புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாள்களே உள்ளன. 2015 புத்தாண்டை வரவேற்க உலகமே தயாராகிக் கொண்டிருக்கிறது.
புத்தாண்டு என்றால் அனைவரின் எண்ணத்திலும் ஓடுவது காலண்டர், நாட்குறிப்பு(டைரி)கள் தான்.
ஒவ்வொரு புத்தாண்டு பிறப்பின்போதும், பல புதிய ரக நாட்குறிப்புகளை அறிமுகப்படுத்துவது சிவகாசி நாட்குறிப்பு தயாரிப்பாளர்களுக்கு வழக்கம். இந்த ஆண்டு தமிழ்மணம் கமழும் திருக்குறள் நாட்குறிப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முகப்பில் யூவி கோட்டிங்குடன் கூடிய திருவள்ளுவர் புகைப்படம். இரண்டு, மூன்று மற்றும் நான்காம் பக்கங்களில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்புகலை, முளைப்பாரி ஊர்வலம், தப்பாட்டம், கிராமியநடனம் என பல வண்ணங்களில் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த நாட்குறிப்பின் சிறப்பே அனைத்தும் தமிழில் இருப்பதுதான்.
தன்குறிப்பு, திருக்குறள் குறித்த குறிப்புகள், திருக்குறள் எந்தெந்த மொழியில் மொழிபெயர்ப்பாகி உள்ளது என்பது குறித்த விவரம், அரசு விடுமுறை, இந்துக்கள் பண்டிகை, கிறிஸ்தவ, முஸ்லிம் பண்டிகைகள், கௌரி பஞ்சாங்கம், ராகு,குளிகை, எமகண்டம் உள்ளிட்ட விவரங்கள்,சுபமூகூர்த்த தினங்கள், திருமணம் நடத்துவதற்கான காலங்கள் என பல தகவல்களும், திருக்குறளின் முதல் பெயர் முப்பால், திருக்குறளில் பயன்படுத்தாத எழுத்து ஒள, தமிழ் என்ற சொல் பயன்படுத்தவில்லை பேன்ற 34 ஆச்சரியமான தகவல்களும் அச்சிடப்பட்டுள்ளன. ஒரு பக்கம் கொண்ட நாட்குறிப்பில் தமிழ் ஆண்டின் பெயர், தமிழ் மாத தேதி, ஒரு திருக்குறள் மேலும் அதற்கான விளக்கம் என இந்த திருக்குறள் நாட்குறிப்பில் உள்ளது.
இது குறித்து நாட்குறிப்பு தயாரிக்கும் க.செல்வகுமாரிடம் விசாரித்தோம்:
""திருக்குறள் நாட்குறிப்பு தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது என்றால் பொதுவாக தமிழ் நாட்குறிப்புகள் சந்தையில் அதிகமாக இல்லை. எனவே முற்றிலும் தமிழில் உள்ள நாட்குறிப்பு தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தோம்.
2014 ஆம் ஆண்டிற்கு டேபிள்காலண்டரில் 12 திருக்குறள்
களை அச்சிட்டு விற்பனை செய்தோம்.
அந்த 12 குறள்களும் நிர்வாகம் மற்றும் ஆளுமைத்திறன் குறித்ததாகும். இந்த டேபிள்காலண்டருக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து திருக்குறள் நாட்குறிப்பு தயாரிக்க முடிவு செய்து 2015ஆம் ஆண்டிற்கு அறிமுகப்படுத்தியுள்ளேம்.
தமிழ் நாட்குறிப்பு என தனியே ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம். அதில் கிரக ஓரைகளின் காலம், மனையடி சாஸ்திரம், வாஸ்து செய்யும் நாள், முக்கிய விரதங்கள், ஒவ்வொரு நட்சத்திரகாரர்களும் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள், முகூர்த்தகால் நடும் முறை, வீடு குடிபுகவேண்டிய மாதங்கள், ராசிகல் விவரங்கள், நவகிரக வழிபாட்டு முறைகளும்,அதன் பலன்களும், எண் ஜோதிடம், தமிழ் மொழியின் வரலாறு, தமிழ் பேசப்படும் இடங்கள் என பல தகவல்களை அச்சிட்டுள்ளோம். ஒவ்வொரு நாளும் ராசிபலன், கோவில் திருவிழா விவரங்களும் உள்ளன. ஆறுபடை அழகன் நாட்குறிப்பு என்ற நாட்குறிப்பில் முருகப்பெருமானின் சிறப்புகள்,ஆறுபடைவீடுகளின் முகவரி மற்றும் தொலை பேசி எண்கள் போன்ற பல விவரங்கள் உள்ளன. மேலும் வழக்கமாக சந்தையில் உள்ள நாட்குறிப்புகளும் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.27 கோடி

மழையூரில் நாம் தமிழா் கட்சி பிரசார வாகனம் தீக்கிரை

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை முதலில் நிறைவேற்றியவா் ஸ்டாலின்: கி. வீரமணி

விடுபட்ட பணிகள் தொடர வாக்களியுங்கள்: அமைச்சா் கோவி. செழியன் பிரசாரம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


