புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

புள்ளிகள்

பாலியல் வன்கொடுமைக்குத் தீர்வு காண அமைக்கப்பட்ட நீதியரசர் ஜெ.எஸ்.வர்மா கமிட்டி - அறிக்கையொன்றை சமர்ப்பித்தது.

News image
Updated On :2 மார்ச் 2013, 6:51 am

ந. ஜீவா

சட்டம் மட்டுமே தீர்வல்ல!

பாலியல் வன்கொடுமைக்குத் தீர்வு காண அமைக்கப்பட்ட நீதியரசர் ஜெ.எஸ்.வர்மா கமிட்டி - அறிக்கையொன்றை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை நடைமுறைக்கு எப்படிக் கொண்டு வரலாம் என்பதற்கு ஆலோசனை சொல்ல அமெரிக்காவில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகம் ஒரு குழுவை அமைத்திருக்கிறது. அந்தக் குழுவின் தலைவர் ஜாக்குலின் பாபா. பாலியல் குற்றங்களைத் தடுக்க என்ன செய்யலாம்? வர்மா கமிட்டியின் அறிக்கையை எந்த அளவுக்கு நடைமுறைக்குப் பொருந்தும்? என்பதைப் பற்றியெல்லாம் அவர் பேசுகிறார்:
 
 ""நாங்கள் இந்தக் குழுவை அமைத்திருப்பது இத்துறையில் நாங்கள் பெற்ற அனுபவங்களிலிருந்தும் ஆய்வுகளிலிருந்தும் சில பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே.
 ஏனென்றால் வர்மா கமிட்டியின் அறிக்கை தயாரிப்பே நல்ல நிபுணத்துவத்துடன்தான் உள்ளது. தேசியவாத கண்ணோட்டத்தைப் பாதுகாக்கும்விதமாக அது இல்லை என்பது அதன் சிறப்பு.
 பெண்களின் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர வேண்டிய நேரம் இது. பொதுமக்களிடம் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
 ஆனால், வர்மா கமிட்டி சமர்ப்பித்துள்ள அறிக்கைக்கும் கூட சில எல்லைகள் இருக்கத்தான் செய்கின்றன.
 நிகழ்ந்துவிட்ட பாலுறவு வன்கொடுமைக்கு பழி வாங்கும்ரீதியில் செயல்படக் கூடாது.
 பாலியல் கல்வி, ஆண் - பெண் உறவு போன்றவற்றைப் பற்றியும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது.
 பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான குடும்பம் அதை மிக மிக இழிவாகவும், அவமானமாகவும் கருதுகிறது. இப்படிக் கருதுவதை மாற்ற வேண்டிய தேவையும் உள்ளது.
 பாலியல் வன்முறையின் போது வன்முறைக்குள்ளானவரின் ஒப்புதலுடன் அது நடந்ததா? அல்லது கட்டாயமாக அந்த வன்முறை திணிக்கப்பட்டதா? என்பதை அறிவதில் தெளிவான எல்லைகள் இல்லாமல் போய்விடுகிறது. அதை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.
 வறுமை என்பது தலைக்கு அருகில் உள்ள துப்பாக்கி போல. சிலர் வறுமையின் காரணமாக பாலியல் தொழிலுக்குப் போய்விடுகிறார்கள். சிலர் குழந்தைகளை விற்கிறார்கள். இவற்றை எப்படி மதிப்பிடுவது? என்பது சிக்கலான செயலாகும்.
 அதுபோல திருமணத்துக்கு முன்பான பாலுறவு விஷயங்களைப் பற்றியும் யோசிக்க வேண்டியுள்ளது. ஆண் பிள்ளைகளுக்கு அது ஆண்மையுள்ள செயல். பெண்கள் தப்பித் தவறி விழ நேர்ந்தால் அதைப் பற்றிய பார்வைக் கோணம் வேறாகிறது. அப்பெண்ணை விலைமகளைப் போல பார்க்கிறார்கள். எனவே இவையெல்லாம் சமூகத்தில் நிலவும் மதிப்பீடுகள் தொடர்பானவை.
 எனவே எந்த விஷயத்துக்கும் சட்டம் மட்டுமே முழுத் தீர்வாக இருக்க முடியாது. சட்டங்கள் வானத்தில் இருந்து குதித்துவிடுவதில்லை. அவை அரசியல் விருப்பங்களின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகின்றன. அதற்குரிய தன்மைகளுடன் அவை இருக்கின்றன. அரசியல் தவிர, சமூகத்தின் அடிமட்டத்தில் பல்வேறு கருத்துகளை, மதிப்பீடுகளை உருவாக்குவதில் பண்பாட்டு இயக்கங்களுக்கும் நிறைய சவால்கள் காத்திருக்கின்றன'' என்கிறார் ஜாக்குலின் பாபா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.