நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

புனித நீரைச் சுமக்கும் "கன்வாரிகள்'

வடநாட்டில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி நேரத்தில் தில்லி, உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த "கன்வாரிகள்' என்றழைக்கப்படும் சிவபக்தர்கள் நடந்தே சென்று ஹரித்துவார் அருகே "கோகுக்' என்ற பகுதியிலிருந்து கங்கை நீரைக் கொண்டு வருவது வழக்கம்.

News image
Updated On :13 செப்டம்பர் 2015, 8:56 am

அ. குமார்

வடநாட்டில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி நேரத்தில் தில்லி, உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த "கன்வாரிகள்' என்றழைக்கப்படும் சிவபக்தர்கள் நடந்தே சென்று ஹரித்துவார் அருகே "கோகுக்' என்ற பகுதியிலிருந்து கங்கை நீரைக் கொண்டு வருவது வழக்கம். தமிழகத்தில் காவடி எடுப்பவர்கள் தோளில் சுமப்பது போன்று நீளமான கம்பில் இரு முனைகளிலும் சிறிய குடங்களைக் கட்டிக் கொண்டு அதில் கங்கை நீரை நிரப்பி வருவதை "கன்வார்' என்று குறிப்பிடுவதுண்டு. அதைச் சுமப்பவர்களுக்கு "கன்வாரிகள்' என்ற பெயர் ஏற்பட்டது.

இந்த "கன்வாரிகள்' தங்கள் ஊர்களிலிருந்து நடந்தே சென்று கங்கை நீரைக் கொண்டு வந்து, ஊரில் உள்ள சிவன் கோயிலில் அபிஷேகம் செய்வதால் நினைத்த காரியங்கள், பிரச்னைகள் தடையின்றித் தீர்வதாக நம்புகிறார்கள். இந்த கங்கை நீரைக் கொண்டு வருவதற்காக இவர்கள் 45 கி.மீ. முதல் 200 கி.மீட்டர் தொலைவு வரை நடப்பதுண்டு. நீரைக் கொண்டு வரும்போது ஊர் செல்லும் வரை தோளிலிருந்து அந்தக் குடங்களைத் தரையில் இறக்கி வைக்கக் கூடாதென்பதற்காக வழி நெடுக சேவை மையங்கள் அமைக்கப்படுகின்றன.

ஆன்மிக யாத்திரை செல்பவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தர சேவை முகாம்கள் அமைப்பதுபோல் இவர்களுக்கும் உதவி செய்ய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முகாம் அமைத்து குடிநீர், உணவு, மருத்துவ வசதி, தங்குவதற்கு இடம் ஆகியவற்றைச் செய்து தருகின்றன. ஆண்டுதோறும் பதினைந்து நாள்கள் அமைக்கப்படும் இந்த முகாம்கள் தினமும் பதினான்கு மணி நேரம் சேவை செய்கின்றன.

புனித நீர் சேகரித்துக் கொண்டு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஊரிலிருந்து கிளம்புவது முதல் ஒரே நோக்கத்தோடு கங்கை நீரைச் சேகரித்துக் கொண்டு ஊர் திரும்பியவுடன் கோயிலில் அபிஷேகம் செய்வார்கள். இவர்களை "டக் கன்வாரிகள்' என்றும், தோளிலிருந்து இறக்காமல் கங்கை நீரைச் சுமந்து வருபவர்களை "காடி கன்வாரிகள்' என்றும் குறிப்பிடுவதுண்டு.

காவி உடை அணிந்து தோளில் சுமக்கும் காவடியில் கடவுள் படங்களை மாட்டிச் செல்வது இவர்களது வழக்கமாகும். இந்தப் பயணத்தின்போது வழியில் தடங்கலோ, சோர்வோ ஏற்படுவதில்லை என்று நம்புகிறார்கள். இந்தப் பிரார்த்தனை மூலம் சிவபெருமானின் அருள் கிடைப்பதாகவும் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நிம்மதியும் ஏற்படுவதாகவும் இவர்கள் நம்புகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.