சாவிக்குப் பதிலாக  விரல் ரேகை!

ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.
சாவிக்குப் பதிலாக  விரல் ரேகை!


ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ளது பென்ஜிலாக் என்ற நிறுவனம். இது ஒரு வித்தியாசமான பூட்டைத் தயாரித்து உள்ளது. பெயர்: பென்ஜிலாக் டிஎஸ்ஏ ஃபிங்கர்பிரிண்ட் பேட் லாக்.

பயணம் செய்யும் போது நாம் பயன்படுத்தும் ட்ராவல் பேக்கில் பயன்படுத்தக் கூடிய இந்தப் பூட்டைத் திறக்க சாவி தேவையில்லை. உங்களுடைய விரல் ரேகைதான் இந்தப் பூட்டுக்குச் சாவி.

அப்படியானால் ஒரே ஒருவர் மட்டுமேதான் இந்தப் பூட்டைப் பயன்படுத்த முடியுமா? என்ற ஐயம் ஏற்படக் கூடும். இந்தப் பூட்டில் ஐந்து நபர்களின் கை ரேகைகளைப் பதிவு செய்து கொள்ள முடியும்.

ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்த இப்போது விரல் ரேகை பயன்படுத்தப்படுவதைப் போல இந்தப் பூட்டின் ஓர் இடத்தில் விரலை வைத்தால் போதும். விரலை வைக்கும் போது எல்இடி விளக்கு வெளிச்சம் தோன்றும்.

இந்தப் பூட்டை விமானப் பயணங்களின் போது பயன்படுத்தும் ட்ராவல் பேக்குகளில் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

கடினமான ஸ்டீலால் செய்யப்பட்டுள்ள இந்தப் பூட்டில் லித்தியம் அயர்ன் பேட்டரி உள்ளது. இதை ரீ சார்ஜ் செய்து கொள்ள முடியும். 6 செ.மீ. நீளமுள்ள யுஎஸ்பி கேபிளைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். பூட்டின் மேற்பூச்சாக குரோமியம் பூசப்பட்டுள்ளது.

ஐந்து நபர்களின் விரல் ரேகையைப் பதிவு செய்து கொண்டு பூட்டைத் திறக்கலாம்; பூட்டலாம் என்றால் வேறு யாராவது விரல் ரேகையைப் பதிவு செய்ய முடியாதா? என்று கேட்கத் தோன்றும். அப்படி எல்லாம் எளிதாகப் பதிவு செய்துவிட முடியாது. இந்த பூட்டில் உள்ள கீ பேடில் முதலில் பூட்டை உயிர்ப்பிப்பதற்கான ரகசிய குறியீட்டு எண்ணைப் பதிய வேண்டும். அப்போதுதான் இந்தப் பூட்டைப் பயன்படுத்தும் விரல் ரேகையைப் பதிவு செய்ய முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com