தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வெற்றிக்கு 19 வழிகள்

ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, யாராவது ஏற்றிவிடுவார்கள் என்று காத்திருப்பது.

News image
Updated On :22 மார்ச் 2015, 10:06 am

முத்துபாஸ்கரன்

 1.  தினமும் அரை நாள் (12 மணி நேரம்) கடுமையாய் உழையுங்கள்.

 2.  வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்புதான்.

 3.  வெற்றி ஒன்றையே மனம் நினைக்க வேண்டும்.

 4.  வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏற வேண்டும்.

 5.   ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, யாராவது ஏற்றிவிடுவார்கள் என்று காத்திருப்பது. மற்றொன்று நாமே ஏறுவது.

 6.  எதற்கும் அஞ்சக்கூடாது.

 7.   பிடித்த காரியத்தைச் செய்ய வேண்டும் என்பதைவிட, செய்யும்

காரியத்தை நமக்குப் பிடித்ததாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

 8.   "முடியாது', "நடக்காது', "தெரியாது' என்ற வார்த்தைகளைச் சொல்லவே கூடாது.

 9.   பாதுகாப்பானது எனக் கருதி ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு ஏற்றதல்ல.

10. வெற்றிக்குத் தேவை பாதி அதிர்ஷ்டம், பாதி அறிவு.

11. துணிச்சலாக முடிவுகள் எடுக்க வேண்டும்.

12. நீங்கள் சம்பாதிப்பதைவிட அதிகம் உழைக்க வேண்டும்.

13.  மற்றவர்களை உங்களுக்காக உழைக்க வைப்பதில் புத்திசாலித்தனம் தேவை.

14.  வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

15. நாளை என்று தள்ளிப் போடக்கூடாது.

16.  கைக் கடிகாரத்தைக் கொடுத்துவிட்டு அலாரம் கடிகாரம் வாங்குங்கள்.

17. மற்றவர்கள் நம்மை வழிநடத்த வேண்டும் என்று நினைக்கக் கூடாது.

18. கவலைப்படாதீர்கள். கவலையால் எந்த நன்மையும் கிடைக்காது.

19. மகிழ்ச்சியைக் கொடுப்பது பணம் மட்டுமல்ல.

-ஆதாரம்: "பயனுள்ள புத்தகம்' என்ற நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.