* "பட்டாசுக்கடைக்காரரே...
ஏன் கோபமாக பேசுறீங்க?''
"போன வருடம் வாங்கிட்டுப் போன வெடி வெடிக்கலேன்னு இப்ப வந்து
புதுவெடி கேட்கிறார்''
கு.இரத்தினம், ஆண்டிபட்டி.
* "தினம் தினம் வாஷிங் மிஷினோடு
போராட வேண்டியிருக்கு''
"என்ன இருந்தாலும் உன் புருசனை
நீ வாஷிங்மிஷின்னு பட்டப் பெயர் வச்சு பேசக் கூடாது''
கு.அருணாசலம், தென்காசி.
* "டாக்டர் நீங்க கொடுத்த தூக்க மாத்திரையைப் பாதிதான் சாப்பிட்டேன்''
"அப்ப கொட்டாவி மாத்திரம் தான் வரும்''
டி.மோகனதாஸ், நாகர்கோவில்.
* "தலைவர் ஆசைக்கு ஒண்ணு... ஆஸ்திக்கு ஒண்ணுன்னு ரெண்டோட நிறுத்திக்கிட்டார்''
"அவருக்கு 1 பெண்ணும், 1 பையனும் தானா?''
"அது இல்லே... ஒரு சின்ன வீடும்,
ஒரு மனைவியும்தான்னு சொன்னேன்''
வி.ரேவதி, தஞ்சை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






