இணையத்தில் உலா வருபவர்களுக்கு பிரியங்கா, பூனம் இரட்டை சகோதரிகள் அறிமுகமாகியிருப்பார்கள். இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கும் நடன இரட்டையர்கள் இவர்கள். பரத நாட்டியத்தையும், ஹிப் ஹாப் நடனத்தையும் இணைத்து இவர்கள் ஆடும் நடனத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அமெரிக்காவில் இருந்து "தஞ்சாரா' விளம்பரப் படத்தில் நடிப்பதற்காக வந்திருந்தவர்களைச் சந்தித்தோம்:
"நாங்கள் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தோம். எங்களது சொந்த ஊர் குஜராத். அப்பா அம்மா இந்தியர்கள். அமெரிக்காவில் பிறந்து மேற்கத்திய கலாசாரத்தில் ஊறிப் போயிருந்தாலும், இந்தியக் கலாசாரம் மீது மாறாத நம்பிக்கை எங்களுக்கு உண்டு. எங்களது கலாசாரத்தின் வேர்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்தின் முதல் படியாக 9 ஆவது வயதில் பரதநாட்டிய வகுப்பில் சேர்ந்தோம். 18 வயது வரைக்கும் பரத நாட்டியத்தை முழு மூச்சாகக் கற்றோம்.
கல்லூரியில் படிக்கின்ற நாட்களில் ஹிப் ஹாப் நடனத்தை முறைப்படிக் கற்றுக் கொண்டோம். ஒருநாள் பரத நாட்டியத்தையும் ஹிப் ஹாப் இசையையும் இணைத்து ஒரு புதுவகையான நடனத்தை உருவாக்கினால் எப்படி இருக்கும் என எண்ணம் எழுந்தது. எங்களது முயற்சியின் பயனாக புதுவகையான நடனமொன்று பிறந்தது. அதை 35 விநாடிகள் வீடியோவாக முகப் புத்தகத்தில் பதிவேற்றினோம். அது வைரல் ஹிட்டாகியது. 2- 3 நாட்களுக்குள் 50 லட்சம் பேர் பார்வையிட்டால் அதை அமெரிக்காவில் வைரல் ஹிட் என்பார்கள். எமது வீடியோ பல்வேறு தளங்களில் பகிரப்பட்டு பல கோடி பேர்களால் பார்க்கப்பட்டது.
ஒரே பாடலில் வாழ்க்கையே மாறும் காட்சிகளை இந்திய சினிமாக்களில் பார்த்துள்ளோம். அதேபோல எங்களது வாழ்க்கையும் அந்த 35 விநாடிகளில் மாறியது. அதுவரை கல்லூரி மாணவிகளாக இருந்த நாங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பிரபலங்களாகிவிட்டோம். அதற்குப் பின்பு வாழ்க்கையில் நடந்தது எல்லாமே கனவு போல உள்ளது. சிகாக்கோவில் இருந்து சென்னைக்கு வந்து விளம்பரப் படத்தில் நடிப்பேன் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
வழக்கமாக விளம்பரத்திற்காக பிரபலமான நடிக நடிகைகளைப் பயன்படுத்துவதுதானே வழக்கம்? இவர்களை ஃபில்டர் காபி விளம்பரங்களில் நடிக்க வைத்தது ஏனென்று தஞ்சாரா நிறுவனத்தின் நிறுவனர் ரவிச்சந்திரன் சேதுராவோவிடம் கேட்டோம்.
""எல்லாக் காபி விளம்பரங்களிலும் நடிகர்கள்தானே வருகிறார்கள்? அதனாலேயே கொஞ்சம் மாற்றி யோசித்தோம். இயக்குநர் கமல் சேதுதான் இந்தப் பெண்களின் புதுமையான நடனத்தை எனக்குக் காட்டினார். பார்த்தவுடனேயே இவர்களை எமது நிறுவனத்தின் ஃபில்டர் காபி விளம்பரத்தில் நடிக்க வைப்பது என முடிவு செய்தேன்'' என்றார் ரவிச்சந்திரன் சேதுராவோ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பழ. கருப்பையா பிரசாரம்

கள் விற்பனையை திறந்து, டாஸ்மாக்கை மூடுவோம்: சீமான்

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு காங்கிரஸ் விமா்சனம்

திருமயம் அருகே இளைஞா் கொலை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


