மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு அருகில் தெற்கு ரயில்வே காலனியில் மதுரை (கல்லூரி) மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பழமையான இந்தப் பள்ளியில் புதுமை ஒன்று சமீபத்தில் அரங்கேறியுள்ளது. அந்தப் புதுமை மழலையர்களுக்கு குதூகலம், உற்சாகம் தரும் வகையில் அமைந்துள்ளது.
ஆம்... மழலையர் வகுப்பு அறைகள் ரயில் பெட்டி போன்று வடிவமைக்கப்பட்டுள்ளன.
பள்ளியின் அருகில் உண்மையான ரயில் பாதையும் உள்ளது. அதில் ரயில் வண்டி "கூ.. கூ' என்று ஒலியெழுப்பிக் கொண்டு போகும்... வரும்.
ரயில் சத்தம் குழந்தைகளின் காதில் விழுந்ததும் ஆர்வத்தில் சிலர் ரயில் போவதைப் பார்க்க எட்டிப் பார்ப்பார்கள்.
அவர்களின் ஏமாற்றத்தைத் தவிர்க்க வகுப்பறைகளை ரயில் பெட்டி போல் வடிவமைத்திருக்கிறார்கள்.
ஜன்னல், வாசல் அனைத்தும் ரயில் பெட்டியில் எப்படி இருக்குமோ அப்படியே அமைத்திருக்கிறார்கள்.
ரயில் இன்ஜினையும் வரைந்து வைத்திருக்கிறார்கள். ரயில் பெட்டியின் நிறத்தையும் நீலம், வெளிர் நீலத்தில் பூசியிருக்கிறார்கள். சட்டென்று பார்த்தால் பள்ளி வளாகத்தில் ரயில் வண்டி நிற்பது போலத் தோன்றும்.
மழலை வகுப்பில் படிக்கும் குழந்தைகள் வகுப்பு நேரத்தில் வெளியே யாராவது அந்தப் பக்கம் சென்றால், கை அசைத்து "டா டா' காண்பிக்கிறார்கள். இந்த "ரயில் வகுப்பு' குழந்தைகளுக்குப் மிகவும் பிடித்திருப்பதால் வீட்டிலிருந்து பள்ளிக்குக் கிளம்ப யாரும் முரண்டு பிடிப்பதில்லையாம்!
அதனால் இந்த "ரயில்' வகுப்பு மழலைகளின் பெற்றோருக்கும் பிடித்துப் போய்விட்டது. இந்தப் பள்ளியில் இதர வகுப்புகளில் சுமார் மூவாயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK

மறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை! இபிஎஸ் விளக்கம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


