எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தகிக்கும் வெயிலைத் தணிக்க...

வெயில் காலத்துக்கு இளநீர் ஒரு வரப்பிரசாதம். குறிப்பாக வெயிலில் பணி நிமித்தமாக அலைந்துகொண்டிருப்பவர்கள் இளநீர்

News image
Updated On :9 ஜூன் 2013, 5:11 am

கத்திரி வெயில் காலம் முடிந்தாலும், சுட்டெரிக்கும் வெயிலின் கொடுமை இன்னும் நீங்கியபாடில்லை.

வெயிலின் உக்கிரத்தைத் தணிக்க இதோ சில வழிகள்:

*  வெயில் காலத்துக்கு இளநீர் ஒரு வரப்பிரசாதம். குறிப்பாக வெயிலில் பணி நிமித்தமாக அலைந்துகொண்டிருப்பவர்கள் இளநீர் குடிக்கலாம். இளநீரில் கொஞ்சம் சீரகம் போட்டு ராத்திரியே ஊறவைத்துவிடுங்கள். காலையில் குடித்தால் வயிற்றுச் சூட்டுக்கு ரொம்பவும் நல்லது. உடம்பு குளிர்ந்துவிடும். வேர்க்குருவையும் போக்கும். இளநீரோடு தேங்காயையும் குழைத்து வேர்க்குரு வந்த இடத்தில் தடவினால் எரிச்சல் போகும்.

*  ஜன்னல்களிலும் நிலைப்படியிலும் வெட்டி வேர் தட்டியைத் தொங்கவிடுங்கள். வெயில் வருவதற்கு முன் தண்ணீர் தெளித்து வையுங்கள். ஏ.ஸியே வேண்டாம். குளுமைக்கு குளுமை; ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்!

*  மாதுளம் இலையை அரைத்துப் பூசிக் குளிப்பதனாலும் வேனல் கட்டிகள், வியர்க்குரு நீங்கும். மாதுளம், துளசி இலைகள் சிறந்த கிருமிநாசினிகள்.

*  தர்ப்பூசணி பழம் கோடையில் கிடைக்கும் பழம். இப்பழத்தில் நீர்ச்சத்து அதிகம் எனவே கோடையில் ஏற்படும் நீரிழப்பை ஈடுகட்டும். உடல் சூடு, கோடைக் கட்டி, மலச்சிக்கலை நீக்கும்.

*  முலாம்பழம் எனப்படும் கிர்ணிப் பழம் கோடையில் ஏற்படும் களைப்பை நீக்கி சக்தியை அளிக்கிறது. நீர்சுருக்கை குணப்படுத்தும். உடல் வெம்மையைத் தணித்து குளிர்ச்சியை ஊட்டும்.

*  எலுமிச்சைச் சாறு வெம்மையை தணிக்கும். எலுமிச்சை சாறில் உப்பு சேர்த்து அருந்த மயக்கம், பித்தம், தொண்டை சூடு மாறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.