தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நடிப்புக்கு வயது முக்கியமல்ல: மாதுரி தீட்சித்

பாலிவுட் நடிகைகள் திருமணத்திற்குப் பின்பு நடிப்பதும், மீண்டும் பழைய இடத்தைப் பிடிக்க நினைப்பதும் இயலாத காரியம்

News image
Updated On :6 ஏப்ரல் 2014, 4:26 am

பூா்ணிமா

பாலிவுட் நடிகைகள் திருமணத்திற்குப் பின்பு நடிப்பதும், மீண்டும் பழைய இடத்தைப் பிடிக்க நினைப்பதும் இயலாத காரியம் என்று கூறுவதுண்டு. என்னைப் பொருத்தவரை 20 வயதானாலும் 80 வயதானாலும் அந்தந்தப் பருவத்திற்கேற்ப திறமையை வெளிப்படுத்தலாமென்றே கருதுகிறேன். திருமணமான நடிகைகளுக்கு மீண்டும் வாய்ப்புக் கிடைப்பதில்லை என்பதையும் ஒப்புக்கொள்ள மாட்டேன். அது ஒரு தவறான கருத்து. ராக்கி, ஷர்மிளா தாகூர் போன்றவர்கள் திருமணத்திற்குப் பின்பும் நடித்து வந்தனர். ஒரு சிலர் திருமணத்திற்குப் பிறகு நடிக்கக் கூடாது என்று எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை'' என்று கூறும் மாதுரி தீட்சித் திருமணமானவுடன் கணவர் டாக்டர் ஸ்ரீராம் நினேவுடன் அமெரிக்காவில் குடியேறினார். மும்பை திரும்பி நடிக்கவும் ஆரம்பித்துவிட்டார்.

தற்போது திரையுலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அவர் என்ன சொல்கிறார்:  ""என்னுடைய ரசிகர்கள் இன்றும் என்னை மறக்காமல் இருக்கிறார்கள் என்பதை நான் இங்கு வந்த பின்பு நடித்து வெளிவந்த "தேத் இஸ்கியா' வெற்றியின் மூலம் அறிந்து கொண்டேன். நான் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் பெண் டைரக்டர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இப்போது திரைப்படத்துறையில் பெரிய மாற்றமே ஏற்பட்டுள்ளது. பல்வேறு துறைகளிலும் பெண்களின் ஆதிக்கம் தெரிகிறது. அசிஸ்டெண்ட் டைரக்டர்கள், ஸ்கிரிப்ட் ரைட்டர்கள், காமிரா உமன்கள், மேக்கப் உமன்கள் என்று சகஜமாகப் பணியாற்றுகின்றனர். திறமைசாலிகளாகவும் இருக்கின்றனர். இந்த மாற்றம் வரவேற்கத் தக்கது. இன்றைய இளம் தலைமுறை படைப்பாளிகளும் ஸ்டீரியோ டைப் பாணியிலிருந்து விலகி திரைப்படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பெண்களை முன்னிலைப்படுத்தி வித்தியாசமான கேரக்டர்களை உருவாக்குகிறார்கள். சரியான டைரக்டர்களால் நடிகைகளும் தங்கள் திறமையை வெளிப்படுத்த முடிகிறது. பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியை பெண்கள் துணையுடன் எதிர்க்கும் பெண்ணொருத்தியின் கேரக்டர் எனக்குப் பிடித்திருந்ததால் "குலாப் கேங்' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். என்னைப் பொருத்தவரை நடிப்புக்கு வயது முக்கியமல்ல என்றே கருதுகிறேன்.

என்னுடைய மகன்கள் அஸின் மற்றும் ராயனுடன் இந்தியாவுக்கு வந்து செட்டிலானது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். அவர்களது டீன் ஏஜில் அமெரிக்காவில் இருப்பதைவிட அவர்கள் இந்தியாவில் இருப்பதைப் பாதுகாப்பானதாகக் கருதுகிறேன். அவர்களுக்கு அமெரிக்க சூழ்நிலையைவிட இந்திய சூழ்நிலை மிகவும் பிடித்துள்ளது. இங்குள்ள நண்பர்களுடன் பழகுவதும் வெளியே செல்வதும் அவர்களுக்கும் பழகிவிட்டது.

என்னுடைய இளமை குறித்து பலர் என்னிடம் கேட்பதுண்டு. ""அளவான சாப்பாடு, நேரத்தோடு சாப்பிடுதல், தேகப்பயிற்சிக்கு நடனம் ஆகியவையே என்னுடைய இளமைக்குக் காரணமாகும். உடற்பயிற்சிக்கென்று பிட்னஸ் சென்டர் எல்லாம் போவதில்லை. ஏனெனில் நானும் என் கணவரும் வாழும் ஆரோக்கியமான வாழ்க்கைதான் என் குழந்தைகளுக்கும் வழிகாட்டியாக இருக்குமென்பதில் கவனமுடன் இருக்கிறேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.