* சி.எப்.எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்து விட்டால், உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறி விடவேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
* ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் இருக்கும் மெர்க்குரி திரவம் ஆர்சனிக், துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது. இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ, மைக்ரேன் தலைவலி, மூளை பாதிப்பு, உடல் அசைவுகள் பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம். அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சருமபாதிப்புகள் ஏற்படுமாம்.
* எனவே ஒருவேளை உடைந்துவிட்டால் அந்த இடத்தைவிட்டு சிறிதுநேரம் விலகி இருப்பது நல்லது. பத்து நிமிடங்கள் ஆனபின் கண்ணாடி நம் சருமத்தில் படாமல் துடைப்பத்தால் சுத்தமாக அப்புறப்படுத்த வேண்டும்.
* வேக்குவம் கிளீனரால் சுத்தப்படுத்த கூடாது. வேக்குவம் உறிஞ்சப்பட்டால் அது உள்ளே ஒட்டிக் கொள்ளும். அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்குரி துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு.
* உடைந்த பல்பை சுத்தமாக சேகரித்து, அப்படியே குப்பை தொட்டியில் போடக்கூடாது. ஒரு பாலித்தீன் பையில் போட்டு நன்கு மூடி பிற உயிரினங்களுக்கு தொல்லை ஏற்படாதபடி போடுவது நல்லது.
* சிறு குழந்தைகள் இருக்கும் இடத்தில் நன்கு சுத்தப்படுத்தி உள்ளோமா என்று மீண்டும் ஒருமுறை பார்ப்பது மிகவும் அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜகவுக்கு ஆதரவளிக்கும் தொகுதி மறுவரையறைக் குழு நியாயமற்றது: ஜோதிமணி எம்.பி.

ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலிய அணி!
நான் பார்த்ததிலேயே சிறந்த கேட்ச்! ஷ்ரேயாஸை பாராட்டிய சச்சின்!

எம்.ஆர். விஜயபாஸ்கர் சரணடைய அவகாசம்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


