ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மூளை நரம்புகளில் பாதிப்பு!

வயது 56. சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு இரு சக்கரவாகனம் மோதி வலது தோள் எலும்பு உடைந்துவிட்டது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மூளை நரம்புகளில் பாதிப்பு!
Updated on
2 min read

வயது 56. சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு இரு சக்கரவாகனம் மோதி வலது தோள் எலும்பு உடைந்துவிட்டது. தலையில் சிறிய அளவு அடிபட்டு இரத்தம் வந்தது. இப்பொழுது சுமார் ஒரு வருடமாக பேச்சு திக்குகிறது. நடந்து செல்லும்போதும், அதிகமாக வேலை செய்யும்பொழுதும் கை, கால் நரம்புகள் இழுத்துப் பிடித்துக் கொள்கிறது. உடம்பை கம்பி கட்டியதுபோல் இறுக்குகிறது. வேலை செய்யும்போது வயிற்றுப் பகுதியில் பலூன்போல் வருகிறது, வலியும் ஏற்படுகிறது. இந்த உபாதைகள் தீர ஆயுர்வேதம் சொல்லும் மருத்துவம் என்ன?

முருகேசன், மதுரை.

நீங்கள் கீழே விழுந்தபோது ஏற்பட்ட அடியானது மூளைப்பகுதியிலுள்ள நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. அதனுடைய பின் விளைவுதான் இந்த பாதிப்பிற்கான காரணமாக இருக்குமெனத் தோன்றுகிறது. தற்போது வந்துள்ள ஆழ்ஹண்ய் இப நஸ்ரீஹய் மூலம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அனைத்தையும் நன்கு அறிந்து கொள்ளலாம். இருந்தாலும் ஒருசில ஆயுர்வேத வைத்தியமுறைகள் பயனளிக்கக்கூடும். அந்த வகையில்,

1. கொஞ்சம் க்ஷீரபலாதைலம் எண்ணெய்யைச் சூடாக்கி உச்சந்தலையில் அரைமணி நேரம் ஊறவிடவும். காலையில் வெறும் வயிற்றில் சுமார் 7 மணிக்கு இந்த எண்ணெய்யை ஊற வைத்த பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கவும். அதன்பிறகு ராஸ்னாதி சூரணத்தை உச்சந்தலையில் தேய்த்துவிடவும். உணவில் காரம், கசப்பு, துவர்ப்பு ஆகியவற்றை இந்த தைலத்தை உபயோகிக்கும்போது தவிர்க்க வேண்டும். சூடான சாதத்துடன் மிளகு, சீரகம், பூண்டு போட்ட ரசம் கலந்து கருவேப்பிலைத் துவையலுடன் சாப்பிடலாம். சுட்ட அப்பளம் சாப்பிடுவதும் நல்லதே. பொறித்தது வேண்டாம். உணவிற்கு பிறகு புளித்த மோர் சாப்பிடவும்.

2. நரம்புகளின் வலுவைக் கூட்டவும், அவற்றில் சேர்ந்துள்ள வாயுவைப் பிரிக்கவும், மூளையை வலுப்படுத்தவும் தசமூலம் எனும் கஷாயத்தை 15 மி.லி. அளவில் எடுத்து 60 மில்லி லிட்டர் சூடான பாலுடன் கலந்து 2 தான்வந்தரம் குளிகையுடன் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். சுமார் 48 நாட்கள் சாப்பிடலாம்.

3. உணவிற்குப் பிறகு தசமூலாரிஷ்டம் 30 மி.லி. காலை மற்றும் இரவு சாப்பிடவும்.

4. படுக்கையறை குளிர்ச்சியாக இராமல், காற்றோட்டம் அதிகமில்லாமல், வெதுவெதுப்பான தர்ர்ம் ட்ங்ஹற்ங்ழ்ள் பயன்படுத்தி படுப்பது நலம். படுக்கும் மெத்தை, தலையணை, போர்வை போன்றவை எந்தக் காரணம் கொண்டும் குளிர்ச்சியாக இருக்கக் கூடாது. குளிப்பதற்கும், குடிப்பதற்கும் வெந்நீரையே பயன்படுத்தவும்.

5. அதிகமான நடை, பளு தூக்குதல், நீச்சலடித்தல், சைக்கிள் சவாரி செய்தல், அதிக தூர பேருந்து பயணம், இரயில் பயணம், நின்று கொண்டே பயணித்தல் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். இரவில் பயணம் செய்வதைத் தவிர்த்து குறைந்தது 6 அல்லது 7 மணி நேரமாவது நன்றாக உறங்க வேண்டும்.

6. ஆயுர்வேத மருத்துவமனைகளில் செய்யப்படும் எண்ணெய்க் குளியல், மூலிகை இலைகளால் செய்யப்படும் ஒத்தடம், பெட்டியினுள் அமர்ந்து உடலை வியர்க்கச் செய்யும் நீராவிக் குளியல், ஆசனவாய் வழியாக செலுத்தப்படும் எண்ணெய் மற்றும் கஷாயவஸ்தி பிரயோகங்கள், மூலிகை நெய் மருந்துகளை அருந்தச் செய்தல், நவரக்கிழி எனப்படும் நவர அரிசியை சிற்றாமுட்டி வேர் கஷாயத்துடனும் பாலுடனும் கலந்து வேக வைத்து உடலெங்கும் தேய்த்துவிடும் சிகிச்சைமுறை. சிரோவஸ்தி எனப்படும் தலையில் மூலிகைத் தைலத்தை நிறுத்தி வைக்கும் சிகிச்சைமுறை போன்றவை நல்ல பலனளிக்கக் கூடியவை.

வாயுவை அதிகரிக்கக் கூடிய வேர்க்கடலை, பட்டாணி, கொண்டைக்கடலை, பருப்புவகைகள் ஆகியவற்றைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். எந்த உணவையும் வெதுவெதுப்பாகச் சாப்பிடவும். குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிர்த்து உணவிற்கு நடுவே வெந்நீரையே அருந்தவும். நரம்புகளை வலுவிழக்கச் செய்யும் செயல்கள், அதிக உடற்பயிற்சி, மனதிற்கு சோர்வையுண்டாக்கும் வகையில் பேசப்படும் கடுஞ்சொற்கள், கோபம், தாபம், வருத்தம், பொறாமை போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com