பஃபே முறையில் விருந்தோம்பலில் பங்கெடுக்கும்போது நமக்குப் பிடித்த உணவை மட்டும் சாப்பிடும் சௌகர்யம் இருந்தாலும் ஐட்டங்கள் நிறைய இருப்பதால் டயட்டைக் கடைப்பிடிக்க வேண்டிய நிர்பந்தம் இருப்பவர்களுக்கு பஃபே பார்ட்டி ஒரு சவாலாக இருக்கும். மேலும் எல்லோருடனும் சேர்ந்து சாப்பிடும்போது நம்மையும் அறியாமல் கொஞ்சம் அதிகமாகச் சாப்பிட்டுவிட்டு பிறகு அவஸ்தைப்படுவோம். இதைத் தவிர்க்க உதவும் சில டிப்ஸ்கள் இதோ:
* முதலில் விருந்து ஆரம்பம் ஆனவுடன் மளமளவென்று தட்டை எடுத்துக்கொண்டு பார்ப்பதை எல்லாம் அதில் நிரப்பிக் கொள்ளக்
கூடாது. என்னவெல்லாம் உணவு ஐட்டங்கள் இருக்கின்றன என்று ஒரு நோட்டம் விட்டு எவையெல்லாம் நாம் சாப்பிடத் தகுந்தவை, எவை தவிர்க்க வேண்டியவை என தீர்மானிக்க வேண்டும்.
* ஒரு பெரிய சவால் எவ்வளவு உணவு நாம் எடுத்துக் கொள்கிறோம் என்பதுதான். கொஞ்சம் கொஞ்சம் உணவு வகைகளை எல்லாவற்றிலுமிருந்து எடுத்துக்கொண்டாலும் கூட கலோரிகள் அதிகமாகிவிடும்.
* தட்டை எடுத்துக்கொண்டு காய்கறி சாலட், முளை கட்டிய பயறு வகைகள் இருந்தால் அவற்றை முதலில் தட்டில் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு உங்களுக்குப் பிடித்தமான உணவு ஐட்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் சமைத்த ஐட்டங்கள் ஐந்துக்கு மேல் வேண்டாம்.
* எடுத்துக்கொண்ட உணவு வகைகளில் புரோட்டீன் மற்றும் ஸ்டார்ச் வகைகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். முடிந்தவரை எண்ணெய் பதார்த்தங்கள் வேண்டாம்.
* இரண்டாம் முறை எடுத்துக்கொள்ளும் முன் உங்களுக்கு இன்னும் பசிக்கிறதா என்று உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள். பஃபே பார்ட்டியில் உணவு ஐட்டங்கள் நிறைய இருப்பதால் மறுபடியும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லை. பசித்தால் மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். அதுவும் பழவகைகள், சாலட் இவற்றை எடுத்துக் கொண்டால் மிக நல்லது.
* குளிர்பானங்கள், ஐஸ் க்ரீம், பாலில் ஊற வைத்த இனிப்புகள் சாலட் வகைகள் மற்றும் பொரித்தவைகள் போன்றவற்றைப் பார்த்து சபலம் அடைவதைத் தவிர்ப்பதற்கு உங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இவற்றால் அனாவசிய கலோரிகளைத்தான் உடலில் ஏற்றிக் கொள்வீர்கள்.
* பேச நண்பர்கள் இருந்தால் அவர்களுடன் பேசிக்கொண்டே உணவு ஐட்டங்களின் அளவைத் தவிர்த்துவிடலாம்.
* பஃபே பார்ட்டியில் கஸ்டர்ட் ஐட்டங்கள் இருந்தால் எடுத்துக்கொள்ளலாம். மற்ற இனிப்பு வகைகளைப் பார்க்கும்போது இதில் கலோரிகள் கொஞ்சம் குறைவுதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


