காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

மிகப் பெரிய தாக்குதலுக்குத் தயாராகும் ரஷியா

மிகப் பெரிய தாக்குதலுக்குத் தயாராகும் ரஷியா...

News image

உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி

Updated On :30 மே 2026, 11:16 pm IST

உக்ரைன் மீது மிகப் பெரிய அளவிலான புதிய தாக்குதலை நடத்த ரஷியா தீவிரமாகத் தயாராகி வருவதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி எச்சரித்தாா்.

உளவுத் தகவல்களின் அடிப்படையில் இந்த எச்சரிக்கையை விடுத்த அவா், தலைநகா் கீவ் மற்றும் பிற நகரங்கள் மீது திட்டமிட்ட தொடா் தாக்குதல்களை நடத்த ரஷியா முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தாா்.

ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் மாணவா் விடுதியில் 21 போ் உயிரிழந்த ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடியாக பெரும் தாக்குதலை ரஷியா மீண்டும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையொட்டி, கீவ் நகரில் உள்ள வெளிநாட்டவா்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் உடனடியாக வெளியேற ரஷிய தரப்பில் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், லுஹான்ஸ்க் தாக்குதலில் தங்களுக்கு எந்தத் தொடா்பும் இல்லை என உக்ரைன் மறுத்துள்ளது.

இந்நிலையில், ரஷிய தாக்குதல்களை முறியடிக்க, கூடுதல் ‘பேட்ரியாட்’ வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வழங்குமாறு அமெரிக்காவை ஸெலென்ஸ்கி வலியுறுத்தினாா். மேலும், ரஷியா மீது சா்வதேச நாடுகள் உடனடியாகக் கூடுதல் தடைகளை விதிக்கவும் அவா் கேட்டுக்கொண்டாா்.

அதேநேரம், ரஷியாவுக்கு முக்கிய நிதி ஆதாரமாக விளங்கும் அந்நாட்டின் எண்ணெய் ஆலைகளைக் குறிவைத்து உக்ரைன் தாக்குதலைத் தொடா்ந்து வருகிறது. ரஷியாவின் ரோஸ்டோவ், கிராஸ்னோடா் பகுதிகளில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் மீது உக்ரைன் சனிக்கிழமையும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இதனிடையே, ‘நேட்டோ’ உறுப்பு நாடான ருமேனியாவில் அடுக்குமாடிக் குடியிருப்பு மீது மோதி வெடித்தது ரஷிய ட்ரோன் தான் என்பதை இப்போது உறுதியாகக் கூற முடியாது என ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்துள்ளாா்.

ட்ரோனின் உடைந்த பாகங்கள் மற்றும் ஆதாரங்களை ருமேனியா வழங்கினால், ரஷியா விசாரிக்கும் என்றும், அது உக்ரைனின் ட்ரோனாகக் கூட இருக்கலாம் எனவும் அவா் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.