பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தீபாவளிக்கு பட்டுப் புடவை வாங்கினீங்களா?

நிறைய ஜரிகை உள்ள பட்டுப் புடவைகளை அடிக்கடி அதீத சூட்டில் அயர்ன் செய்யக்கூடாது. அப்படி செய்தால் ஜரிகைகள் சூடு தாங்காமல் கறுத்துப் போகும். அதுபோல

News image
Updated On :26 அக்டோபர் 2013, 11:15 pm

கீதா ஹரிஹரன்

1. நிறைய ஜரிகை உள்ள பட்டுப் புடவைகளை அடிக்கடி அதீத சூட்டில் அயர்ன் செய்யக்கூடாது. அப்படி செய்தால் ஜரிகைகள் சூடு தாங்காமல் கறுத்துப் போகும். அதுபோல பட்டுப் புடவைகளை ஸ்டீல் பீரோவைவிட மர பீரோவில் வைத்தால் என்றும் புதியதுபோல பல வருடங்கள் இருக்கும்.

2. விலை அதிகம் கொடுத்து வாங்கும் பட்டுப் புடவையைத் தரமாகப் பராமரிக்க வேண்டும். விசேஷங்களுக்குச் சென்று வந்தவுடன் பட்டுப் புடவையைக் களைந்து உடனே மடித்து வைக்கக்கூடாது. நிழலில் காற்றாட சில மணி நேரங்கள் உலரவிட வேண்டும். அல்லது கையினால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்கவும்.

3. மலிவு விலையில் கிடைக்கும் வெள்ளை நிற பருத்தித் துணியில் பைகளாகத் தைத்து அதில் பட்டுப் புடவைகளைப் போட்டு பராமரித்தால் ஜரிகை கறுக்காமல் இருக்கும். பயணத்தின்போது எளிதாகவும் சௌகரியமாகவும் கொண்டு செல்ல உதவும்.

4. எக்காரணம் கொண்டும் பட்டுப் புடவையைச் சூரிய ஒளியில் வைக்கக் கூடாது. சோப்போ, சோப் பவுடரோ உபயோகித்துத் துவைக்கக் கூடாது. வெறும் தண்ணீர் விட்டு அலசினாலே போதுமானது.

5. பட்டுப் புடவையை மாதத்திற்கு ஒருமுறை, மடித்து வைத்ததற்கு எதிர்ப்புறமாக மடித்து வைக்க வேண்டும்.

6. பட்டுப் புடவையில் ஏதாவது கறை பட்டுவிட்டால் உடனே தண்ணீர் விட்டு அலச வேண்டும். எண்ணெய்க் கறை இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதியைத் தடவி பத்து நிமிடங்கள் வைத்திருந்து பின்பு தண்ணீர்விட்டு அலச வேண்டும். சாதாரண கறைகள் ஏதேனும் இருப்பின் அந்த இடத்தில் மட்டும் சிறிது எலுமிச்சைச் சாறுவிட்டு கறையை நீக்கிவிட்டு உலர்த்தவும்.

7. பட்டுப் புடவைகளை அடித்து பிரஸ் போட்டு துவைக்கக்கூடாது. முதலில் அலசும்போது உப்பு போட்ட குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் சாயம் கெட்டிப்பட்டு பட்டுப்புடவை நீண்டநாள் உழைக்கும்.

8. பட்டுப் புடவைகளை வருடக்கணக்கில் தண்ணீரில் நனைக்காமல் வைக்கக் கூடாது. ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலரவிட்டு அயர்ன் செய்து வைக்க வேண்டும்.

9. பட்டுப் புடவைகளைத் துவைக்கும்போது பொடித்த பூந்திக் கொட்டைகளை உபயோகிக்கலாம். காரமான சோப் கூடவே கூடாது. இறுதியில் மண்ணெண்ணெய் கலந்த நீரில் அலசி எடுத்தால் சாயம் போகாமலும் பூச்சி வெட்டாமலும் இருக்கும்.

10. பட்டுப் புடவைகளை அயர்ன் செய்யும்போது ஜரிகையைத் திருப்பி அதன்மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன்  செய்யக்கூடாது.

11.  பட்டுப் புடவைகளை தண்ணீரில் நனைப்பதைவிட ட்ரைவாஷ் செய்வதே நல்லது.

12. பட்டுப் புடவையைக் கடையிலிருந்து வாங்கி வந்தபடி அட்டைப் பையில் வைக்காமல் துணிப்பையில் வைக்க வேண்டும்.

13. பாசிப் பருப்பை ஊறவைத்து நீர் விட்டு அரைத்து பட்டுப்புடவையின் கறை உள்ள இடத்தில் தேய்த்து அலசினால் கறை நீங்கி விடும்.

14. பட்டுப் புடவையில் துருக்கறைபட்டால் ஆக்சாலிக் ஆசிட் கிரிஸ்டல்ஸ் வாங்கி துருபிடித்த இடத்தில் தேய்த்து வெயிலில் வைத்தால் துருக்கறை மாயமாய் மறைந்துவிடும்.

15. இரசக் கற்பூர உருண்டைகளைப் பயன்படுத்தக் கூடாது. தரமான ஷாம்பு போட்டு, கைகளால் துவைத்து சிறிது கஞ்சி போட்டு நிழலில் காய வைத்துப்பின் இஸ்திரி செய்தால் புதியதுபோல் பளபளக்கும்.

16. ஆறு கிராம்புகளை பழைய துணியில் சிறு மூட்டைபோல் கட்டி, ஜரிகை உள்புறமாக இருக்குமாறு மடித்து வைக்கப்பட்ட பட்டுப் புடவைகளுக்கு இடையில் வைத்தால் பட்டு பழுதடையாமல், பூச்சி அரிப்பு ஏற்படாமல் புடவையைப் பாதுகாக்கலாம்.

17. முதல் தரம் பட்டுப் புடவையை அலசும்போது பக்கெட் தண்ணீரில் கொஞ்சம் கல் உப்பு போட்டு அதில் ஒரு ஐந்து நிமிஷம் பட்டுப் புடவையை முக்கி வைத்து அலசுங்கள். பட்டுப்புடவையின் எக்ஸ்ட்ரா சாயம் எல்லாம் நீங்கிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.