தேசியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட கல்லறை
தென் ஆப்பிரிக்காவின் கோய்சன் என்னும் பழங்குடி இனத்தில் பிறந்தவர் அழகு மங்கை சாரா பார்ட்மன். இங்கிலாந்து கப்பலில் ஆப்பிரிக்கா


தென் ஆப்பிரிக்காவின் கோய்சன் என்னும் பழங்குடி இனத்தில் பிறந்தவர் அழகு மங்கை சாரா பார்ட்மன். இங்கிலாந்து கப்பலில் ஆப்பிரிக்கா வந்த வில்லியம் டன்லப் என்னும் மருத்துவர் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி இங்கிலாந்துக்கு அவளை அழைத்துச் சென்றான்.
அங்கு ஊர் ஊராக அவளை அழைத்துச் சென்று நிர்வாணமாக்கி வெள்ளை மிருகங்கள் கைதட்டி மகிழ்ந்து கூத்தாடச் செய்தான். கறுப்பின பெண்தானே என்னும் அலட்சியம். அவளைப் பலர் சீண்டி மகிழ்ந்தனர். லண்டனிலிருந்து பிரான்சுக்கும் அவள் அழைத்துச் செல்லப்பட்டாள். அங்கும் அவளுக்கு அதே கொடுமை. பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு நோயில் விழுந்து அவள் தன் 25-ஆம் வயதிலேயே இறந்து போனாள்.
அவளது உடலை அடக்கம் செய்வதிலும் இழிவு நடந்தது மட்டுமல்ல. அவள் மறைவுக்குப் பின்னர் 160 ஆண்டுகளாக அவளது உடல் உறுப்புகளையும் காட்சிப் பொருளாக்கி அவர்கள் அவமானப்படுத்தினார்கள்.
மனித உரிமை அமைப்புகள் இதனை எதிர்த்துப் போராடியதன் விளைவாக 1974-ஆம் ஆண்டில் பிரான்சு அரசு இதற்குத் தடை விதித்தது. அந்தச் சகோதரியின் எஞ்சிய உடல் பாகங்களைப் பலத்த எதிர்ப்புகளுக்கும் கெடுபிடிகளுக்கும் இடையே பிரான்சு அரசிடம் பெற்று 9-8-2002 அன்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தும், அவரது கல்லறையை தேசிய சின்னமாக அறிவித்தும் சாதனை செய்தார் அதிபர் நெல்சன் மண்டேலா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...