கண்டது
(கோவை தடாகம் ரோடு இடையார்
பாளையத்திலுள்ள ஓர் உணவகத்தின் பெயர்)
அ.ஆ. உணவகம்
டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.
(நெல்லை மாவட்டம் பணகுடியில்
ஒரு கடையின் பெயர்)
அன்பே வா ஸ்டோர்
எஸ்.வளர்மதி, கொட்டாரம்.
(மன்னார்குடி பந்தலடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தின் பின்புறத்தில்)
என்னைக் கெட்டவன்னு சொல்ல...
இங்கே எவன்டா நல்லவன்?
எச்.மோகன், மன்னார்குடி.
கேட்டது
(காரைக்காலில் ஒரு திருமண மண்டப வாயிலில் கணவனும், மனைவியும்)
"ஏங்க தாம்பூலப் பை கொடுக்கிற இடத்துல ஆம்பளைக்கு ஒரு இடத்திலும் பொம்பளைங்களுக்கு ஒரு இடத்திலுமின்னு தனித்தனியா கொடுத்தாங்களே... ஏன்?''
"பொம்பளைங்க பையிலே பூ, பழம், வெத்திலை பாக்கும், ஆம்பளைங்க பையிலே சிகரெட் பாக்கெட், பீடான்னு போட்டிருப்பாங்கன்னுதானே நினைக்கிறே? அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. ஆம்பளைங்க பையிலே ஒரு எலுமிச்சம்பழம் எக்ஸ்ட்ராவா போட்டிருக்காங்க''
"எதுக்குத் தலைக்குத் தேய்ச்சுக் குளிக்கவா?''
சாந்தி, திருவாரூர்.
(அரக்கோணம் பேருந்து ஒன்றில் ஓயாமல்
பேசிக் கொண்டே வரும் நடத்துநருக்கும்
பள்ளி மாணவிக்கும் நடந்த உரையாடல்)
நடத்துநர்: பேசாமத்தான் வாயேன். நீ பேசுற பேச்சில் என் காதே ஓட்டையாயிடுச்சு''
மாணவி: அப்படியா... கவலைப்படாதீங்க. நாளைக்கி வரும்போது ஒரு கம்மல் கொண்டு வர்றேன். ஓட்டையிலே மாட்டிக்கங்க.
வி.கண்ணகி செயவேலன், அரக்கோணம்.
எஸ்எம்எஸ்
ஏமாற்றத்திற்கான ஒரே காரணம்,
எதிர்பார்ப்பு மட்டுமே.
ப.சரவணன், ஸ்ரீரங்கம்.
யோசிக்கிறாங்கப்பா!
சைக்கிள் ஓட்ட கஷ்டமா இருக்குன்னு பைக் வாங்கி, பைக்கை விட கார் செளகர்யமா இருக்குன்னு கார் வாங்கி, அதனாலே தொப்பையை வாங்கி, இப்ப அதைக்குறைக்க ஜிம்முக்குப் போனா... அங்கே ஓடாத சைக்கிளை ஓட்டச் சொல்றாங்க.
க.அருச்சுனன், செங்கல்பட்டு.
அப்படீங்களா!
துணி துவைப்பதே முதலில் கஷ்டமாக இருந்தது. வாஷிங் மெஷின் வந்த பிறகு, அது எளிதாகிவிட்டது. வாஷிங் மெஷினில் துவைத்த துணிகளைக் காய வைத்த பிறகு, அதை ஒவ்வொன்றாய் மடித்து வைப்பது இருக்கிறதே... அது இப்போது மிகவும் சிரமம். துவைத்த துணிகள் மொத்தமாக ஓரிடத்தில் குவிந்திருக்க, ஒவ்வொருநாளும் ஓடி விடுகிறது. அதற்கு நேரமில்லாதது ஒரு காரணம். பொறுமையில்லாதது இன்னொரு காரணம்.
துவைத்த துணிகளை மடித்து வைக்க ஒரு கருவி இப்போது வந்திருக்கிறது. FOLDIMATE என்று அழைக்கப்படும் அந்த ரோபாட் நிமிடத்துக்கு அதிகபட்சம் பத்து ஆடைகளை மடித்துத் தந்துவிடுகிறது. 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் ஆடைகளிலிருந்து அனைவரின் ஆடைகளையும் -அது சட்டையாக, பேண்ட்டாக, பிளவுஸாக, நைட்டியாக எதுவாக இருந்தாலும் -உடனே மடித்துக் கொடுத்துவிடுகிறது. சிறுகுழந்தைகளின் ஆடைகளை மட்டும்தான் அதற்கு மடிக்கத் தெரியாது.
பெட் ஷீட் போன்ற பெரிய துணிகளை அது எளிதாக மடித்துக் கொடுத்துவிடுகிறது. வரும் ஆண்டில் அது உலகில் எல்லா நாடுகளிலும் கிடைக்கும் என்று அதன் தயாரிப்பாளர்கள் சொல்கிறார்கள். விலை? கிட்டத்தட்ட ரூ.72 ஆயிரம்.
- என்.ஜே., சென்னை}116.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனா - பாகிஸ்தான் அச்சுறுத்தல்: கடற்படைத் திறன்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன -தலைமைத் தளபதி திரிபாதி

தொழில்நுட்பக் கோளாறு: பல மையங்களில் தாமதமான ‘க்யூட்’ தோ்வு

ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமிக்கு விலைமதிப்பற்ற ஆபரணங்கள்

மிகப் பெரிய தாக்குதலுக்குத் தயாராகும் ரஷியா
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


