சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஆன்லைனில் வந்துவிட்டது ஆர்ட் விற்பனை!

அப்பா-அம்மாவைத் தவிர மீதி எல்லாவற்றையும் இப்போது ஆன்லைனில் வாங்கிவிடலாம் என்று சொல்வது

News image
Updated On :2 நவம்பர் 2014, 5:57 am

சாருகேசி

அப்பா-அம்மாவைத் தவிர மீதி எல்லாவற்றையும் இப்போது ஆன்லைனில் வாங்கிவிடலாம் என்று சொல்வது உண்மையாகி வருகிறது.  அமேஸானும், ப்ளிப்கார்ட்டும் இதை நிரூபித்து வருகின்றன. இந்த ஆன்லைன் விற்பனையை ஓவியப் படைப்புகளுக்கும் எடுத்துச் சென்றிருக்கிறார்கள், இளைய தலைமுறையைச் சேர்ந்த அம்ருதா ரஞ்சனியும், குருபரனும். சென்னை ஷெனாய் நகரில் இவர்களின் இபா ஸ்டூடியோ ஓவியர்களின் சரணாலயம், பரிசோதனைக் களம், பயிற்சிப் பட்டறை எல்லாம்தான் 

அம்ருதா ரஞ்சனியிடம் நம் கேள்விகளைக் கேட்டோம்:

நம் கலை-வாடிக்கையாளர்களின் மீது எப்படி உங்களுக்கு இப்படி ஒரு நம்பிக்கை வந்தது?  எப்படி இதை நடத்தப் போகிறீர்கள்?

எங்கள் ஆர்ட் காலரிக்கு வருவோரின் மீது எங்களுக்கு ஆழமான நம்பிக்கை உண்டு.  அதனால் எங்கள் ஆர்ட் காலரிக்கு ஒரு போர்ட்டல் திறந்து விட்டோம். இன்ஷுரன்ஸ் உட்பட, இலவச அனுப்புகைத் திட்டம் இது.  எங்களிடம் கைவசம் இருக்கும் ஓவியங்களை மட்டுமே இந்த போர்ட்டலில் காண்பித்திருக்கிறோம்.   இல்லாததைப் பட்டியலில் சேர்த்தால், அப்புறம் வாங்குகிறவருக்கு நம் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விடும்.  அது மட்டுமல்லாமல் டூப்ளிகேட் அல்லது தவறான ஓவியம் வாங்குகிறவருக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.  அதைத் தவிர்ப்பதற்கே இந்த ஏற்பாடு.

எந்தெந்த ஓவியர்கள் இந்தத் திட்டத்தில் உங்களோடு ஒத்துழைக்க முன்வந்திருக்கிறார்கள்?

எல்லோருமே ஓரளவுக்கு மக்களிடம் பரிச்சயமான ஓவியர்கள்தாம்.  ஒரு சின்னப் பட்டியல் சொல்கிறேன்: அல்பான்úஸா அருள்தாஸ், வித்யாசங்கர் ஸ்தபதி, ஆர்.எம். பழனியப்பன், என்.எஸ். மனோகர், எஸ்.கே. ராஜவேலு, ஜி. ராமன், ஜே.எம்.எஸ். மணி, வீரசந்தானம், ஏ.இசட். ரஞ்சித், கே. முரளிதரன், ஜி. கங்காதரன், ஜி. சுப்ரா, செழியன், தேசிகன், விசுவம், எஸ். ஜெயராஜ், ரமா சுரேஷ், எஸ். இளையராஜா என்று இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

நீங்கள் வைத்திருப்பதைத்தான் வாங்க வேண்டுமா? இல்லை, புதிதாக வரைந்து தரச்சொன்னால் செய்து அனுப்புவீர்களா?

எங்களிடம் இருப்பதிலிருந்து தேர்ந்தெடுத்துக் கேட்பதை அனுப்புவோம். புதிதாக வரைந்து தரச்சொன்னாலும், அதை ஏற்றுக்கொண்டு ஓவியம் வரைந்து அனுப்புகிறோம். 

விலை எல்லாம் எப்படி?  கையைக் கடிக்குமா?

எங்களிடம் 5000 ரூபாய் முதல் எட்டு லட்சம் ரூபாய் வரை விலையுள்ள ஓவியப் படைப்புகள் இருக்கின்றன.  ஒரு சாதாரண மத்திய தரக் குடும்பத்தினர் வசிக்கும் குடியிருப்புகளில் வரவேற்பறையில் அலங்காரமாக மாட்டப்படும் ஓவியத்துக்கு இது அதிக விலையொன்றும் இல்லை.

சீனாவில் சாதாரண மக்கள்கூட சிறு சிறு ஓவியக் கடைகளில் ஓவியம் வாங்கிச் செல்வதைப் பார்த்திருக்கிறேன்.  அப்படிப்பட்ட சாதாரண மனிதர் பர்சுக்கு ஏற்ற மாதிரி ஓவியம் ஏதும் விற்பனை செய்யும் உத்தேசம் உண்டா?

எந்த நாட்டிலும், அசலாக வரையப்பட்ட ஓவியத்துக்கு தனி மதிப்பு உண்டு.  நம் நாட்டில் காலை முதல் மாலை வரை, காலையில் கோலம் போடுவதிலிருந்து தொடங்கி மாலையில் குத்துவிளக்கு ஏற்றுவது வரை, நம் வாழ்க்கை ஒரு வகையில் கலையோடு பின்னிப் பிணைந்துதான் இருக்கிறது. நம்முடைய கோயில்களின் கட்டுமானமும், அழகும் கணித அடிப்படையிலானது.  எனவே கலாசார அழகை ஆராதிக்கும் வகையில் எங்கள் ஓவியங்கள் உள்ளன என்பதை இப்போதைக்கு உங்களிடம் சொல்கிறேன்.

அது மட்டுமல்ல, யாரெல்லாம் இங்கே வந்து நேரிடையாக ஓவியம் வரையும் அனுபவம் பெற விரும்புகிறார்களோ, அவர்களுக்காக ஒரு நாள் பயிற்சிப் பட்டறை நடத்துகிறோம்.  அவர்களே வந்து தங்கள் விருப்பம் போல் ஓவியம் வரைந்து வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்

ஆன்-லைனில் உங்கள் ஓவியங்களை எல்லாம் உலாவ விட்டிருக்கிறீர்களா?

ஆமாம்.  அவை தவிர, வாடிக்கையாளர் அவற்றில் இருப்பதைத் தவிர்த்தும் நேரில் எங்கள் ஸ்டூடியோவுக்கு வந்து அவருக்குப் பிடித்தமான ஓவியத்தை வாங்கிச் செல்லலாம்.  ஆன்லைன் காலரி வலைத்தளம்:  www.ibastudio.com

எப்படி உங்கள் வாடிக்கையாளர்களை அணுகுகிறீர்கள்?

எங்களிடம் அவர்களது முகவரிகள் இருக்கின்றன.  அவர்களுக்கு அவ்வப்போது அனுப்பிவைப்போம்.  அது தவிர, எங்கள் வலைத் தளத்தையும் அவர்கள் பார்வையிடலாம்.

புத்தகங்கள், அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள் என்று  ஆரம்பித்து, இப்போது ஓவிய விற்பனை வரை ஆன்லைன் வர்த்தகம் முன்னேறிவிட்டதில் வியப்பு இல்லை.  ஆனால் அதில் ஒரு சென்னை ஆர்ட் காலரி முந்திக்கொண்டதுதான் வியப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.