2கற்பனைகள்! இணையதளத்தில் இல்லாதது எது?
நல்லதும் கெட்டதும், அழகும், அருவருப்பும், முன்னேற்றத்துக்குரியதும், சீரழிப்பதும் என எல்லாம் இணைய தளங்களில் கொட்டிக் கிடக்கின்றன.


நல்லதும் கெட்டதும், அழகும், அருவருப்பும், முன்னேற்றத்துக்குரியதும், சீரழிப்பதும் என எல்லாம் இணைய தளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. யாருக்கு என்ன பிடிக்கிறதோ, எது தேவையோ அதை எடுத்துக் கொள்ளலாம். அமெரிக்க அதிபர் ஒபாமாவைத்
தொடர்பு படுத்தி இணைய தளங்களில் நிறையச் செய்திகள், நகைச்சுவைகள், தகவல்கள் வருகின்றன.
இதோ ஒபாமாவைப் பற்றிய இரண்டு நகைச்சுவையான கற்பனைகள்:
தன்னைப் பொருட்படுத்தாத கணவனைத் தாக்கும்படி இந்தியப் பெண் ஒபாமாவிடம் வலியுறுத்தல்!
புதுதில்லி: தான் சொல்வதையோ, பேசுவதையோ தனது கணவன் கவனிப்பதில்லை என்றும், எனவே இந்தச் செயலின் மூலம் மனைவியான தனது மனித உரிமையை அவன் மீறிவிட்டான் என்றும் எனவே அவனுக்குத் தண்டனை கொடுக்கும்விதத்தில் அவனைத் தாக்க வேண்டும் என்றும் திலக் நகரைச் சேர்ந்த ஒரு பெண் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
தனக்குத் திருமணம் ஆன மூன்று வருடங்களில் தனது கட்டளைகளுக்குக் கீழ் படிய இதுவரை மூன்று முறை அந்தப் பெண்ணின் கணவன் மறுத்துவிட்டானாம். அப்படி அவன் மறுத்ததை எதிர்த்து, அவள் அவனிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும், பூரிக்கட்டையால் அவனைத் தாக்கியதாகவும், ஆனாலும் அவன் அதைப் பற்றிச் சிறிது கூட வருத்தப்படவில்லை என்றும் அவள் அந்த மின்னஞ்சலில் குற்றம் சாட்டியிருந்தாள்.
இந்த மின்னஞ்சலைப் படித்த ஒபாமா, "சஞப ஆஅஈ' என்று கூறியதாகத் தெரிகிறது.
மூன்று முறை பூரிக் கட்டையால் அவனைத் தாக்கியதால் - அவன் கோபமடைந்து - அவள் மீது ஏ2ஞ (தண்ணீரை) வை வீசியதாகவும் கூறியிருக்கிறாள். இது வகைப்படுத்தப்படாத உயிரி வேதி ஆயுதத் தாக்குதல் என்றும் அது அவளுக்கு மிகக் கடுமையான அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திவிட்டதாகவும் அந்த மின்னஞ்சலில் அவள் மேலும் குறிப்பிட்டிருக்கிறாள்.
இந்தச் சம்பவம் பற்றி தனது நெருங்கிய தோழியிடம் அவள் கூறியதாகவும், அவள்தான் ஒபாமாவுக்குக் கடிதம் எழுதப் பரிந்துரைத்தாள் என்றும் அந்தப் பெண் மேலும் குறிப்பிட்டிருக்கிறாள்.
""இரண்டு நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளை அல்லது ஓர் அரசாங்கத்துக்கும் கலகக்காரர்களுக்கும் இடையே ஏற்படும் தகராறுகளை மட்டுமல்ல, ஒரு வீட்டுக்குள் கணவன் -மனைவிக்கு இடையே நடக்கும் தகராறுகளைக் கூடத் தீர்த்து வைக்கும்படி ஒபாமாவுக்கு எழுதலாம். அதில் எந்தப் பிரச்னையும் இல்லை'' என்று ஒபாமாவுக்குக் கடிதம் எழுதச் சொன்ன அவளுடைய தோழி வற்புறுத்தியதாகவும் தெரிகிறது.
ஒபாமாவுக்கு எழுதும் அந்தக் கடிதத்தில் 64 நண்பர்களின் கையெழுத்துகளையும் கூட வாங்கி அனுப்பலாம் என்றும் தோழி அவருக்கு அறிவுரை சொல்லியிருக்கிறார். ஆனால் அதைக் கேட்காமல் ஒபாமாவுக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக அந்தப் பெண் குறிப்பிட்டிருக்கிறார்.
