திரைக்கதிர்
மீண்டும் இணைகிறது விக்ரம் - ஹரி கூட்டணி. "சாமி' படத்தின் பிரம்மாண்ட வெற்றியைப் போல் மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் கூட்டணி இணைகிறது.

மீண்டும் இணைகிறது விக்ரம் - ஹரி கூட்டணி. "சாமி' படத்தின் பிரம்மாண்ட வெற்றியைப் போல் மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் கூட்டணி இணைகிறது. குறுகிய காலத்தில் தயாராக உள்ள இப்படம் அதிரடி, ஆக்ஷன் நிறைந்த கமர்ஷியல் படமாக உருவாகப் போகிறது. இதில் கதாநாயகியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------
கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் "ரங்கு தே' என்ற படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் அட்லூரி இயக்கி வரும்இந்தப் படத்தின் கதாநாயகன் நிதின். இதன் படப்பிடிப்பு துபையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இயக்குநரை கீர்த்தி குடையால் துரத்தி அடிக்கும் விடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------
"தில்லாலங்கடி', "சூது கவ்வும்', "பீட்சா 2', "எங்கிட்ட மோதாதே' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சஞ்சிதா ஷெட்டி. திருவண்ணாமலை தீப தரிசனத்திற்காக மலை மீது ஏறி மகா தீபத்தை வழிபட்ட அனுபவத்தைப் புகைப்படம் மற்றும் விடியோவுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------
முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிக்கும் படத்துக்கு "புலிக்குத்தி பாண்டியன்' என பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான "நாங்க ரொம்ப பிசி' படத்தைப் போன்று, இப்படமும் நேரடியாக டி.வி.யில் வெளியாகவுள்ளது. வரும் பொங்கலன்று படம் வெளியிடப்படுகிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
""நமது விவசாயிகள், இந்தியாவின் உணவு வீரர்கள். அவர்களின் அச்சங்களைத் தீர்க்க வேண்டும். அவர்களின் நம்பிக்கையைப் பூர்த்தி செய்ய வேண்டும். வளர்ந்து வரும் ஜனநாயக நாடு என்ற வகையில் விவசாயிகளுக்கான நெருக்கடிகள் விரைவில் தீர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்'' என்று தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு
சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் நடைபெறவுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...