றோர் அவளை ஐரோப்பாவில் அவளது அத்தை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள் என்பதையும் சொன்னார். இர்விங் வேறு ஒருத்தியை மணந்து கொண்டாலும் ஹென்ரீட்டாவை மறக்க முடியாமல் தவித்தார். ஹென்ரீட்டாவும் யாரோ ஒருவரை மணந்து கொண்டாள் என்று தெரிந்துகொண்ட காதலர், மனைவி சமீபத்தில் காலமானதும் என்றாவது ஒருநாள் காதலியை மீண்டும் சந்திக்கமாட்டோமா? என்ற ஆசையில் அந்த விளம்பரத்தைக் கொடுத்திருக்கிறார்.
 இந்தத் தகவல்களைத் தெரிந்து கொண்ட பெண் நிருபர் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு காதலியைத் தேடும் பெரியவர் என்று தன் பத்திரிகையில் ஒரு செய்தியாக வெளியிட விரும்பினார்.
 பத்திரிகை ஆசிரியர் அதை அனுமதிக்கவில்லை. ஆனாலும் பெரியவரின் தவிப்பு நிருபரைத் தொற்றிக் கொண்டது. அவ்வப்போது பெரியவரைத் தொடர்பு கொண்டு காதலி கிடைத்தாளா? என்று கேட்டுக்கொண்டிருந்தார். ஒன்றும் தெரியவில்லை என்ற வருத்தம் தோய்ந்த பதில்தான் வந்தது.
 ஒருநாள் நியூயார்க் புறநகர் ரயில் பயணத்தின்போது பெண் நிருபர் அந்தத் தனிநபர் விளம்பரப் பகுதியை உன்னிப்பாகப் படித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி, ""என்ன பெண்ணே, உன்னைப் பார்த்தால் இப்போதுதான் கல்யாணமானது போல் இருக்கிறது. புருஷன் அலுத்துப் போச்சா, வேறு புருஷனைத் தேட இந்தப் பகுதியில் படிக்கிறாயா? என்று கிண்டல் செய்தார். பெண் நிருபர் அதற்காகக் கோபித்துக் கொள்ளாமல், ""நீங்கள் இந்தப் பகுதியைப் படிப்பதில்லையா?''
 என்று கேட்க, ""இல்லை, அதெல்லாம் சோகமாக இருக்கும். எனவே படிப்பதில்லை'' என்றார் மூதாட்டி.
 இர்விங் தன் காதலி ஹென்ரீட்டாவைத் தேடுவதாகச் சொல்லி ஹென்ரீட்டா இப்போது உயிருடன் இருக்கிறாளோ இல்லையோ, இந்த ஊரில்தான் இருக்கிறாளோ இல்லையோ, அப்படியே இருந்தாலும் அவள் இந்தப் பகுதியை வழக்கமாக படிக்காதவளாக இருக்கலாமோ? என்னவோ? என்று இர்விங் சார்பாக அந்தப் பெண் நிருபர் வருத்தத்துடன் சொன்னார்.
 அந்த மூதாட்டி பெண் நிருபரின் தோளை அழுத்தி, ""பெண்ணே மூன்றாவது காரணம்தான் நிஜம். அது சரி, உன்னிடம் அவரது தொலைபேசி எண் இருக்கிறதா?'' என்று கேட்டார். அட...
 நம்பிக்கை இருந்தால் தேடுவது கிடைக்கும். சமயங்களில் அருகே இருப்பதை எங்கெங்கோ தேடுவோம்.

 கதையல்ல நிஜம்...
 நிஜம் கற்பனையை விஞ்சும் அளவுக்கு வினோதமானது.
 சுவாரசியமானது. இதோ ஒரு சம்பவம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.