நாங்கள் எல்லாம் வெளிநாட்டுலேர்ந்து வந்தவங்க!
1498ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு வருவதற்கு முன் இந்தியாவில் முக்கியப் பொருட்களாக அரிசி, பருத்தி, கரும்பு,


1498ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு வருவதற்கு முன் இந்தியாவில் முக்கியப் பொருட்களாக அரிசி, பருத்தி, கரும்பு, கோதுமை, சோளம், கம்பு மற்றும் பருப்புவகைகள் பயிரிடப்பட்டு
வந்தன. உருளைக்கிழங்கு, தக்காளி, நிலக்கடலை, கொய்யா, பப்பாளி, பூசணிக்காய், ஆப்பிள் போன்ற எதுவுமே இங்கு விளைவிக்கப் படவில்லை. அதுமட்டுமல்ல; புகையிலை, பைனாப்பிள், வள்ளிக்கிழங்கு, மிளகாய், கசகசா, முந்திரி போன்றவை கூட இங்கு கிடையாது, கோதுமை, கரும்பு விளைவிக்கப்பட்டாலும் சர்க்கரை போன்ற பொருட்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பம் அறியவில்லை.
வாஸ்கோடகாமா வருகைக்குப் பிறகு உலகின் பல்வேறு உணவு, பழ வகைகள் இந்தியாவின் மேற்குப்பகுதியில் பயிரிட முயற்சி செய்யப்பட்டன. சில தாவரங்கள் இந்திய மண்ணிற்கு ஒத்து வரவில்லை. சில தாவரங்கள் செழிப்புடன் வேரூன்றத் தொடங்கி இந்தியாவின் பல பாகங்களில் விளைச்சலை தரத் தொடங்கின.
மொகாலயர்கள் காலத்தில்தான் புகையிலை, பைனாப்பிள் விளைச்சல் இந்தியாவில் துவங்கியது. 16ஆம் நூற்றாண்டில் இந்திய உணவிலும், வர்த்தகத் துறையிலும் முந்திரி, மிளகாய், நிலக்கடலை, உருளைக்கிழங்கு, பப்பாளி போன்றவை இடம் பெற துவங்கின.
ஐரோப்பியர்கள் இந்தியாவில் நுழைந்த போது முதன்முறையாக தங்கள் நாட்டின் தாவரங்களைக் கோவாவில் பயிரிட முயற்சித்தனர். போர்ச்சுகீசியர்களும் தங்கள் நாட்டு உணவுத் தாவரங்களைக் கோவாவில் அறிமுகப்படுத்தினர். கோவாவில் விளையும் 20 சதவீத உணவுத் தாவரங்கள் போர்ச்சுகீசியர்களால் அறிமுகமானதாகும். 450 ஆண்டுகளாக கோவாவை ஆண்டுவந்த போர்ச்சுகீசியர்கள் நமக்களித்த செல்வம் இது.
பதினெட்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் பயிரிடப்பட்ட தாவரங்களில் ஆரஞ்சு, ஆப்பிள், பைனாப்பிள், மிளகாய், கொய்யா, புகையிலை, பப்பாளி போன்றவை இடம் பெற்றன. போர்ச்சுகீசியர்கள்தான் இந்தியாவில் ஒட்டு மாம்பழ வகைகளை அறிமுகப்படுத்தினர். அதே போன்று இந்திய தாவரங்களும் தென்கிழக்கு ஆசியா, மலேசியா, இந்தோனேஷியா, வடக்கு பர்மா, வடமத்திய சீனா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் பயிரிடப்பட்டன. நாம் இங்கிருந்து அனுப்பிய மிளகுக்குப் பதிலாக மிளகாய் இங்கு வந்திறங்கியது. தங்களிடம் வேலை பார்க்கும் அடிமைகள் உடல் பலத்துடன் இருந்த காரணத்தை ஆராய்ந்த போதுதான் பெர்ஷியர்களுக்கு வெங்காயத்தின் மதிப்பு தெரிந்தது. அதன் பிறகே வெங்காயம் உலகப் பிரசித்தி பெற்றது. தற்போது கர்நாடகா, கேரளாவில் செழித்து வளரும் தேயிலை ஆப்ரிக்கா, சீனாவிலிருந்து அறிமுகமானதாகும்.
பின்னர் அந்தந்த நாட்டின் மண்வளத்தைக் கண்டறிந்து பிற நாடுகளில் தாவரங்களைப் பயிரிட "வோர்ல்ட் வைட் பண்ட் ஃபார் நேச்சர் புரொஜெக்ட்' அமைக்கப்பட்டு தாவர பரிமாற்றங்கள் நடந்தன. இதன் மூலம் சில தேவையற்ற தாவரங்களும் இந்திய மண்ணில் நுழைந்ததை தடுக்கமுடியவில்லை., யூகலிப்டஸ், கசூரினா போன்றவை காகிதம், ரேயான் தயாரிக்க முக்கியப் பொருளாக கருதப்பட்டதால் ஆஸ்திரேலியாவிலிருந்து அறிமுகமாயின. இதனால் நம் மண்வளம் பாதிக்கப்பட்டது. இதனுடைய வேர்கள் பூமிக்குள் தண்ணீர் எங்கிருந்தாலும் உறிஞ்சும் தன்மை உடையவை என்பதால் நிலத்தடி நீர் பற்றாக் குறையும் அதிகரித்துள்ளது. இவற்றின் இலையுதிர் காலத்தில் மனிதர்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதும் உண்டு.
பி.எல் 480 ஒப்பந்தப்படி அமெரிக்காவிலிருந்து கோதுமையை இந்தியா வரவழைத்தபோது உள்ளே நுழைந்த நச்சுத்தாவரம் பார்த்தீனியம். இன்று இந்தியா முழுமையும் பரவியுள்ளது.
இருப்பினும் வெளிநாட்டிலிருந்து நம்நாட்டில் விளைச்சலுக்காக கொண்டுவரப்பட்ட தாவரங்களின் ஏற்றுமதி மூலம் கோடிக்கணக்கில் அந்நிய செலவாணி கிடைத்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...