ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

ஒன் ஸ் மோர்

பேரறிஞர் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் ஒரு தடவை உலகம் பூரா சுத்திகிட்டு வீடு போய்ச் சேர்ந்தாரு. ஊடக ஆசாமிகள் அவரை மொச்சுகிட்டு என்னென்னமோ கேள்வியெல்லாம் கேட்டாங்க.

Updated On :

பேரறிஞர் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் ஒரு தடவை உலகம் பூரா சுத்திகிட்டு வீடு போய்ச் சேர்ந்தாரு. ஊடக ஆசாமிகள் அவரை மொச்சுகிட்டு என்னென்னமோ கேள்வியெல்லாம் கேட்டாங்க. அந்த அறிஞர் எல்லாத்துக்கும் பொறுமையாப் பதில் கொடுத்துகிட்டே இருந்தாரு. கடைசியா அமெரிக்காவுல அதிகப் பிரதிகள் விற்கும் தினசரி பத்திரிகையைச் சேர்ந்த ஓர் அம்மா ஒரு கேள்வியைக் கேட்டாங்க. ""இத்தனை நாடு சுத்தியிருக்கீங்களே... ஒங்களுக்குப் புடிச்ச நாடு எது? புடிக்காத நாடு எது?''

""புடிச்ச நாடு ஜப்பான். புடிக்காத நாடு இந்தியா''ன்னு பட்டுனு சொல்லிட்டாரு! உடனே, ""இது நான் எழுதற நேரம். தயவு செஞ்சு எல்லாரும் வீடு போய்ச் சேருங்க''ன்னு கேட்டுக்கிட்டு தன்னோட நூலகத்துக்குள்ளே போயிட்டாரு.

கேள்வி கேட்ட அம்மா முடியைப் பிச்சிகிட்டே அலுவலகம் போய்ச் சேர்ந்தாங்க. "என்ன காரணத்துக்காக இந்தியாவைப் புடிக்காதுன்னு சொன்னாரு? அப்படியென்ன அவருக்கு இந்தியாவுல கசப்பான அனுபவம்? இந்தியர்கள் அவரைச் சரிவரக் கவனிக்காம இருந்துட்டாங்களா? இப்படிப் பல கேள்விகள் எழுந்து அந்த அம்மாவைக் குழப்பிகிட்டு இருந்தது. அன்னைக்கு ராத்திரி பேரறிஞர் ரஸ்ஸல் லண்டன் தொலைக்காட்சியிலே பேசினாரு. அவுரு பேசும்போது, ""உலகத்திலேயே சோம்பேறிகளைப் பார்க்க வேண்டுமானால் இந்தியாவுக்குச் செல்லுங்கள். தெருவெல்லாம் கும்பல் கும்பலா நின்று பேசிக்கொண்டு பொன்னான காலத்தை வீணடித்துக் கொண்டிருப்பார்கள். அது சுத்தமாக எனக்குப் பிடிக்கவில்லை'' என்று சொன்னார். அம்மையாரோட கேள்விகளுக்குப் பதில் கெடைச்சிருச்சி.

இங்கிலாந்துக்காரர்கள் நம்ம மாதிரி கலகலன்னு பேசமாட்டாங்ககறது ஒலகறிஞ்ச செய்தி. பஸ்ஸýக்கோ, ரயிலுக்கோ காத்துக்கிட்டு இருக்கறப்போ கூட நேரத்தை வீணடிக்காம பேப்பரோ, புஸ்தகமோ படிச்சு அறிவைப் பெருக்குற வேலையில் இருப்பாங்க. நம்ம ஆளுங்க பேப்பர் படிச்சாங்கன்னா அந்தச் செய்திய ஒரு பத்து பேருகிட்டயாவது சொல்லியாகணும்! இல்லேன்னா, விக்கிரமாதித்த மகாராஜா கதையில வருமே வேதாளம் அது சொல்ற மாதிரி அவுங்க தலை சுக்கு நூறா வெடிச்சிடும்! ""அட சும்மா இருப்பா. பேப்பர் பாத்துட்டுத்தாம்பா சொல்றேன்னு'' விவாதத்துல வேற எறங்கிடுவாங்க.

அறிஞர் ரஸ்ஸல் நம்ம மேல சேத்தை வாரி அடிச்சிட்டாரு. எப்படித் தொடைக்கிறது? எதைப் போட்டும் கழுவ முடியாது. பின்னே என்னதான் வழி? யோசிங்க....

"கதகதயாம் காரணமாம்' என்ற நூலில் ராஜ்ஜா.

