""என்ன தினமும் கிச்சன்ல போய் சர்க்கரை பாட்டிலை திறந்து பிறகு மூடிட்டு வர்றீங்க...?''
""டாக்டர் தினமும் சுகர் செக் பண்ணனும்னு சொன்னாரு. அதான்!''
""யார்டா அது! தென்ன மரத்துல ஏறி தேங்காய் பறிக்கிறது?''
""நான் ஊருக்குப் புதுசு...வழி தெரியாம ஏறிட்டேனுங்க?''
""!...!...!''
குலசை நஜ்முதீன்
அவள்: அத்தான் பாஸ் பண்ணுனதே என்னாலதான்னு எப்படிச் சொல்றீங்க மாமா?
மாமா: அவன் பெயில் ஆகிட்டா உனக்கும் அவனுக்கும் கல்யாணம்னு சொல்லி பயமுறுத்தி வச்சிருந்தேன்.
""நான் துபாய் போய் வரலாம்னு நினைக்கிறேன். எவ்வளவு செலவாகும்?''
""நினைக்கிறதுக்கெல்லாம் ஒண்ணும் செலவாகாதுங்க!''
போளூர் சி.ரகுபதி
""என்ன சார்...பொம்பளைங்க மாதிரி டி.வி. சீரியலை பார்த்து அழுதுட்டு உட்கார்ந்து இருக்கீங்க?''
""அட...இது சீரியல் இல்லங்க என் கல்யாண சி.டி.''
ர.ராஜ்குமார், திருவெறும்பூர்
""கணக்குல 35 மார்க் போட்டிருக்கீங்களே...நூற்றுக்கா, ஐம்பதுக்கா சார்?''
""அது உன் மேல இருக்கிற பரிதாபத்துக்கு!''
எஸ்.ஏ.கேசவன், கழுகாசலபுரம்.
மகன்: அப்பா! எங்க காதலுக்கு தடை போடாதீங்க. எங்க காதல் தெய்வீகக் காதல்!
அப்பா: அது என்னடா தெய்வீகக் காதல்?
மகன்: என் பெயர் பரமசிவம். என் காதலி பெயர் பார்வதி. அதை வெச்சுத்தான்!
""உங்க மனைவிக்காக முன்பெல்லாம் பால் காவடி எடுப்பீங்களே, இப்பவும் உண்டா?''
""இப்ப அன்னக்காவடி எடுக்கிறேன்''
""நேற்று எங்க ஆபீஸ்ல மேனேஜர் தூங்கிக் கொண்டு இருக்கும்போது அவர் ரூமுக்குள்ளே போயிட்டேன்! கன்னா பின்னான்னு திட்டிட்டாரு...''
""அய்யோ...அப்புறம் என்னாச்சு?''
""ஸôரி சார். எனக்கு தூக்கத்துல நடக்குற வியாதின்னு சொல்லி சமாளிச்சேன்''
ச.ஹேமலதா, திருச்சி.
""செல் நம்பர மாத்தாமலேயே செல்லை மாற்றிக்கலாம்''
""அப்ப வேலூரில் இருந்த அதே செல் நம்பருக்குப் புழல்லேயும் மாறிக்கலாமா?''
எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி
""நீங்க வியாபாரம் ஆரம்பிக்கிறதுக்கு எதுக்கு எங்கிட்ட பணம் கேக்கறீங்க?''
""நீங்க முதல்- உதவி செய்வீங்கன்னு சொன்னாங்க டாக்டர், அதான்!''
சி. விஜயாம்பாள், கட்டிகானப்பள்ளி
""இந்தக் கோர்ட்டில் நீ ஏதும் சொல்ல விரும்புகிறாயா கபாலி?''
""இருந்தாலும் தங்கத்தின் விலையை இப்படி திடுதிப்புன்னு குறைச்சிருக்க வேண்டாம் எசமான்''
அமுதா அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி
""அந்த பாகவதர் ஒவ்வொரு கச்சேரியிலும் ரொம்ப பயத்தோடு பாடுவார்''
""பாட்டு நல்லா வரணும்ன்னா?''
