தகவல்கள்...

பண்பாட்டுச் சிதைவையும், கலாசார சீரழிவையும் எதிர்த்து போராடிய "ருக்மணிதேவி அருண்டேல்'ஐ நமக்கு தெரிந்திருக்கும்
தகவல்கள்...
Published on
Updated on
1 min read

பண்பாட்டுச் சிதைவையும், கலாசார சீரழிவையும் எதிர்த்து போராடிய "ருக்மணிதேவி அருண்டேல்'ஐ நமக்கு தெரிந்திருக்கும். 1977-இல் மொரார்ஜி தேசாய் பிரதமரானபோது

ருக்மணி ஹாலந்து நாட்டில் இருந்தார். அவருக்கு போன் செய்த தேசாய், ""உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். நீங்க நம்ம நாட்டு ஜனாதிபதியாக ஒப்புக்

கொள்வீர்களா? என்றார். எதுவும் ஓடவில்லை ருக்மணிக்கு. ""இந்தியா வந்து பதில் கூறுகிறேன்'' என்றார்.  இந்தியா வந்த பிறகு, ""நான் கலைத் துறையைச் சேர்ந்தவள்.

நாட்டை வழி நடத்தும் உயர் பொறுப்புக்கு நான் தகுதியானவள் அல்ல'' என்று மறுத்துவிட்டார் ருக்மணிதேவி அருண்டேல். 1936இல் மூன்று மாணவிகளுடன் ஓலைக்

குடிசையில் இவர் துவங்கிய "கலாஷேத்திரா' இன்று 100 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து சர்வதேச கலை அமைப்பாக விளங்குகிறது.

("தலை நிமிர்ந்த தமிழச்சிகள்' நூலில் இருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com