""அமெரிக்கா ஒருவரைத் தாக்க எந்தக் காரணமும் சொல்வதில்லை. ஆனால் நான் என் கணவரைத் தாக்க அப்பழுக்கில்லாத காரணத்தை வைத்திருக்கிறேன் - ஆம்... அவர் என்னைத் தாக்க உயிரி, வேதி ஆயுதங்களைப் பயன்படுத்தியது'' என்று செய்தியாளர்களிடம் மின்னஞ்சல் அனுப்பிய பெண் கூறினார். ""எந்தவொரு ஜனநாயக நாட்டிலாவது ஒரு கணவன் தனது மனைவியின் கட்டளைக் கேட்டுக் கீழ்படிந்து நடக்காததைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?'' என்று அவர் மேலும் கேட்டார்.
""எனது கணவர் ஒரு கார் வைத்திருக்கிறார். இரண்டு பைக் வைத்திருக்கிறார். அவற்றின் பெட்ரோல் டேங்குகள் முழுக்க பெட்ரோலை நிரப்பி வைத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, ஒரு பிளாஸ்டிக் கேனில் 10 லிட்டர் பெட்ரோலை ஸ்டாக் வைத்திருக்கிறார். பெட்ரோல் விலை ஏறிவிடும் என்பதற்காக இப்படியெல்லாம் செய்கிறார். அமெரிக்க அதிபர் தனது வீட்டுப் பிரச்னைகளில் தலையிடுவதற்கு இதுபோன்ற உறுதியான காரணங்கள் இருக்கின்றன'' என்றும் அவர் கூறியுள்ளார்.
சற்றுமுன் வந்த தகவல்: அந்தப் பெண்ணின் மின்னஞ்சலின் மீது மிக விரைவாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
65 எம்பிக்களின் ஆதரவுடன் அடுத்த இந்தியப் பொதுத் தேர்தலில் ஒபாமா போட்டி!
வாஷிங்டன்: 65 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் ஒபாமா ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். அதைத் தொடர்ந்து இந்திய அரசியலில் மிக ஆர்வமாகவும் ஈடுபட முடிவெடுத்துள்ளார் ஒபாமா.
""என் மேல் சில இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வளவு ஆழமான நம்பிக்கை வைத்திருப்பது எனக்கு இதுவரை தெரியாமலிருந்துவிட்டது. அவர்கள் என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை என் உள்ளத்தைத் தொட்டுவிட்டது'' என்று 65 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தைப் படித்துவிட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
""அமெரிக்காவில் ஒருவர் மூன்றாவது தடவை பிரசிடென்ட் பதவிக்குப் போட்டியிட முடியாது. இந்தியாவிலோ வெளிநாட்டுக்காரர் தேர்தலில் போட்டியிடுவதற்கு எந்தத் தடையுமில்லை. எனவே எனது அரசியல் செயல்பாடுகளை இந்தியாவில் வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்திருக்கிறேன்'' என்று செய்தியாளர்களிடம் ஒபாமா கூறினார்.
ஒபாமா இந்திய அரசியலில் குதித்தால் அவர்தான் மிக இளைய தலைவராக இருப்பார் என்று அவரிடம் சொன்னபோது, அவரால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
""என்னால் நோபல் பரிசு கூட பெற முடியும். அமர்த்தியா சென் என்னை எதிர்த்தாலும் கூட'' என்று அவர் மேலும் கூறினார்.
ஒபாமாவிடம் ஒரு சிறிய அனுமார் சிலை இருப்பதாகவும் இதை வைத்து அவரை மதவாதி என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்ட வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் சிலர் கூறியுள்ளனர்.
இந்திய ஐடி துறையினர் அமெரிக்காவுக்குச் செல்வதற்கான விசா வழங்கப்படும் என்று ஒபாமா அறிவித்திருக்கிறார். இது நகர்ப்புறங்களில் உள்ள ஐடித் துறையினரின் வாக்குகளைப் பெற பயன்படும் என்று தெரிகிறது.
ஒபாமா தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அமெரிக்க உச்சரிப்புடன் இந்தியில் பேசி மக்களை அசத்தப் போவதாகவும், அதனால் ஏராளமான வாக்குகள் பெற்று வெற்றியடைய வாய்ப்பிருப்பவதாகவும் ஒபாமாவின் அந்தரங்க ஆலோசகர் தெரிவித்து இருக்கிறார்.
கற்பனை, குறும்பு, கொஞ்சம் சீரியஸ்...
கலக்குகிறார்கள், போங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...