கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

போனஸ் 100 மில்லியன் டாலர்

கூகுள் நிறுவனம் சமீபத்தில் ஒரு தமிழருக்கு 100 மில்லியன் டாலர் போனஸ் கொடுத்து தன் நிறுவனத்திலேயே தொடர்ந்து

News image
Updated On :26 மே 2013, 5:56 am

ராஜிராதா

கூகுள் நிறுவனம் சமீபத்தில் ஒரு தமிழருக்கு 100 மில்லியன் டாலர் போனஸ் கொடுத்து தன் நிறுவனத்திலேயே தொடர்ந்து வேலை செய்யும்படி கேட்டுக்கொண்டது. இல்லாவிட்டால் டிவிட்டர் நிறுவனம் அவரைக் கொத்திக் கொண்டு போய்விடுமாம்! அவர் நீல் மோகன்.

இவருடைய வேலை கூகுள் நிறுவனத்தின் Display Advertisement பகுதியின் தலைமை நிர்வாகி. திட்டமிடுதல், செயல்படுத்துதல் எல்லாம் இவர் பொறுப்பு! இதன் மூலம் 2013-ஆம் ஆண்டு கூகுளுக்கு 7 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும் என கணிப்பு.

100 மில்லியன் டாலர் போனûஸ, தன் நிறுவனத்தின் ஷேர்களாக கொடுத்துள்ளது கூகுள். இதனை நீல் மோகன் விரும்பினால் 3 வருடத்திற்குப் பின் பணமாக்கிக் கொள்ளலாம்.

கலிபோர்னியா மாநிலத்தில் வசிக்கும் இவருக்கு ஒரு மகன், ஒரு மகள். மகள் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறார். நீல் மோகனின் மனைவி ஹேமா ஒரு குறிப்பிட்ட பகுதியின் கலெக்டர். அதுமட்டுமல்ல ஜோஸ் மிட்டன் என்ற டெமாகரெடிக் கட்சி செனட்டரின் அதிகாரபூர்வ அறிவிப்பாளர்.

நீல் மோகன் தென்காசி

அருகே உள்ள 24,000 மாற்றுத்திறனாளி குழந்தைகளின் படிப்பு, ஆரோக்கியம், தொழிற்பயிற்சி,வேலை ஆகியவற்றிற்கு உதவி வருகிறார்.

இன்னொரு தமிழர் சுந்தர் பிச்சை. இவருக்கு 50 மில்லியன் டாலர் போனஸ் கொடுத்து பாதுகாத்து வருகிறது கூகுள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.