கண்டது
(சேலத்தில் ஒரு பிரியாணிக் கடையின் பெயர்)
கொக்கரக்கோ பிரியாணி கடை
எஸ்.அருள்மொழி சசிகுமார், கம்பைநல்லூர்.
(சேலம் மாவட்டத்தில் ஓர் ஊரின் பெயர்)
வனவாசி
ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.
(மறையூரில் ஒரு தேநீர் கடையில் எழுதியிருந்த வாசகம்)
கொடுக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை...
தயவுசெய்து.கெடுக்க நினைக்காதீர்கள் எதையும்.
பி.கீதா, மாப்படுகை.
(பெங்களூரு கம்மனஹள்ளி மெயின்ரோட்டில் உள்ள ஒரு சலூன் கடையின் பெயர்)
HAIR SCULPTURE
கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு.
கேட்டது
(ஈரோடு - திருப்பூர் பாசஞ்சர் ரயில் ஓர் இடத்தில் நின்றபோது இருவர்)
""எதுக்கு வண்டி இவ்வளவு நேரமா நிக்குது?''
""அதுக்கு படுத்துக்க இடம் கிடைக்கலியாம். அதான் நிக்குது.''
மா.மாரிமுத்து, ஈரோடு.
(சென்னை மெüலிவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருவர்)
""ஏன்டா இவ்வளவு படிச்சிருக்கே... ஏழைக்கும் பணக்காரனுக்கும் என்ன வித்தியாசம்? சொல்லு பார்க்கலாம்''
""நம்மளை மாதிரி தெருத் தெருவா நாய் மாதிரி அலைஞ்சா ஏழை. அதோ கார்ல நாயை மடியில உட்கார வைச்சிக்கிட்டுப் போறாரே அவரை மாதிரி இருந்தா பணக்காரன்''
கு.கோப்பெருந்தேவி, சென்னை-125.
(சிதம்பரம் பிரமராயர் கோவிலில் இரு பெண்கள்)
""ஏன்டீ உன் ஆத்துக்காரர் ஒரு வாரமா பிரமை பிடிச்சது மாதிரி இருக்கார்?''
""அதை ஏன்டி கேக்கிற? அவர் புள்ள ஒரு டச் போனை புதுசா வாங்கி அனுப்பியிருக்கான். அதை யூஸ் பண்ணத் தெரியாம, தூக்கிக்கிட்டு அலைஞ்சுக்கிட்டு இருக்கார் மனுஷன்''
எஸ்.மேகலா, சிதம்பரம்.
மைக்ரோ கதை
""வீட்டில் உன் மனைவியை மோசமாகத் திட்டுவியாமே... மிகவும் மட்டமான வார்த்தைகளால் அவளை ஏசுவியாமே... உண்மையா?'' விசாரணைக் கூண்டில் இருக்கும் சின்னசாமியிடம் கேட்டார் நீதிபதி.
""சுத்தப் பொய்... சத்தியமா இல்லே யுவர் ஆனர். இது உண்மையிலேயே நடக்கிற காரியமா? அப்படியொரு சுதந்திரத்தை நமக்கு வெள்ளைக்காரன் கொடுத்துட்டுப் போகலையே... நீங்கள் பொண்டாட்டி புள்ளைங்கன்னு குடும்பத்தோடுதானே இருக்கீங்க... பொண்டாட்டியைத் திட்டிட்டு சுதந்திரமா உங்களால வீட்டுக்குள்ள விசிலடிச்சுட்டு உட்கார்ந்திருக்க முடியுமா? இது நடக்கிற காரியமா? நாம திட்டறதைக் காதுல வாங்கிட்டு அதுக சும்மா இருக்குமா? என் பொண்டாட்டி சொல்றது வடிகட்டின பொய் யுவர் ஆனர்... அதை நம்பாதீங்க'' என்றான் சின்னசாமி.
""கரெக்ட்... கரெக்ட்... நீ சொல்றது நூத்துக்கு நூறு உண்மைதான். உன் பொண்டாட்டி பொய்யா போட்ட இந்த வழக்கை டிஸ்மிஸ் செய்றேன்''
""ரொம்ப நன்றிங்க யுவர் ஆனர்''
""உனக்கென்ன ஈஸியா நன்றின்னு சொல்லிட்டுக் கிளம்பிட்ட. இந்த மாதிரி ஒரு தீர்ப்புக் கொடுத்ததுக்கு வீட்டுக்குப் போனா என் வொய்ஃப் எப்பிடித் திட்டப் போறாளோ?''
ஜி.வினோத், கிருஷ்ணாபுரம்.
உதிர்ந்த முத்து
கேட்டுத் தெளி
உழைத்துச் சாப்பிடு
கொடுக்கப் பழகு
செல்வ.மேகலா, திருவம்பநல்லூர்.
எஸ்.எம்.எஸ்.
நீ யோசிக்காமல் சொல்லும்
ஒவ்வொரு சொல்லும் உன்னை...
ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்.
மு.சுகாரா, தொண்டி.
அப்படீங்களஹா!
இதைத் தக்காளிச் செடி என்பதா? உருளைக் கிழங்குச் செடி என்பதா? இரண்டும் ஒரே செடியில் விளைகின்றன. ஏதோ இது தற்செயலாக விளைந்ததில்லை. விளைய வைத்தவர்கள் பிரிட்டனின் தாம்சன் அண்டு மார்கன் நிறுவனத்தினர். மரபணு மாற்றங்கள் எவற்றையும் செய்யாமல், இப்படி விளைய வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
என்.ஜே., சென்னை-69.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