ஞ்ச நாளைக்கு முன்னே ஒருவர் என்னைப் பார்க்க வந்தார். வந்தவர் பேசினார். சொந்த விஷயம், லோக விஷயம் - சகலத்தையும் பற்றிப் பேசினார். பேச்சின் நடுவிலே தெய்வ பஜனையைப் பற்றிப் பிரஸ்தாபித்தார். அவர் நல்ல பக்திமான். ஆஞ்சநேயரைப்போல பஜனை நடக்கும் இடத்துக்கெல்லாம் போய்விடுவார். என்னிடம் ஏதோ திருவாய்மொழிப் பாசுரத்தைப் பாடினார். அதிலே ஆலமரத்தைப் பற்றி ஒரு குறிப்பு வந்தது. உடனே, அதற்கு வியாக்யானம் செய்யத் தொடங்கி விட்டார். ""ஏன்டாப்பா, நீதான் பெரிய பெரிய புஸ்தகத்தையெல்லாம் பீரோவிலே அடுக்கி வெச்சிருக்கே? படிக்கிறயோ, இல்லையோ, பகவானுக்குத்தான் வெளிச்சம். பத்திரிகையெல்லாம் போடறே, எங்கே, இதைச் சொல்லு பார்ப்பம். எத்தனையோ மரமெல்லாம் இருக்க, ஆழ்வார் ஏன் ஆலமரத்தைச் சொன்னார்? அந்த இரகஸ்யம் தெரியுமா உனக்கு? அது எங்கே தெரியப் போறது - நான் சொல்றேன். கவனி.

ஆலமரம் என்ன செய்யறது? முதல்லே அடிமரம் முளைக்கிறது; வளர்கிறது; கிளை விடுகிறது. அப்புறம் கிளையிலேர்ந்து விழுது இறங்குகிறது. அந்த விழுது எல்லாம் மெல்ல மெல்லப் பூமிக்கு வந்து பதிந்து, அடிமரத்தின் பளுவைக் குறைக்கிறது. இதனாலேதான் ஆலமரத்தின் கிளைகள் நாலா திசையிலேயும் நீண்டு, மரம் பிரம்மாண்டமாய்ப் பரவ முடிகிறது. இதுமாதிரிதான் ஒரு மனித சமூகமும் வாழ வேண்டும். ஒரே ஒரு தலைமுறை ஆடிப்பாடி ஓய்ந்து போக, அடுத்த தலைமுறை வாழ்க்கையிலே விழுது விடாமல் போனால், அந்தச் சமூகம் தொடர்ச்சியற்று நிலைகுலைந்து போகும். இது ஆலமரத்திலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய சூட்சுமம்'' என்றார் அந்த நண்பர். இதைக் கேட்டதும் நான் புளகாங்கிதம் அடைந்தேன். சமூக வாழ்க்கையின் உண்மையை - ஓர் உயர்ந்த சூட்சுமத்தை இந்த உபமானம் மிக அழகாக விளக்குகிறது. ஞானம் என்பது அனுபவம். யுக்தி, மனோதர்மம் இந்த மூன்றுக்கும் கிடைக்கும் பரிசு. அனுபவத்தாலும் அறிவாலும் தனிமனிதன் பெற்ற ஞானம் சமூகத்தில் பொது உடமை ஆகி விடுகிறது. ஆலமரம்போல் விழுது விட்டுத் தலைமுறை தலைமுறையாய்த் தொடர்ச்சி பெற்றுச் சமூகம் வாழ உதவும் மிகச் சிறந்த இணைப்புக் கரணைகளில் ஒன்று பழமொழி.

மனித நாகரிகத்தின் சகல அம்சங்களும், மனித குலமே ஆயிரக்கணக்கான வருஷங்களாய்ப் பாடுபட்டு தட்டித் தடவி வழி கண்டு சேகரித்த புராதனச் செல்வங்களாகும். எத்தனையோ அனுபவம், எத்தனையோ தவறு, எத்தனையோ யூகம் இவற்றுக்குப் பிறகே ஒவ்வொரு பழக்கமும் அறிவும் மனித குலத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. முந்தைய தலைமுறைகள் தேடி வைத்த பொருள் மட்டும் அல்ல; பாஷை, கருத்து, பழக்கவழக்கம் ஆகிய எல்லாமே இந்தத் தலைமுறை பெற்ற பிதுரார்ஜிதமாகும்.

விக்கிரமன் தொகுத்த தமிழ்ச்சுரபி (தொகுதி 1) - "பழமொழியும் புது வாழ்வும்' என்ற கட்டுரையில் தி.ஜ.ர.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.