""இல்ல...பாடிட்டு நல்லபடியா வரணும்னு''
எச்.சீதாலெட்சுமி, கொச்சி.
""இன்னையிலிருந்து உனக்கு அப்பாயின்ட்மென்ட்! இந்த ஆஃபிஸ்ல என்னை மேனேஜரா நினைக்காம, உன் பிரண்டு மாதிரி நினைச்சு சோஷியலா பழகணும்! புரியுதா!''
""புரியுது மச்சி!''
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை
""டாக்டர்! எனக்கு ஞாபக மறதி அதிகமா இருக்கு...அப்புறம்''
""அப்புறமெல்லாம் இருக்கட்டும். முதல்ல ஃபீûஸ குடுத்துட்டு அப்புறமா பேசுங்க''
க.சரவணகுமார், திருநெல்வேலி
""அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்ற?''
""சில்லறை இல்லை அதுக்கு பதிலா ஒரு ஊசி போடவான்னு கேக்கறாரு!''
செல்.பச்சமுத்து, மேட்டுச்சேரி.
டாக்டர்: என்னம்மா கன்னம் இப்படி வீங்கியிருக்கு?
அவள்: ஒண்ணுமில்லே. கொசு கடிச்சுதுன்னு கன்னத்தில அடிச்சதாலே!
டாக்டர்: அதுக்காக இப்படியா?
அவள்: அடிச்சது என் மருமகளாச்சே!
""உங்க கட்சிதான் உருப்படலையே ஏன் இன்னும் அதை கட்டிகிட்டு அழறீங்க?''
""30 வருஷமா உன்னை கட்டிட்டு அழலையா?''
கே.நடராஜன், திருவண்ணாமலை
""என்ன சார் நீங்க மூணாவது பந்தியிலும் உட்கார்ந்து சாப்பிடுறீங்க''
""உனக்கு ஞாபக சக்தி அதிகம், எனக்கு ஜீரண சக்தி அதிகம்பா''
ஆர்.எம்.நடராஜன், சாக்கோட்டை
""இன்னைக்கு எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் சண்டை''
""கோபத்தில சாப்பிடாம போயிட்டாரா?''
""இல்லை. சமைக்காம போயிட்டாரு''
""அம்மாடி! நல்ல புத்தகம் கொடுத்தே போ...சிரிச்சு சிரிச்சு பாதி உசுரே போயிடிச்சு''
""அப்படின்னா இன்னும் ஒருமுறை படிங்க அத்தை''
சி.ஆர்.ஹரிஹரன், கொச்சி.
""படிச்சு படிச்சு சொன்னாலும் என் பையன் காது கொடுத்து கேட்க மாட்டேங்கிறான் என்ன பண்றது?''
""அப்படின்னா ஒரு தடவை படிக்காமல் சொல்லிப் பாரேன்!''
ஆர்.விஸ்வநாதன், சென்னை.
"உங்க வீட்டு கொசுவெல்லாம் உடன் பிறப்புக்களா எப்படி?''
""அதுங்க உடம்புல ஓடுறது எங்க குடும்ப ரத்தம்தானே!''
போ.வெங்கடலெட்சுமி, குருமலை
""நான் மார்டன் பிச்சைக்காரன்''
""அதனால...''
""அம்மா... தாயே... பீட்சா போடுங்க''
சுரா மாணிக்கம் கந்தர்வக்கோட்டை
ஒருவர்: உங்களுக்கு காது கேட்காதா?
சர்வர்: ஏன் கேட்கிறீர்கள்?
ஒருவர்: "வேகமா' கொண்டு வரச்சொன்னா "வேகாம' கொண்டு வந்திருக்கிறீர்களே!
எஸ்.பொருநை பாலு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைது!

தீபாவளி வெளியீடாக சூர்யா - 47?
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



